Tuesday, March 12, 2013

டெசோ முழு அடைப்பு



ஐ நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைப் போர்க்குற்றங்கள் தொடர்பாக சுயேச்சையான சர்வதேச விசாரணை நடத்திட இந்திய அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டுமென வலியுறுத்தி தமிழகந் தழுவிய பொதுவேலை நிறுத்தத்துக்கு டெசோ சார்பில் அழைப்புவிடுக்கப்பட்டிருந்தது. அதற்குத் தமிழகமெங்கும் நல்ல ஆதரவு காணப்பட்டது. பெரும்பாலான நகரங்களில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

சென்னையில் திரு மு க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற சாலை மறியலில் டெசோ உறுப்பினர்களான கி. வீரமணி, தொல்.திருமாவளவன், சுப வீரபாண்டியன் மற்றும் கே எஸ் ராதாகிருஷ்ணன், ரவிக்குமார் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கைதாயினர்.
தமிழகமெங்கும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் மாலை ஐந்து மணிக்கு விடுதலை செய்யப்பட்டனர்.

விடுவிக்கப்பட்டவுடன் திரு மு.க ஸ்டாலின் அவர்களுடன் டெசோ அமைப்பைச் சேர்ந்த அனைவரும் டெசோ தலைவர் கலைஞர் அவர்களை அவரது கோபாலபுரம் இல்லத்தில் சென்று சந்தித்தனர் .ஐ நா மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானத்தின்மீது அனேகமாக 22 ஆம் தேதி வாக்கெடுப்பு நடத்தப்படலாம் எனத் தெரிவதால் அதற்கு முன் இந்திய அரசுக்கு மேலும் அழுத்தம் தரும்விதமாக  டெசோ சார்பில் அடுத்த கட்ட போராட்டத்தை முன்னெடுக்கவேண்டும் என அனைவரும் விருப்பம் தெரிவித்தனர். திரு கலைஞர் அவர்கள் உடல் நலிவுற்று இருப்பதால் ஓரிரு நாட்களில் அதுகுறித்து முடிவுசெய்யலாம் எனத் தீர்மானிக்கப்பட்டது.




No comments:

Post a Comment