Tuesday, March 5, 2013

ஹ்யூகோ சாவேஸ் மரணமடைந்தார்


வெனிசுவேலா நாட்டின் அதிபர் ஹ்யூகோ சாவேஸ் ( 58) மரணமடைந்தார். புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் கடந்த 14 ஆண்டுகளாக அந்த நாட்டை ஆண்டுவந்தார். 

அமெரிக்காவுக்கு எண்ணை வழங்கும் நாடுகளில் முக்கியமானதாகத் திகழும் வெனிசுவேலாவில் சோஷலிசத்தின்மீது நம்பிக்கைகொண்ட சாவேஸின் ஆட்சி இருப்பதை அமெரிக்கா விரும்பவில்லை. 
தனது நாட்டில் மட்டுமின்றி லத்தீன் அமெரிக்க நாடுகள் அனைத்துக்கும் வழிகாட்டியாகத் திகழ்ந்த சாவேஸ், அமெரிக்காவின் ஆதிக்கத்தை வெளிப்படையாக எதிர்த்து வந்தார். 
உலகெங்குமிருக்கும் ஜனநாயக சக்திகளுக்கு மிகப்பெரும் நம்பிக்கையாகத் திகழ்ந்த சாவேஸின் மரணம் ஏற்படுத்தியிருக்கும் வெற்றிடம் இட்டு நிரப்ப முடியாதது. 

12 தேர்தல்களில் வெற்றிபெற்ற அவரை "
ஒரு வித்தியாசமான சர்வாதிகாரி " என எழுத்தாளர் எடுவர்டோ கலியானோ குறிப்பிட்டார். அது உண்மைதான். அவர் புரட்சியாளரா அல்லது சிலர் சொல்வதுபோல ஒரு சர்வாதிகாரியா என்பது இனி வெனிசுவேலா என்ன பாதையைத் தேர்ந்தெடுக்கப்போகிறது என்பதில் தெரிந்துவிடும். 

No comments:

Post a Comment