Tuesday, April 22, 2014

பிரச்சாரம் முடிவுக்கு வந்துவிட்டது

இன்று மாலை ஆறு மணியுடன் பிரச்சாரம் முடிவுக்கு வந்துவிட்டது. நான் மதியம் இரண்டு மணியோடு திருவேற்காட்டில் பிரச்சாரத்தை முடித்துவிட்டேன். ( ஊத்துக்கோட்டையில் திட்டமிட்டிருந்த பிரச்சாரத்துக்கு காவல்துறை அனுமதி கிடைக்கவில்லை). 


நாளொன்றுக்கு 14 மணி நேரம் தோலைத் தாண்டி எலும்பில் சுட்ட வெயிலில் இனி நிற்கவேண்டாம். என் குதிகால்களில் இருக்கும் கொப்புளத்துக்கு சிகிச்சை செய்துகொள்ளலாம். இனி பட்டாசுகளின் புகையில் மூச்சுத் திணற வேண்டாம். 45 நாட்கள் இருந்த மன அழுத்தம் குறைந்து சற்றே நிம்மதி உண்டானது. 


யாருக்கு வாக்களிப்பது என்பதை வாக்காளர்கள் முடிவு செய்திருப்பார்கள். அதை 24 ஆம் தேதி அவர்கள் தெரிவிக்கப்போகிறார்கள். அது மே 16 ஆம் தேதி தெரியப்போகிறது. வாக்குப்பதிவு நாள்வரை விழிப்போடு இருக்கவேண்டும். அதன்பின் ஓயாமல் என்னை அழைத்துக்கொண்டிருக்கும் புத்தகங்களோடு மனம்விட்டுப் பேசலாம்!

1 comment:

  1. நேரம் இருப்பின் எனது கட்டுரையை வாசிக்கவும்.
    தேர்தல் தொடர்பாக எழுதியது!.

    தமிழகத்திலிருந்து யாரை (எல்லாம்) தேர்ந்தெடுப்பது.....? http://tamilanveethi.blogspot.in/2014/04/blog-post_23.html

    ReplyDelete