Monday, June 29, 2015

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்

ததேகூ இம்முறையாவது பஞ்சமர்களுக்கு வாய்ப்பளிக்குமா? 

ஆகஸ்ட் மாதம் 17 ஆம் தேதி நடைபெறவுள்ள இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் தமிழர் பகுதிகளிலிருந்தும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். கடந்த 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் தமிழர் தேசியக் கூட்டணி 2.90% வாக்குகளைப் பெற்று 14 இடங்களை வென்றது. அந்த 14 பேரில் ஒருவர்கூட பஞ்சமர் இல்லை எனத் தெரிகிறது. தற்போது கிழக்கு மாகாணசபையிலும்கூட பஞ்சமர் எவரும் அங்கத்தவராக இல்லை என்றே அறிகிறேன். 

இலங்கையில் சாதி இருக்கிறது தீண்டாமை இருக்கிறது ஆனால் சாதி ஒடுக்குமுறைகளுக்கு ஆளாகிறவர்களுக்கு இட ஒதுக்கீடு மட்டும் கிடையாது. அதனால் பஞ்சமர்களை வயல்களிலும், தேயிலைத் தோட்டங்களிலும் கூலிகளாகப் பயன்படுத்திவிட்டு எளிதாக ஒதுக்கிவைத்துவிட முடியும் என்ற நிலைதான் இப்போதும் இருக்கிறது. 

இந்தநிலை இப்போதும் நீடித்திருப்பது சரியல்ல. இந்தமுறையாவது பஞ்சம சாதிகளைச் சேர்ந்தவர்கள் நாடாளுமன்றத்தில் உரிய பிரதிநிதித்துவத்தைப் பெறவேண்டும். 

இலங்கையில் இஸ்லாமியர்களின் உரிமைகளை எடுத்துப்பேச கட்சிகள் உள்ளன; மலையகத் தமிழர்களுக்கு வாதாட கட்சிகள் உள்ளன ஆனால் பஞ்சம மக்களுக்காகப் பரிந்துபேச பெரிய கட்சியென்று எதுவுமில்லை. 

தமிழர் ஒற்றுமை சமத்துவத்தின் அடிப்படையில்தான் மலருமே தவிர அடிமைத்தனத்தில் முளைக்காது. இதை தமிழர் தலைவர்கள் புரிந்துகொள்ளவேண்டும். 

No comments:

Post a Comment