Wednesday, April 6, 2016

தரம்பாலின் சிந்தனைகள்



கூட்டணி பேச்சுவார்த்தைகளுக்கு இடையே சென்னை நந்தனத்தில் நடைபெற்ற Essential Writings of Dharampal நூல் வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றினேன். 

தரம்பால் ( 1922-2006) வரலாற்றறிஞராக, சிந்தனையாளராகக் கருதப்படுபவர். காந்தியால் ஈர்க்கப்பட்டு இந்திய சுதந்திர போராட்டத்தில் பங்கெடுத்தவர். இந்தியாவிலும், இங்கிலாந்திலும் ஆவணக் காப்பகங்களில் பல ஆண்டுகள் செலவிட்டு அரிய தகவல்களைத் திரட்டி நூல்கள் பலவற்றை எழுதியவர். 

தரம்பாலின் எழுத்துகளில் முக்கியமான சிலவற்றைத் தேர்ந்தெடுத்து அவரது மகளும் ஜெர்மன் நாட்டின் ஹெய்டல்பர்க் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத்துறை பேராசிரியராக இருப்பவருமான கீதா தரம்பால் நூலாக்கியிருக்கிறார். தரம்பாலின் சிந்தனைகளைப் புரிந்துகொள்வதற்கான பின்புலத்தை விளக்கி நல்லதொரு முன்னுரையையும் எழுதியிருக்கிறார். அவர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு நூலை அறிமுகப்படுத்தி உரையாற்றினார். 

இந்த நூலில் இடம் பெற்றிருக்கும் தரம்பாலின் Madras Panchayat System என்ற பகுதி குறித்து நான் பேசினேன். எனக்கு அடுத்ததாக தரம்பாலின் கல்விகுறித்த சிந்தனைகளைப் பற்றி பி.ஏ.கிருஷ்ணன் பேசினார். ஜி.எஸ்.ஆர்.கிருஷ்ணன் தலைமை வகித்தார். மேலும் சிலர் பேசுவதாக இருந்தது. அவற்றைக் கேட்பதற்கு நேரமில்லாததால் நான் வந்துவிட்டேன். 

இந்த நிகழ்வை ஒருங்கிணைத்து நடத்திய Centre for Indian Knowledge Systems அமைப்பின் A.V.Balasubramanian அவர்களைப் பாராட்டாமல் இருக்கமுடியாது. 

( எனது உரையை விரைவில் பதிவுசெய்கிறேன்)

No comments:

Post a Comment