Friday, September 16, 2011

பி பி சி தமிழோசையின் ஊடகக் கல்வி


1




பிபிசி ஊடகவியல் கல்லூரியும் மற்றும் பிபிசி உலகசேவையும், ஏழு ஆசிய மொழிகளில் சிறப்பு மொழி வழிகாட்டிகளைக் கொண்டுவருவதில் பெருமையடைகின்றன. தமிழ், சிங்களம், ஹிந்தி, வங்காளி, பர்மிய, நேபாளி மற்றும் வியட்நாமிய மொழிகளில் இந்த வழிகாட்டிகள் தொடங்கப்படுகின்றன.

இந்தப் புதிய வெளியீடுகள் ஏற்கனவே அரபிய, பிரெஞ்சு, சீன, பஷ்டூ, ருஷ்ய, உருது போன்ற 19 மொழிகளில் பிபிசி உருவாக்கிய வழிகாட்டிகள் பட்டியலில் இணைகின்றன.

இந்த வழிகாட்டி பிபிசி செய்தியாளர்கள் பல ஆண்டுகளாக பணியாற்றி சேர்த்த திறன் மற்றும் அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு அமைந்தது. இந்த அறிவை, உலகெங்கும் உள்ள செய்தியாளர்களுடன் பகிர்ந்துகொள்வதில் நாம் மகிழ்ச்சி அடைகிறோம்.

இந்த வழிகாட்டிகள் ஊடகவியல் என்பது எப்படி ஒட்டுமொத்தத்தில் பார்த்தால் மொழியைப் பற்றியதுதான் என்பதைக் கோடிட்டுக்காட்டுகின்றன.

ஊடகவியலின் விழுமியங்களைப் பற்றி விவாதிக்க வேண்டுமென்றால், இந்த விழுமியங்களை வெளிப்படுத்துவதில் மொழி வகிக்கும் பங்கை நாம் முதலில் புரிந்துகொள்ளவேண்டும்.

இது ஒரு முதல் படிதான்.

இந்தப் பக்கங்கள் வளர்ந்து ஊடகவியலுக்கும் மொழிக்குமான ஒரு முழுமையான வழிகாட்டிகளாக உருவெடுக்கவேண்டும் என்பதே எங்கள் விருப்பம்

1 comment: