Showing posts with label avvai. Show all posts
Showing posts with label avvai. Show all posts

Saturday, June 30, 2012

பிரான்மலை : காரைக்கால் அம்மையாரின் சிற்பம் ?




திருக்கொடுங்குன்றம் என ஞான சம்பந்தரால் பாடப்பெற்ற  பிரான்மலையில்  பாதாளம்  ஆகாயம் கைலாயம் என மூன்று அடுக்குகளில் அமைந்த மூன்று கோயில்கள் உள்ளன. ஆகாயம் என அழைக்கப்படும் நடுப் பகுதியில் உள்ள கோயிலில் சிறிய வெள்ளைப் பிள்ளையார் சிலை ஓன்று உள்ளது. அந்த சிலை இருக்கும் இடத்துக்கு எதிரில்  இருக்கும் மண்டபத் தூண் ஒன்றில் தடி ஊன்றிய நிலையில் இருக்கும் மூதாட்டியின் சிற்பம் ஓன்று செதுக்கப்பட்டுள்ளது.




அது காரைக்கால் அம்மையாரின் சிற்பம் எனக் கோயில் சிவாச்சாரியார் கூறினார். ஆனால் அந்த சிற்பத்தில் காரைக்கால் அம்மையாரின் கைகளில் காணப்படும் தாளங்களுக்கு மாறாகத் தடி இருப்பதால் சிவாச்சாரியாரின் கூற்றை ஒப்புக்கொள்ள முடியவில்லை. 
இந்த சிற்பம் குறித்து வேறு ஏதேனும் குறிப்பு உள்ளதா ? யாராவது இதுகுறித்து எழுதியிருக்கிறார்களா ? 

Wednesday, September 14, 2011

தமிழின் முதல் மொழிபெயர்ப்பாளர் ஔவையா ?

ஔவை எழுதிய புறநானூற்றுப் பாடலான ‘ நாடா கொன்றோ ... ‘ என்ற பாடல்
தம்மபதப் பாடல் ஒன்றோடு பொருந்திப்போகும் செய்தி தெ.பொ.மீ அவர்களால்
நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே சுட்டிக்காட்டப்பட்ட ஒன்றுதான். அதை இப்போது
பேராசிரியர் செ.வை.சண்முகம் அவர்கள் மேலும் விரித்து ஒரு கட்டுரையாக
எழுதியிருக்கிறார். கவிதைக் கட்டமைப்பு என்ற அவரது நூலில்( மெய்யப்பன்
பதிப்பகம் 2003) இடம்பெற்றிருக்கும் ’ஔவையாரின் கவிதை மொழி’ என்ற
கட்டுரையிலும் அவர் இதே செய்தியை ஆராய்ந்திருக்கிறார். அந்தப் பாடல்
ஔவையின் பிற பாடல்களிலிருந்து தனித்து நிற்பதாகக் குறிப்பிடும்
பேராசிரியர் செ.வை.ச ஔவையின் பிற பாடல்களில் ”வடமொழிச் சொற்கள் மற்றும்
கருத்துகள் குறிப்பாக வைதீக மதக் கருத்துகள் காணப்படுகின்றன “ என்கிறார்.
புதல்வர், கோவலர், அற்சிரம், நேமி, சகடம் போன்ற பல வடமொழிச் சொற்களை ஔவை
கடன் சொல்லாகக் கையாண்டிருக்கிறார் எனவும் செ.வை.ச குறிப்பிடுகிறார்.
இவற்றைச் சொன்னதோடு அவர் நிற்கவில்லை, தம்மபதப் பாடலை ஔவை மொழியாக்கம்
செய்திருக்கிறார்  எனவே அவரைத் தமிழின் முதல் மொழிபெயர்ப்பாளர் என்று
கொள்ளலாம் என்கிறார் பேராசிரியர் செ.வை.சண்முகம். அவரது கருத்து ஏற்கத்
தக்கதுதானா?