Showing posts with label nicanor parra. Show all posts
Showing posts with label nicanor parra. Show all posts

Tuesday, January 31, 2012

நிக்கனோர் பர்ரா


சிலுவையின் முன்னால் நான்  மண்டியிட்டு
அவரது காயங்களைப் பார்த்தபோது
என்ன நடந்தது தெரியுமா?

அவர் என்னைப் பார்த்துப் புன்னகைத்தார் கண் சிமிட்டினார்

அவர் ஒருபோதும் சிரித்திருக்கவேமாட்டார் என நான் எண்ணியிருந்தேன்
ஆனால் இப்போது ஆமாம் நான் அதை நம்புகிறேன்

வீட்டுப் பாடம் - நிக்கனோர் பர்ரா




ஒரு செய்யுளை எழுது
அது கீழ்க்கண்ட ஈரசைகளைக் கொண்டதாக இருக்கட்டும்:
  நான் உன்னைவிட முன்னே சாக விரும்புகிறேன்
இப்படி அது முடியட்டும்:
  அதற்கு முன் நீ இறப்பது நலம்

கவிதை : நிக்கனோர் பர்ரா




நானும் என் சடலமும்
ஒருவரையொருவர் அற்புதமாகப் புரிந்துவைத்திருக்கிறோம்
என் சடலம் கேட்டது: உனக்குக் கடவுள்மீது நம்பிக்கை உண்டா?
நான் மனப்பூர்வமாகச் சொன்னேன் : இல்லை
என் சடலம் கேட்டது: நீ அரசாங்கத்தை நம்புகிறாயா?
நான் அரிவாளையும் சுத்தியலையும் காட்டினேன்
என் சடலம் கேட்டது: நீ போலீஸை நம்புகிறாயா?
நான் அதன் முகத்தில் ஒரு குத்து விட்டேன்
அது சவப்பெட்டியிலிருந்து எழுந்தது
நாங்கள் கைகளைக் கோர்த்தபடி
பலிபீடத்தை நோக்கிப் போனோம்