பாராளுமன்றத் தாக்குதல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த அப்சல் குருவின் கருணை மனு குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டதையடுத்து அவர் இப்போது தூக்கிலிடப்பட்டிருக்கிறார். இந்த மரண தண்டனையை நிறைவேற்றியதன்மூலம் காங்கிரஸ் கட்சி பாஜக வின் பிரச்சார ஆயுதம் ஒன்றைப் பறித்துக்கொண்டுவிட்டது எனலாம்.
கஸாப்புக்குத் தூக்கு. பெண்கள் பாதுகாப்புக்கெனப் பிறப்பிக்கப்பட்டிருக்கும் அவசர சட்டத்தில் வர்மா கமிஷன் பரிந்துரைகளுக்கு மாறாக மரண தண்டனையைச் சேர்த்தது, இப்போது அப்சலுக்குத் தூக்கு - என தூக்கு தண்டனையை வைத்து காங்கிரஸ் அரசியல் செய்வதுபோல் தோன்றுகிறது. பாஜக வுக்கு ஆதரவாக இருக்கும் இந்து மத்தியதர வர்க்கத்தின் வாக்குகளைக் கவர்வதற்கான காங்கிரஸின் யுக்தி இதுவாக இருக்கலாம்.
பராளுமன்றத் தேர்தலை மனதில்கொண்டு காங்கிரஸ் எடுத்துவரும் நடவடிக்கைகள் அக்கட்சியை பாஜக வுக்கு அருகில் கொண்டுபோய்க்கொண்டிருக்கின்றன. காங்கிரஸ் கொடியில் இருக்கும் காவி நிறம் வளர்வதுபோல் தெரிகிறது.

No comments:
Post a Comment