Showing posts with label anti poetry. Show all posts
Showing posts with label anti poetry. Show all posts

Wednesday, December 19, 2012

ஈழக் கவிஞர்கள் சேரன், அகிலன் , ஷர்மிளா செய்யத்

18.12.2012 செவ்வாய் அன்று சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் பிரகதி ஃ பவுண்டேஷன் ஒருங்கிணைப்பில் ஈழக் கவிஞர்கள் சேரன், அகிலன் , ஷர்மிளா செய்யத் ஆகியோர் தமது கவிதைகளை மாணவியரின் முன்னால் வாசித்தனர் . ஒரு மணி நேரம் நடைபெற்ற அந்த நிகழ்வில் மிகுந்த ஈடுபாட்டுடன் மாணவியர் கலந்துகொண்டனர். சிறிய கலந்துரையாடலும் நடந்தது. 
                                            
                                                                              சேரன் 
ஷர்மிளா , அகிலன் 


Tuesday, January 31, 2012

நிக்கனோர் பர்ரா


சிலுவையின் முன்னால் நான்  மண்டியிட்டு
அவரது காயங்களைப் பார்த்தபோது
என்ன நடந்தது தெரியுமா?

அவர் என்னைப் பார்த்துப் புன்னகைத்தார் கண் சிமிட்டினார்

அவர் ஒருபோதும் சிரித்திருக்கவேமாட்டார் என நான் எண்ணியிருந்தேன்
ஆனால் இப்போது ஆமாம் நான் அதை நம்புகிறேன்

வீட்டுப் பாடம் - நிக்கனோர் பர்ரா




ஒரு செய்யுளை எழுது
அது கீழ்க்கண்ட ஈரசைகளைக் கொண்டதாக இருக்கட்டும்:
  நான் உன்னைவிட முன்னே சாக விரும்புகிறேன்
இப்படி அது முடியட்டும்:
  அதற்கு முன் நீ இறப்பது நலம்