Friday, June 8, 2012

NCERT 12 ஆம் வகுப்புப் பாடப் புத்தகத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைக் கொச்சைப் படுத்தும் கேலிச்சித்திரம்

வணக்கம் 
இத்துடன் இருக்கும் கார்ட்டூன் NCERT தயாரித்த பன்னிரெண்டாம் வகுப்புக்கான பொலிடிக்கல் சயன்ஸ் பாடப் புத்தகத்தில் ( Politics in India since Independence) பக்கம் 153 இல் இடம்பெற்றுள்ளது. இந்த கேலிச் சித்திரம் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களையும், இளைஞர்களையும் எந்த அளவுக்கு இழிவுபடுத்துகிறது என்பதை விளக்கத் தேவையில்லை. அதுமட்டுமின்றி இந்தித் திணிப்பில் ராஜாஜி பக்தவத்சலம் ஆகியோரின் பங்கையும் இது மூடிமறைக்கிறது.

இத்துடன் எழுதப்பட்டிருக்கும் பாடத்தில் திராவிட இயக்கம் குறித்தும் தமிழகத்தில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டம் குறித்தும்  சொல்லப்பட்டிருக்கிறது. மிகவும் மேம்போக்காகவும் திராவிட இயக்கத்தின் வரலாற்றுத் தொனமையை மறுப்பதாகவும் இந்தப் பாடம் அமைந்திருக்கிறது. அந்தப்  பகுதி இங்கே :

Dravidian movement

‘Vadakku Vaazhkirathu; Therkku Thaeikirathu’[The north thrives even as the south decays].This popular slogan sums up the dominant sentiments of one of India’s most effective regional movements, the Dravidian movement ,at one point of time. This was one of the first regional movements in Indian politics. Though some sections of this movement had ambitions of creating a Dravid nation, the movement did not take to arms. It used democratic means like public debates and the electoral platform to achieve its ends. This strategy paid off as the movement acquired political power in the State and also became influential at the national level The Dravidian movement led to the formation of Dravida Kazhagam [DK] under the leadership of Tamil social reformer E.V. Ramasami‘Periyar’. The organisation strongly opposed the Brahmins’ dominance and affirmed regional pride against the political, economic and cultural domination of the North. Initially ,the Dravidian movement spoke in terms of the whole of south India; however lack of support from other States limited the movement to Tamil nadu The DK split and the political legacy of the movement was transferred to Dravida Munnetra Kazhagam(DMK). The DMK made its entry into politics with a three pronged agitation in 1953-54.

First, it demanded the restoration of the original name of Kallakudi railway station which had been renamed Dalmiapuram,after an industrial house from the North. This demand brought out its opposition to the North Indian economic and cultural symbols. 

The second agitation was for giving Tamil cultural history greater importance in school curricula. 

The third agitation was against the craft education scheme of the State government, which it alleged was linked to the Brahmanical social outlook. It also agitated against making Hindi the country’s official language. The success of the anti-Hindi agitation of 1965 added to the DMK’s popularity.

Sustained political agitations brought the DMK to power in the Assembly elections of 1967. Since then, the Dravidian parties have dominated the politics of Tamil Nadu. Though the DMK split after the death of its leader, C. Annadurai, the influence of Dravidian parties in Tamil politics actually increased. After the split there were two parties – the DMK and the All India Anna DMK (AIADMK) – that claimed Dravidian legacy. Both these parties have dominated politics in Tamil Nadu for the last four decades. Since 1996, one of these parties has been a part of the ruling coalition at the Centre.

In the 1990s, many other Dravidian parties have emerged. These include Marumalarchchi Dravida Munnetra Kazhagam (MDMK), Pattali Makkal Katchi (PMK) and Desiya Murpokku Dravida Kazhagam (DMDK). All these parties have kept alive the issue of regional pride in the politics of Tamil Nadu. Initially seen as a threat to Indian nationalism, regional politics in Tamil Nadu is a good example of the compatibility of regionalism and nationalism.

இந்தப் பாடம் திருத்தி எழுதப்படவேண்டாமா ? இந்த கேலிச் சித்திரம் அகற்றப்பட வேண்டாமா? என்பதை நீங்களே முடிவுசெய்யுங்கள்.  

7 comments:

 1. அன்புள்ள இரவிக்குமார்,

  பகிர்வுக்கு மிக்க நன்றி!
  இவற்றை எல்லாம் பொறுப்பாகவும், வலுவாகவும்,, விடாதும் எதிர்க்க வேண்டும்.
  மடல்கள் எழுத வேண்டும். ஏன் தமிழகத்தின் முன்னாள் இந்நாள் நாடாளுமன்ற, சட்ட மன்ற
  உறுப்பினர்களும் தலைவர்களும் ஏதும் செய்யாது இருக்கின்றனர்!

  அரசின் பாட நூல்களிலேயே இவ்வகையான திருகுவேலைகள் நடந்தால் எப்படி?!!
  தமிழகத்தின் ஒருமித்த எதிர்ப்பு அதிர வைக்க வேன்டாமா? இதனை நுழைத்த்து யார்
  ஏன் என்றெல்லாமும் துருவி வெளிக்கொணர வேண்டும்!!

  அன்புடன்
  செல்வா

  ReplyDelete
 2. This comment has been removed by the author.

  ReplyDelete
 3. திரு ரவிக்குமார் அவர்களுக்கு,

  பாட புத்தகத்தின் வரிகளில் , எனக்கு எந்த அவதூறும் புறக்கணிப்பும் தெரியவில்லை.
  கருத்தின் ஆழம் பெரிய அளவில் இல்லை என்று வேண்டுமானாலும் சொல்லலாம்.

  ஆனால் கேலிச் சித்திரம் , மொழிப் போர் வீரர்களை மிகவும் தரக் குறைவாக சித்தரிப்பதாக உணர்கிறேன்.

  இணையத் தமிழன்.
  http://inaya-tamilan.blogspot.com

  ReplyDelete
 4. Dear Ravi,

  The cartoon is certainly insulting but where the lesson is concerned I think it is meant for a class of students who are being introduced to Tamil Nadu politics in a very brief way. They do have limitation with regard to the number of words. The text is not detailed but it is not perfunctory. It states facts in a way it will be easy for the students to understand and remember. They could have written a little more about Periyar but considering we knew nothing about Mahatma Phule or Veeresalingam Pantulu when we were students in the fifties, this is a good attempt. Only the choice of cartoon is unfortunate.

  Ambai

  ReplyDelete
 5. அன்பு அம்பை
  பாடம் மிகவும் மேம்போக்காக எழுதப்பட்டிருப்பதாகவே நான் குறிப்பிட்டிருக்கிறேன். மற்ற பாடங்களை ஒப்பிட்டுப் பார்த்தால் இது எவ்வளவு மேம்போக்காக இருக்கிறது என்பதை உணரலாம். இந்த கேலிச் சித்திரம் குறித்த உங்கள் கருத்துகளை நீங்கள் தோரட் கமிட்டிக்கு எழுதினால் நல்லது. நாம் ஒரு கடிதத்தை எழுதி அவருக்கு மின்னஞ்சலில் அனுப்பலாமா ?
  ரவிக்குமார்

  ReplyDelete
 6. உங்களுக்கும் வைகோவிற்கும் பாராட்டுகள்.
  அந்தப் படத்தில், "Student Agitation" என்று எழுதப்பட்டிருக்கும் வாசகத்திற்குப்பதில்
  "Indian Arrogance" என்று இட்டிருந்தால், இந்தி-யர்களின் கொடூரத்தைக் காட்டும் உண்மையான பொருத்தமான ஒன்றாக இருந்திருக்கும்.

  அன்புடன்
  நாக.இளங்கோவன்

  ReplyDelete
 7. பாடநூல்கள் பிரச்சார நூல்களாக இருக்கக்கூடாது.எனவே அவை ஒரு இயக்கத்தை ஆதரித்தோ/எதிர்த்தோ கருத்து திணிப்பு செய்யக்கூடாது.
  அந்தக் கார்ட்டூன் தவறு அல்ல.மாணவர் போராட்டம் வன்முறை போராட்டமாக மாறியாது என்பது உண்மைதானே.பெரியார் அதைக் கண்டித்ததும் உண்மைதானே.

  ReplyDelete