Saturday, April 8, 2017

சிவனடியார் ஆறுமுகசாமிக்கு சிதம்பரத்தில் சிலை அமைக்கவேண்டும் - ரவிக்குமார்



சிதம்பரம் நடராஜர் கோயிலில் தேவாரம் பாடுவதற்குப் போராடி வெற்றிகண்ட சிவனடியார் ஆறுமுகசாமி இன்று காலமானார். அவருக்கு என் அஞ்சலியைத் தெரிவித்துக்கொள்கிறேன். 

2008 ஆம் ஆண்டு நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்த நேரத்தில் தினகரன் நாளேட்டில் வெளியான அவரது புகைப்படத்தைக் காண்பித்து அவருக்குத் தமிழக அரசு நிதி உதவி அளிக்கவேண்டும் எனக் கோரினேன். அன்றைய முதல்வர் கலைஞர் அவர்கள் உடனடியாக எனது கோரிக்கையை ஏற்று மாதம் மூன்றாயிரம் ரூபாய் உதவித் தொகையும், மருத்துவப் படியும் வழங்கிட ஆணை பிறப்பித்தார். அந்த ஆணை எனது முன்னிலையில் அன்றைய கடலூர் மாவட்ட ஆட்சியர் திரு ராஜேந்திர ரத்னூ அவர்களால் திரு ஆறுமுகசாமி அவர்களிடம் வழங்கப்பட்டது. 

சிதம்பரம் கோயிலில் தமிழில் பாடவேண்டும் எனப் போராடிய சிவனடியார் ஆறுமுகசாமி அவர்கள் சமூகநீதிப் போராட்டத்தின் ஒரு குறியீடு. அவரது போராட்டத்தை எதிர்வரும் தலைமுறையினர் உணரும் விதமாக சிதம்பரம் நகரில் பொருத்தமானதொரு இடத்தில் அவருக்கு சிலை எழுப்பவேண்டும் எனத் தமிழக அரசை வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்




No comments:

Post a Comment