Sunday, March 15, 2015

ஈழப் போராட்ட முன்னோடி கி.பி.அரவிந்தன்( 1953-2015) மறைந்தார்





ஈழப் போராட்டத்தின் முன்னோடிகளில் ஒருவரும் கவிஞருமான கி.பி.அரவிந்தன் இன்று காலமான செய்தி அறிந்து அதிர்ச்சியுற்றேன். 1972 முதல் ஈழப் போராட்டக் களத்தில் முன்னின்றவர். அவர் நடத்திவந்த புதினப்பலகை இணையதளம் அவரது ஆழ்ந்த அரசியலறிவுக்கும், பொறுப்புணர்வுக்கும் சான்று பகரும். அதிலிருந்து பல கட்டுரைகளை அவரது அனுமதிபெற்று மணற்கேணியில் வெளியிட்டிருக்கிறேன். நானும் அந்த இணையதளத்துக்கு பங்களிப்புச் செய்திருக்கிறேன். ஈழப் போராட்ட களத்தில் எஞ்சியிருந்த ஒருசில சிந்தனையாளர்களில் கி.பி.அரவிந்தன் ஒருவர். 

இன்று ஈழத் தமிழினத்தின் முதன்மையான பிரச்சனைகளில் ஒன்று காழ்ப்புணர்வில்லாத சிந்தனையாளர்களின் பற்றாக்குறை. ஜனநாயக மறுப்பும் முள்ளிவாய்க்கால் யுத்தமும் பலரைக் காவுகொண்டுவிட்டன. முன்பே புலம்பெயர்ந்ததால் கி.பி.அரவிந்தன் தப்பித்தார் என நினைத்திருந்தேன். போர்ச்சூழலில் தப்பியவரைப் புற்றுநோய் காவுகொண்டுவிட்டது. 

அவரை இழந்து தவிக்கும் அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். 

- ரவிக்குமார்

No comments:

Post a Comment