இந்தியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கி 477 பேர் காத்திருப்பதாக மத்திய அரசு கடந்த டிசம்பர் மாதம் மாநிலங்கள் அவையில் தெரிவித்திருந்தது. அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனை இப்போது நிறைவேற்றப்பட்டிருப்பதால் மீதம் 476 பேர் மரண தண்டனையை எதிர்நோக்கிக் காத்திருக்கிறார்கள் எனக் கொள்ளலாம். இதனிடையே யாருக்கேனும் மரண தண்டனை புதிதாக விதிக்கப்பட்டதா எனத் தெரியவில்லை. இவர்களில் எத்தனைபேர் குற்றவாளிகள் எத்தனைபேர் நிரபராதிகள் என்பது அந்த நீதி தேவதைக்கே வெளிச்சம். அண்மைக்காலமாக இளைய சமுதாயம் எதற்கெடுத்தாலும் மரண தண்டனை கொடுக்கவேண்டும் எனப் பேசுவதைப் பார்க்கிறோம். ஏனிந்த கொல வெறி?
1947 முதல் டெல்லி திஹார் சிறையில் தூக்கிலிடப்பட்டவர்கள் விபரம்
வரிசை பெயர் தூக்கிலிடப்பட்ட தேதி
எண்
1. பச்சான் சிங், த/பெ. புத்சிங் 3.06.1958
2. பியாரேலால், க/பெ. முன்னாலால் 16.06.1959
3. ராம்கோபால், த/பெ. பகவான் சஹாய் 21.09.1959
4. நாராயணசிங், த/பெ. பச்சி சிங் 07.12.1960
5. முகமது ஷரீஃ, த/பெ. சோட்டீ 13.11.1961
6. ஹர்ணம்சிங், த/பெ. சுபா சிங் 19.06.1963
7. பகவான் சிங், த/பெ. கியான்சிங் 19.06.1963
8. சோஹன் சிங், த/பெ. சேகர் சிங் 31.03.1964
9. ராம்சிங், த/பெ. கன்ஹாய் ராம் 13.03.1964
10. ஸ்ரீசந்த், த/பெ. சுந்த்ரோ 26.10.1966
11. மன்சூர் அஹமது,
த/பெ. அல்டாஃப் ஹ§சைன் 26.10.1966
12. லோச்சன் பால், த/பெ. மெஹர் சந்த் 26.07.1967
13. ஜெய்சந்த், த/பெ. திக்ராம் 07.10.1974
14. உக்கம்சந்த், த/பெ. திக்ராம் 07.10.1974
15. அம்ரித் பூஷன்குப்தா,
த/பெ. ஷிங் தயாள் 18.01.1977
16. பக்சிஸ் சிங். த/பெ. நாராயண சிங் 01.12.1977
17. ஷிவ் மோகன், த/பெ. நந்த் சிங் 07.04.1977
18. ஜஸ்பீர் சிங் என்கிற பில்லா,
த/பெ. பக்ஷி சிங் 31.01.1982
19. குல்ஜீத்சிங் என்கிற ரங்கா,
த/பெ. ஹர்மீந்தர் சிங் 31.01.1982
20. கர்தார்சிங், த/பெ. சந்தா சிங் 09.10.1983
21. உஜ்கார் சிங், த/பெ. சந்தா சிங் 09.10.1983
22. முகமது மக்பூல்பட்,
த/பெ. குலாம் காதிர்பட் 11.02.1984
23. சத்வந்த்சிங், த/பெ. திரிலோக் சிங் 06.01.1989
24. கேஹர் சிங், த/பெ. ஆத்மா சிங் 06.01.1989
இதற்குப் பின் கசாப் கடந்த வருடம் தூக்கிலிடப்பட்டார். இப்போது அப்சல் குரு .
No comments:
Post a Comment