Sunday, April 17, 2016

ஞாநி மறுத்த வாய்ப்பு



தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருந்த நேரம். சென்னை தி நகர் தொகுதியை விசிகவுக்கு எடுக்கலாமா என்று தலைவர் கேட்டார். அதை எடுத்து ஒரு பொது வேட்பாளரை நிறுத்தலாம் என்று அவர் விரும்பினார். இரவு பேசிக்கொண்டிருந்தபோது பலரது பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. ஞாநி ஒப்புக்கொண்டால் அவரை நிறுத்தலாம் என முடிவாயிற்று. 

மறுநாள் காலை தலைவரின் விருப்பத்தை ஞாநியிடம் தெரிவித்தேன். " போட்டியிடுவதில் எனக்குக் கருத்து வேறுபாடு இல்லை. ஆனால் எனது உடல்நிலை தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு உகந்ததாக இல்லை" என அன்புடன் மறுத்துவிட்டார். " கல்கி இதழில் நான் எழுதியிருக்கும் கட்டுரையைப் படியுங்கள். இந்த அணிக்கு வாக்களிக்கவேண்டியதன் நியாயத்தை அதில் விளக்கியிருக்கிறேன்" என்றார். அதைத் தலைவரிடம் தெரிவித்தேன். ஞாநி ஒப்புக்கொள்ளாததால் தி நகரை எடுக்கும் யோசனையை தலைவர் கைவிட்டுவிட்டார். ஞாநிக்கு தேர்தல் பிரச்சாரம் செய்ய எனக்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது.  

உடல்நலத்துக்குப் பாதகமில்லாமல் ஞாநி செய்யக்கூடிய பணிகள் எத்தனையோ இருக்கின்றன. அவற்றை அவர் தொய்வின்றி செய்ய வாழ்த்துகிறேன். 



3 comments:

  1. ஒரு தகுதி வாய்ந்த வேட்பாளரை தெரிவு செய்ய நினைத்த அரசியல் தலைமையைப் பாராட்ட வேண்டும்! ஞாநி நலம் பெற்று பொதுவாழ்வில் முக்கிய பொறுப்பேற்க வேண்டும்.

    ReplyDelete
  2. ஒரு தகுதி வாய்ந்த வேட்பாளரை தெரிவு செய்ய நினைத்த அரசியல் தலைமையைப் பாராட்ட வேண்டும்! ஞாநி நலம் பெற்று பொதுவாழ்வில் முக்கிய பொறுப்பேற்க வேண்டும்.

    ReplyDelete