Tuesday, May 10, 2011

ஹிரோஷி கவாசாகி ( 1930 - 2004) கவிதைகள்










ஹிரோஷி கவாசாகி ( 1930 - 2004)  கவிதைகள்
தமிழில் : ரவிக்குமார்

1.

சொற்கள் சொற்களுக்குள்
விழைகின்றன
சொற்களாய் பிறக்ககூடாதென.
மாறாக
நெடிதுயர்ந்த மதில் சுவராய்ப்
பிறக்கவேண்டும்
பிறகு
பெருமூச்செறிகின்றன
அது சொல்லாக வெளிப்படவில்லை.

2.

அந்தப் பறவை
சிறகை அடித்துக்கொண்டு
எழும்புவதற்கு முன்பே
வானம் பறக்கிறது
அந்தப் பறவை
அலகைத் திறந்து
பாடுவதற்கு முன்பே
உலகம் பாடத் தொடங்கிவிடுகிறது
அதுதான் பறவை

3.

அந்த அறை
பட்டு போன்ற இருளால்
நிரப்பப்பட்டிருந்தது
கருணைமிக்க கரமொன்று
உள்ளிருந்து
கவனமாக அதைத் தாளிட்டுக்கொண்டது

இருள் அவ்வளவு இருள்
ஒரு புயலுக்காக
அறை காத்திருந்தது

இடி மின்னல்
இடையே சிறு தருணம்
அந்த அறை சற்றே
வெளிச்சம்பெறும்


1 comment:

  1. குறியீடுகளுக்கூடாக ஜப்பானின் அவலத்தினைக் கவிதை சொல்லி நிற்கிறது.

    ReplyDelete