Tuesday, March 5, 2013

ஹ்யூகோ சாவேஸ் மரணமடைந்தார்


வெனிசுவேலா நாட்டின் அதிபர் ஹ்யூகோ சாவேஸ் ( 58) மரணமடைந்தார். புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் கடந்த 14 ஆண்டுகளாக அந்த நாட்டை ஆண்டுவந்தார். 

அமெரிக்காவுக்கு எண்ணை வழங்கும் நாடுகளில் முக்கியமானதாகத் திகழும் வெனிசுவேலாவில் சோஷலிசத்தின்மீது நம்பிக்கைகொண்ட சாவேஸின் ஆட்சி இருப்பதை அமெரிக்கா விரும்பவில்லை. 
தனது நாட்டில் மட்டுமின்றி லத்தீன் அமெரிக்க நாடுகள் அனைத்துக்கும் வழிகாட்டியாகத் திகழ்ந்த சாவேஸ், அமெரிக்காவின் ஆதிக்கத்தை வெளிப்படையாக எதிர்த்து வந்தார். 
உலகெங்குமிருக்கும் ஜனநாயக சக்திகளுக்கு மிகப்பெரும் நம்பிக்கையாகத் திகழ்ந்த சாவேஸின் மரணம் ஏற்படுத்தியிருக்கும் வெற்றிடம் இட்டு நிரப்ப முடியாதது. 

12 தேர்தல்களில் வெற்றிபெற்ற அவரை "
ஒரு வித்தியாசமான சர்வாதிகாரி " என எழுத்தாளர் எடுவர்டோ கலியானோ குறிப்பிட்டார். அது உண்மைதான். அவர் புரட்சியாளரா அல்லது சிலர் சொல்வதுபோல ஒரு சர்வாதிகாரியா என்பது இனி வெனிசுவேலா என்ன பாதையைத் தேர்ந்தெடுக்கப்போகிறது என்பதில் தெரிந்துவிடும். 

Monday, March 4, 2013

பள்ளிகளில் தொடரும் பாகுபாடுகள்




இந்தியாவில் தீண்டாமை சட்டரீதியாக ஒழிக்கப்பட்டுவிட்டதென அறிவிக்கப்பட்டிருக்கிறது. பாடநூல்களிலும் அதை அச்சிட்டிருக்கிறார்கள். ஆனால், இப்போதும் பல்வேறு வடிவங்களில் தீண்டாமை கடைபிடிக்கப்படுகிறது. பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கிடையே சாதி அடிப்படையில் பேதம் பாராட்டுவது எவ்வளவு பெரிய கொடுமை! சமூக நீதிக்குப் பேர்போன தமிழ்நாட்டில் நினைத்தே பார்க்கமுடியாத வடிவங்களில் தீண்டாமை நிலவிக்கொண்டிருக்கிறது.

அம்பேதகர் தான் படிக்கும்போது மற்ற பிள்ளைகளோடு சமமாக உட்கார அனுமதிக்கப்படவில்லையென்பதையும் தான் உட்காருவதற்காக வீட்டிலிருந்து சாக்குத் துண்டு ஒன்ற எடுத்துவரும்படித் தமது ஆசிரியர் சொன்னதையும் எழுதியிருக்கிறார். மறைந்த கங்கிரஸ் தலைவர் எல்.இளையபெருமாள் தான் படிக்கும்போது பள்ளியில் ‘ பறையன் பானை’ என எழுதப்பட்ட பானை ஒன்று வைக்கப்பட்டிருந்தது எனவும் அதில்தான் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பிள்ளைகள் தண்ணீர் குடிக்க வேண்டுமென்று விதி இருந்தது எனவும் சொல்லியது நினைவுக்கு வருகிறது. ஈலையபெருமாள் குறிப்பிட்டது 75 ஆண்டுகளுக்கு முந்தைய நிலவரம். ஆனால் அதே கேவல நிலை இன்றும் தொடர்கிறது. பானை இல்லை, அதில் அப்படி எழுதப்படவில்லை என்றாலும் எல்லா பிள்ளைகளும் ஒரே பாத்திரத்திலிருந்து தண்ணீர் எடுத்துக் குடிக்க முடியாத பள்ளிகள் இப்போதும் தமிழ்நாட்டில் இருக்கவே செய்கின்றன.

தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் சத்துணவு சமைத்தால்  அதை தலித் அல்லாத சாதிகளைச் சேர்ந்த பிள்ளைகள் சாப்பிடுவதில்லை என்ற நிலை பல ஊர்களில் இருக்கிறது. அதன்காரணமாக சத்துணவுப் பணியாளர்கள் பணியிடமாற்றம் செய்யப்படுவதையும் செய்திகள் தெரிவிக்கின்றன. பள்ளிகளில் ஆண்டு முடிவில் எடுக்கப்படும் புகைப்படத்தில் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த பிள்ளைகள் இடம்பெறக்கூடாது என்பதற்காக அவர்களை அனுப்பிவிட்டு மற்ற பிள்ளைகளைமட்டும் புகைப்படம் எடுக்கும் வழக்கம் பல இடங்களில் இருக்கிறது.

இத்தகைய பாகுபாடுகள் களையப்படவேண்டும் என்பதற்காக திருமதி சோனியா காந்தி அவர்களின் தலைமையில் செயல்படும் தேசிய ஆலோசனைக் குழு ( National Advisory Council - NAC )  ஒரு துணைக்குழுவை அமைத்து சில பரிந்துரைகளை அரசுக்கு அனுப்பியிருக்கிறது. அந்தப் பரிந்துரைகள் இதுவரை செயல்வடிவம் பெறவில்லை. ’கல்வி சிறந்த தமிழ்நாடு’ என்று சொல்லப்படும் இந்த மாநிலத்தில் கல்விமீது அக்கறை உள்ளவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. அவர்களும்கூட தலித் மாணவர்களின் பிரச்சனை குறித்து அவ்வளவாகப் பேசுவதில்லை. இத்தகைய பிரச்சனைகளுக்கு ஊடகங்களிலும் போதிய இடம் கொடுக்கப்படுவதில்லை.  தேசிய ஆலோசனைக் குழு அளித்துள்ள பரிந்துரைகளின் சுருக்கம் :

 Towards ending discrimination in schools


1. MHRD along with states to take steps for defining discrimination, preparing equality declaration and Code of Conduct for schools and create mechanisms for stakeholders to engage with issues of diversity.

2. Reforms in Teacher Education and training for preparing and training teachers to handle discrimination and engaging with issues of identity, diversity, processes of social exclusion & inclusion.

3. Grievance redress to be done in non adversarial manner through dialogue, training of school management committees and local authorities on discrimination and evolving time bound and confidential ways of resolution. Role of civil society important to facilitate shiksha samvads and dispute resolution.

4. Define and specify prevalent many forms of discrimination, and make provision of disciplinary action under service rules for contravention of sec. 8 (c) & 9 (c). SCPCRs to take suo-moto cognizance of systemic discrimination. Notify minority children under sec 2 (d).

ஜெனீவா மாநாடு : அமெரிக்க தீர்மானத்தின் வரைவு





( ஜெனீவாவில் நடைபெற்றுவரும் ஐநா மனித உரிமைகள் குழுவின் மாநாட்டில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா சமர்ப்பிக்கவுள்ள தீர்மானத்தின்  வரைவு - http://www.srilankabrief.org/2013/02/first-draft-of-us-resolution-promoting.html?m=1 என்ற 
இணையதள முகவரியில் வெளியிடப்பட்டிருக்கும் ஆங்கில வரைவின் தமிழாக்கம் : ரவிக்குமார் ) 



ஐ.நா மனித உரிமைக் குழு

ஐ.நா பேரவையின் அறிக்கையின் வழிகாட்டுதலின்படியும்,சர்வதேச மனித உரிமைகள் குறித்த அதன் பிரேரணைக்கு ஏற்பவும், அது தொடர்பிலான இன்னபிற சர்வதேச ஒப்பந்தங்களுக்கேற்பவும்,

இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் பொறுப்பேற்றலுக்கான ஐநா மனித உரிமைகள் குழுவின் தீர்மானம் 19/2 ஐ நினைவுகூர்ந்து , தனது குடிமக்களின் சுதந்திரம் மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதும் உத்தரவாதப்படுத்துவதும்  இலங்கை அரசாங்கத்தின் பொறுப்பு என்ற நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தி ,

இலங்கை அரசின் தேசிய செயல் திட்டம் மற்றும் எல்.எல்.ஆர்.சி பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பான அதன் வாக்குறுதிகளை கவனத்தில்கொண்டு,

தேசிய செயல் திட்டம் என்பது எல்.எல்.ஆர்.சியின் எல்லாவிதமான பரிந்துரைகளையும் நடைமுறைப்படுத்துவதில் போதிய அக்கறைகாட்டவில்லை என்பதைக் கவலையோடு சுட்டிக்காட்டி,

சட்டத்துக்கு விரோதமான கொலைகள், திட்டமிட்ட முறையிலான ஆள் கடத்தல்கள் முதலானவை குறித்த நம்பகமான விசாரணையை மேற்கொள்ளுதல்; இலங்கையின்  வடக்குப் பிரதேசத்திலிருந்து ராணுவத்தை முற்றாக விலக்கிக்கொள்வது; நிலங்கள் தொடர்பிலான புகார்கள் குறித்த நடுநிலையான விசாரணையை மேற்கொள்வது; தடுப்புக்காவல் சட்டங்கள் குறித்து மீளாய்வுசெய்வது; முன்னர் சுதந்திரமானவையாக இருந்த சிவில் நிர்வாக அமைப்புகளை பலப்படுத்துவது; மாகாணங்களுக்கு அதிகாஅரங்களைப் பகிர்ந்தளிப்பதற்கன அரசியல் தீர்வைக் காண்பது; அனைத்துத் தரப்பினருக்கும் பேச்சுரிமை உள்ளிட்ட அனைத்து அடிப்படை உரிமைகளையும் பாதுகாப்பதற்கான சட்டங்களை வலுப்படுத்துவது உள்ளிட்ட எல்.எல்.ஆர்.சி அறிக்கையில் இடம்பெற்றிருக்கும்  உருப்படியான பரிந்துரைகளைக் கவனப்படுத்தி,

அதேசமயத்தில் தேசிய செயல் திட்டமோ எல்.எல்.ஆர்.சி யோ இலங்கையில் சர்வதேச சட்டங்கள் மீறப்பட்டன என்ற குற்றச்சாட்டு குறித்துப் போதுமான அளவில் அக்கறைகாட்டவில்லை என்பதைக் கவலையோடு சுட்டிக்காட்டி,
இலங்கையில்  மனித உரிமைகள் மீறப்படுவது தொடர்பாகவும், சட்டத்தின் ஆட்சிக்கும், நீதித்துறையின் சுதந்திரத்துக்கும் ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தல் தொடர்பாகவும், மாகாணங்களுக்கு அதிகாரத்தைப் பகிர்ந்தளிப்பது உள்ளிட்ட வாக்குறுதிகளை இலங்கை அரசு தொடர்ந்து மீறிவருவது தொடர்பாகவும்  தொடர்ந்து முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளைப் பற்றிக் கவலை தெரிவித்து,

1) ஐ.நா. மனிதவுரிமைகள் குழுவின் ஆனையர் அளித்திருக்கும் இலங்கை தொடர்பான அறிக்கையை இந்தத் தீர்மானம் வரவேற்கிறது.

2) எல்.எல்.ஆர்.சி யின் உருப்படியான பரிந்துரைகளை விரைவாகச் செயற்படுத்துதல், இலங்கையின் அனைத்துக் குடிமக்களுக்கும் நீதி, சமத்துவம், நல்லிணக்கம், பொறுப்பேற்பு ஆகியவற்றை உறுதிசெய்வதற்கான சட்டரீதியான நடைமுறைகளை ஏற்படுத்துதல் தொடர்பாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்ட நிலைப்பாட்ட இத்தீர்மானம் மறுபடியும் வலியுறுத்துகிறது.

3) மனிதவுரிமைச் செயற்பாட்டாளர்கள், வழக்கறிஞர்கள், நீதிபதிகள்,பேச்சுரிமை,கூடுவதற்கான உரிமை,சட்டவிரோதமான தன்னிச்சையான கொலைகள், திட்டமிட்டமுறையிலான ஆள்கடத்தல்  ஆகியவை தொடர்பான ஐ. நா குழுக்களின் சிறப்பு அலுவலர்கள் இலங்கைக்குத் தடையின்றி  வந்து ஆய்வுகளை நடத்த இலங்கை அரசு அனுமதிக்கவேண்டும் என இத்தீர்மானம் வலியுறுத்துகிறது

4) மேற்சொன்ன பரிந்துரைகளை நிறைவேற்றுவதில் இலங்கை அரசோடு கலந்தாலோசனை செய்து அதன் ஒப்புதல் பெற்று ஐ.நா  மனித உரிமைகள் ஆணையர் மற்றும் அவரையொத்த அதிகாரம் கொண்ட பிற அமைப்பினர் இலங்கை அரசுக்கு உதவிட வேண்டும் என இத்தீர்மானம் வலியுறுத்துகிறது.  

5) ஐ.நா மனித உரிமைகள் குழுவின் ஆணையர் மற்றும் அவரையொத்த அதிகாரம் கொண்ட பிற அமைப்பினர்,  இலங்கையில் சர்வதேச சட்டங்கள் மீறப்பட்டிருப்பது தொடர்பாகவும், நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் குறித்து இலங்கை அரசு எடுத்திருக்கும் நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஐ.நா மனித உரிமைகள் குழுவின் இருபத்தைந்தாவது கூட்டத்தில் அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கவேண்டும் என இத்தீர்மானம் வலியுறுத்துகிறது.






Sunday, March 3, 2013

Draft Resolution of US on Sri Lanka in UNHRC

Here is the first draft of the resolution to be submitted by the US  to the Human rights Council and circulated by the UN Mission Geneva. ( Please note that this is a not a confirmed official US document yet ) 

The Human Rights Council,
Guided by the Charter of the United Nations, the Universal Declaration of Human Rights, the International Covenants on Human Rights and other relevant instruments,

Recalling Human Rights Council Resolution 19/2 on Promoting Reconciliation and Accountability in Sri Lanka,
Reaffirming that it is the responsibility of the Government of Sri Lanka to ensure the full enjoyment of all human rights and fundamental freedoms of its entire population,

Taking note of the Government of Sri Lanka’s National Action Plan and its commitments as set forth in response to the findings and recommendations of the Lessons Learnt and Reconciliation Commission (LLRC) of Sri Lanka,
Noting with concern that the National Action Plan does not adequately address all of the findings and constructive recommendations of the LLRC,
Recalling the constructive recommendations contained in the LLRC’s report, including the need to credibly investigate widespread allegations of extra-judicial killings and enforced disappearances, demilitarize the north of Sri Lanka, implement impartial land dispute resolution mechanisms, re-evaluate detention policies, strengthen formerly independent civil institutions, reach a political settlement on the devolution of power to the provinces, promote and protect the right of freedom of expression for all and enact rule of law reforms,

Also noting with concern that the National Action Plan and the LLRC’s report do not adequately address serious allegations of violations of international law,
Expressing concern at the continuing reports of violations of human rights in Sri Lanka, threats to judicial independence and the rule of law, and failure by the Government of Sri Lanka to fulfill its public commitments, including on devolution of political authority to provinces as called for in Sri Lanka’s constitution,


1.    Welcomes the report of the High Commissioner for Human Rights on the human rights situation in Sri Lanka;

2.    Reiterates its call upon the Government of Sri Lanka to expeditiously implement the constructive recommendations made in the LLRC report and to take all necessary additional steps to fulfill its relevant legal obligations and commitment to initiate credible and independent actions to ensure justice, equity, accountability, and reconciliation for all Sri Lankans;

3.    Urges the Government of Sri Lanka to formally respond to outstanding  requests, including by providing unfettered access, by special procedures mandate holders, in particular the Special Rapporteurs on independence of judges and lawyers; torture; human rights defenders; freedom of expression; freedom of association and assembly; extrajudicial, summary or arbitrary executions; and the Working Group on enforced or involuntary disappearances;

4.    Encourages the Office of the High Commissioner for Human Rights and relevant special procedures mandate holders to provide, in consultation with, and with the concurrence of, the Government of Sri Lanka, advice and technical assistance on implementing the above-mentioned steps;

5.    Requests the Office of the High Commissioner for Human Rights, in consultation with relevant special procedures mandate holders, to present a report on the provision of such assistance and progress on reconciliation and accountability, including investigations of violations of international law, in Sri Lanka to the Human Rights Council at its twenty-fifth session. 
 http://www.srilankabrief.org/2013/02/first-draft-of-us-resolution-promoting.html?m=1

தமிழக பட்ஜெட் : தலித் மக்களுக்கு நீதி கிடைக்குமா ?





மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு அதைப்பற்றி ஒரு அறிக்கை வெளியிட்டதோடு தமது கடமை முடிந்தது என அரசியல் தலைவர்கள் வேறு அறிக்கை தயாரிக்கப் போய்விட்டார்கள். இந்த பட்ஜெட்டில் எஸ் சி/ எஸ் டி பிரிவினருக்கு உரிய நிதி ஒதுக்கப்படவேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்திருந்தது. வேறு எந்தக் கட்சியும் அப்படிக் கேட்டதாகத் தெரியவில்லை.

பட்ஜெட் தாக்கல் செய்யப்பட அன்று நான் ராஜ் நியூஸ் தொலைக்காட்சியிலும் சன் நியூஸ் தொலைக்காட்சியிலும் நேரடி ஒளி பரப்புகளில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தேன். அப்போது இந்த மத்திய பட்ஜெட்டில் எஸ் சி பிரிவினருக்கும் எஸ் டி பிரிவினருக்கும் அவர்களுக்கு ஒதுக்கவேண்டிய தொகையில் பாதி அளவுகூட ஒதுக்கப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டினேன்.

பட்ஜெட்டில் பழங்குடி மக்களுக்காக அவர்களது மக்கள் தொகைக்கேற்ப நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும் என்ற நடைமுறை 5 ஆவது ஐந்தாண்டுத் திட்ட காலத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. எஸ் சி பிரிவினருக்கு அப்படி ஒதுக்க வேண்டும் என 6 ஆவது ஐந்தாண்டுத் திட்ட காலத்தில் முடிவு செய்தார்கள். பட்ஜெட் நிதி ஒதுக்கீடுகள் இந்த மக்களை எட்டவில்லை என்ற உண்மையை அறிந்தபின்னர் செய்யப்பட சிறப்பு ஏற்பாடு இது. அந்த மக்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப பட்ஜெட்டின் திட்ட ஒதுக்கீட்டில் நிதி ஒதுக்க வேண்டும், அந்தத் தொகையை எவ்வாறு செலவு செய்யவேண்டும் என்றெல்லாம் தெளிவான விதிகள் வகுக்கப்பட்டன. ஆனால் அவை எந்தவொரு அரசாலும் நடைமுறைப் படுத்தப்படவில்லை. மத்திய அரசும் அதை மதிக்கவில்லை, மாநில அரசுகளும் மதிக்கவில்லை. இப்போது 12 ஆவது ஐந்தாண்டுத் திட்டம் வகுக்கப்பட்டிருக்கிறது. இப்போதும் அந்த கதி தான்.

திருமதி சோனியா காந்தி அவர்களின் தலைமையில் இருக்கும் தேசிய ஆலோசனைக் குழு இதற்காக ஒரு துணைக் குழுவை நியமித்து எஸ் சி துணைத் திட்டம் மற்றும் எஸ் டி துணைத் திட்டம் ஆகியவற்றை ஆராய்ந்தது. அந்தத் துணைக்குழு தனது பரிந்துரைகளை 2011 டிசம்பரிலேயே மத்திய அரசிடம் அழித்துவிட்டது. அதற்குப் பிறகு இரண்டு மத்திய பட்ஜெட்டுகள் தாக்கல் செய்யப்பட்டுவிட்டன .ஆனால் அந்தப் பரிந்துரைகளில் ஒன்றுகூட நடைமுறைக்கு வரவில்லை. மக்களவையிலும் மாநிலங்கள் அவையிலும் எஸ் சி எஸ் டி உறுப்பினர்கள் நூறு பேருக்குமேல் இருக்கின்றனர். ஆனால் இந்தப்  பிரச்னையை அவர்கள் எழுப்பியதாகத் தெரியவில்லை. கடந்த கூட்டத் தொடரின்போது பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதா விவாதத்துக்கு வந்தது. அதை முலாயம் சிங்கின் அடியாட்கள் தடுத்து நிறுத்திவிட்டனர். இந்தக் கூட்டத் தொடரில் அதைப் பற்றி விவாதிப்பார்களா அல்லது எதிர்க்கட்சிகள் ஏதாவது ஒரு ஊழல் புகாரை எழுப்பி அதை விவாதிக்கவிடாமல் தடுப்பார்களா என்பது தெரியவில்லை.

தலித் பிரச்சனை பாராளுமன்றத்தில் பெரிய அளவில் எழுப்பப்படாத நிலையில் காங்கிரஸ் கட்சியோ பா.ஜ.கவோ அதை விவாதிக்கும் என நாம் எதிர்பார்க்க முடியாது. தமிழக பட்ஜெட் தயாராகிக்கொண்டு இருக்கிறது. அதில் எஸ் சி எஸ் டி மக்களுக்கான நிதி ஒதுக்கீடு சரியாக செய்யப்படவேண்டும் என இப்போதே வலியுறுத்தவேண்டும்.

நான் கடந்த முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது பட்ஜெட் சமயங்களில் இந்தப் பிரச்சனையைத் தொடர்ந்து எழுப்பி வந்தேன். ஜூனியர் விகடன் பத்திரிகையில் கட்டுரையாக எழுதியும், எங்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டங்களை நடத்தியும், மற்ற அரசியல் கட்சிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏ க்களை அழைத்து விவாதித்தும் அதைப் பற்றிய விழிப்புணர்வை உருவாக்கினேன். அதன்காரணமாக பல திட்டங்கள் உருவாக்கப்பட்டன. ஆனால் இன்று அப்படிச் செய்வதற்கு ஒருத்தரும் இல்லையென்பதை நினைக்கும்போது வருத்தமாக இருக்கிறது.

Saturday, March 2, 2013

தண்ணீர் எடுப்பதற்கு லைசென்ஸ் : மோடியின் "முன்னேற்றத் திட்டம்"



 இந்தியாவின் அடுத்த பிரதமர் வேட்பாளர் என அவரது ஆதரவு ஊடகங்களால் முன்னிறுத்தப்படும் நரேந்திர மோடியின் ஆட்சியில் குஜராத்தில் பாலாறும் தேனாறும் ஓடுகிறது என ஒரு மாயை கட்டியமைக்கப்பட்டுவருகிறது. இந்துத்துவத்தைத் தனது போலி மதச் சார்பின்மை அணுகுமுறையால் எதிர்கொள்ள முடியாத காங்கிரசும் அந்தப் பிரச்சாரத்தை எதிர்கொள்ளமுடியாமல் கை பிசைந்து நிற்கிறது. 

காங்கிரஸ் அடுத்த ஆட்சியை பா.ஜ.கவுக்கு விட்டுக்கொடுக்க முடிவுசெய்துவிட்டதோ என்ற ஐயம் நமக்கு எழுகிறதில்லையா ?  அடுத்தமுறை பிரதமர் வாய்ப்பு வரப்போவதில்லை என்பது உறுதியாகத் தெரிந்துவிட்ட நிலையில் மன்மோகன் சிங்கும் தனது எஜமானர்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதிலேயே கவனமாக இருக்கிறார். அவர் பா.ஜ.க வை எதிர்த்துப் பேசக்கூடிய அரசியல் உறுதி உள்ளவர் அல்ல.அண்மையில் இந்துத்துவ பயங்கரவாதம் என உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே பேசியதும் அதன்பின் சமரசம் செய்துகொண்டதும் காங்கிரசின் பலவீனமான நிலைக்கு உதாரணங்கள். 

பா.ஜ.கவில் மட்டுமல்ல பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலும்  நரேந்திர மோடியை முன்னிறுத்துவதற்குக் கடுமையான எதிர்ப்பு இருப்பதைப் பார்க்கிறோம். பீகார் முதலமைச்சர் நித்திஷ்குமார் மோடிமீதான தனது வெறுப்பை வெளிப்படையாகவே காட்டிவருகிறார். ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவரும் தே .ஜ.கூ வின் அமைப்பாளருமான சரத் யாதவ் கூட மோடியைப்  பிரதமர் வேட்பாளராக ஏற்கமுடியாது என்பதையே  மறைமுகமாகத் தெரிவித்துவருகிறார். புதிய கூட்டணிக் கட்சிகள் கிடைப்பதற்கு வாய்ப்பில்லை, இருக்கிற கட்சிகளும் பிரிந்து போய்விடக்கூடும் என்ற நிலைதான் பா .ஜ.க வுக்கு இருக்கிறது. ஆட்சியைப் பிடிப்பதற்கான எந்தவித அறிகுறியும் தென்படாத நிலையில் காங்கிரசின் பலவீனம் ஒன்றையே நம்பி பா.ஜ.க அரசியல் செய்துவருகிறது.  ஊடகங்களால் தூக்கிப் பிடிக்கப்படும் நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவதன்மூலம் நடுத்தரவர்க்க ஆதரவைப் பெறமுடியும் என்ற எண்ணம் அதற்கு வந்திருப்பதையே அண்மைக்கால நிகழ்வுகள் காட்டுகின்றன. 
நரேந்திர மோடி அவரது ஆதரவு ஊடகங்கள் சிலவற்றால் முன்மொழியப்படுவதுபோல நாட்டை முன்னேற்றப் பாதையில் செலுத்தும் திறன் கொண்டவர்தானா என்ற கேள்வி நமக்கு எழும்.ஜனநாயக நெறிமுறைகளை மதிக்காமல் அதிகாரத்துவத்தால் எதையும் செய்துவிடலாம் என்ற அணு குமுறை கொண்ட நரேந்திர மோடியின் அரசாங்கம் குஜராத்தில் எப்படி செயல்படுகிறது என்பதற்கு ஒரே ஒரு உதாரணத்தைப் பார்ப்போம். மோடியின் பா.ஜ.க அரசாங்கம் தற்போது குஜராத் சட்டப்பேரவையில் ஒரு சட்டத்தை நிறைவேற்றியுள்ளது இனிமேல் விவசாயிகள் தமது நிலத்தில் கிணறு மூலமாகவோ, பைப் மூலமாகவோ விவசாயத்துக்குத் தண்ணீர் எடுக்கவேண்டுமென்றால் அதற்கு அரசாங்கத்திடம் லைசென்ஸ் பெற வேண்டும்.அப்படி லைசென்ஸ் பெறாமல் தண்ணீர் எடுத்து விவசாயம் செய்தால் அவர்களது நிலத்தை அரசாங்கம் பறிமுதல் செய்ய இந்த சட்டத்தில் வழிசெய்யப்பட்டிருக்கிறது. இதுமட்டுமின்றி ஒரு விவசாயி தனது நிலத்தில் எவ்வளவு தண்ணீர் எடுக்கலாம் என்பதை நீர்ப் பாசனத் துறை வரையறுக்கும். அதற்குமேல் தண்ணீர் எடுத்தால் அந்த விவசாயி கைது செய்யப்படுவார்.
இந்தப் புதிய சட்டத்தின்படி குஜராத் மாநில விவசாயிகள் அனைவரும் தமது நிலத்தில் இருக்கும் கிணறுகள் எத்தனை பம்ப்செட்டுகள் எத்தனை என்கிற விவரத்தை உடனடியாக அரசாங்கத்திடம் தெரிவிக்கவேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. 
எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்தாலும் குஜராத் சட்டசபையில் பெரும்பான்மை பலம் இருப்பதால் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. 

குஜராத் ஃ பார்முலாவைப் பயன்படுத்தி இந்தியாவை முன்னேற்றிவிடுவார் என்று நரேந்திர மோடியைப் பாராட்டுகிறவர்கள் சொல்கிறார்கள். இப்போது குஜராத்தில் நிறைவேற்றப்பட்டிருப்பதைப் போல ஒரு சட்டம் இந்தியா முழுமைக்கும் வரும் என்பதுதான் அதற்கு அர்த்தம். இதை இந்தியாவெங்கும் இருக்கும் விவசாயிகள் ஏற்றுக்கொள்வார்களா ? 

ஆயிரக்கணக்கான முஸ்லிம்களைக் கொன்றொழித்த ரத்தக்கறையை மோடி யின் அரசாங்கம் ஒருபோதும்  தனது கையிலிருந்து துடைத்துவிட முடியாது.இனப்படுகொலை என ஐ.நா அவை வரையறுத்திருக்கும் விளக்கம் குஜராத்தில் நடந்த படுகொலைகளுக்கு அப்படியே பொருந்தும். இந்திய அளவில் கணிசமான மக்கள் தொகையினராக இருந்தபோதிலும் ஒருங்கிணைந்த  அரசியல் சக்தியாக இல்லாத காரணத்தால் முஸ்லிம்கள் இந்தப் பிரச்னையை ஒரு அளவுக்குமேல் எழுப்ப முடியாமல் போய்விட்டது. குஜராத்தில் இருக்கும் முஸ்லிம்கள் மோடிக்கு வாக்களிக்கிறார்களே எனச் சிலர் சொல்கிறார்கள். இலங்கையில் ராஜபக்சே அரசாங்கத்துக்குக் கூடத்தான் தமிழர்கள் வாக்களித்திருக்கிறார்கள். அதனால் ராஜபக்சே  நல்லவர் என்று அர்த்தமா ? 

பா.ஜ.க வின் கூட்டத்தில் நரேந்திர மோடிக்கு அமோக ஆதரவு கிடைத்ததாக பா.ஜ.க ஆதரவு ஊடகங்கள் புளகாங்கிதம் அடைந்துகொண்டிருக்கும் வேளையில் குஜராத்தில் கொண்டுவரப்பட்டிருக்கும் சட்டம் குறித்த இந்த செய்தி வெளியாகி இருக்கிறது.  ஆனால் இதை ஒரு அரசியல் பிரச்சனையாக மாற்றும் அரசியல் உறுதி காங்கிரசுக்குக் கிடையாது. மதச் சார்பின்மை என்ற விஷயத்தில் ஒப்பீட்டளவில் சமரசம் செய்துகொள்ளாமல் உறுதியோடிருக்கும் இடதுசாரிக் கட்சிகள்தான் இந்த விஷயத்தை முன்னெடுத்துச் சென்று மோடியின் மக்கள் விரோத அணுகுமுறையை அம்பலப்படுத்தவேண்டும். அவர்களோடு முஸ்லிம் அமைப்புகள்  இணைந்து நின்றால் நிச்சயம் மோடியின் பிரதமர் கனவைத் தகர்த்தெறிய முடியும் 

Wednesday, February 27, 2013

பட்ஜெட் என்ற யானையின் மணி ஓசை



ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன் பொருளாதார கணக்கெடுப்பு அறிக்கை ஒன்றை மத்திய அரசு மக்களவையில் தாக்கல் செய்யும். பட்ஜெட்டில் என்னென்ன இடம்பெறப்போகிறது என்பதற்கான முன்னோட்டமாகவும் அதைக் கருதலாம். நாளை ( 28.02.2013) பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் பொருளாதார அறிக்கையை மத்திய அரசு இன்று தாக்கல் செய்திருக்கிறது. மானியங்களைப் பெருமளவுக்கு குறைக்கவேண்டும் என்ற ஆலோசனையை அந்த அறிக்கை வலியுறுத்தியிருக்கிறது.இது புதிய விஷயமல்ல . ஏற்கனவே எரிபொருள் மானியம் குறைக்கப்பட்டு வருகிறது. அதனால் பெட்ரோல் டீசல் விலை அவ்வப்போது ஏறிக்கொண்டே இருப்பதைப் பார்க்கிறோம். அதன் காரணமாக அத்தியாவசியப் பண்டங்களின் விலை அதிகரித்து பணவீக்கம் கூடிக்கொண்டிருக்கிறது.இந்த நிலையில் மானியங்களை மேலும் குறைக்கவேண்டும் என்ற ஆலோசனை எங்கு போய்  முடியுமோ என்ற அச்சத்தைத்தான் ஏற்படுத்துகிறது.

" பொருளாதார வளர்ச்சி என்பது முக்கியம்தான் என்றாலும் அது தன்னளவில் முடிந்துபோகும் ஒன்றல்ல" எனக் குறிப்பிட்டிருக்கும் பொருளாதாரக் கணக்கெடுப்பு அறிக்கை ' துரிதமான, தொடர்ச்சியான , அனைத்து தரப்பையும் உள்ளடக்கிய வளர்ச்சியாக ' அது இருக்க வேண்டும் என்பதை சுட்டிக்காட்டியிருக்கிறது. சமூக சேவைகளுக்கு ஒதுக்கப்படும் நிதி கணிசமாக அதிகரிக்கப்பட்டு வருவதை அந்த அறிக்கை 'பெருமிதத்தோடு' சுட்டிக்காட்டுகிறது. குறிப்பாக கல்விக்கும், சுகாதாரத்துக்கும் அதிக நிதி ஒதுக்கப்படுகிறதென அது குறிப்பிடுகிறது. மொத்த ஜி.டி .பி யில் 2007-08 ஆம் ஆண்டில் 5.9% ஆக இருந்த இந்த ஒதுக்கீடு 201-13 இல் 7.1% ஆக உயர்ந்திருக்கிறதாம். இந்த அறிக்கையின் மோசடித்தனத்துக்கு இதுவே ஒரு உதாரணம். சுகாதாரத் துறைக்கு ஜி.டி .பி யில் 2% ஒதுக்கவேண்டும் என்று பலகாலமாக கோரிக்கைவிடப்பட்டு வருகிறது. 2011-12 ஆண்டு பட்ஜெட்டில்  அது 0.29% ஆக மட்டுமே இருந்தது. உலகிலேயே சுகாதாரத் துறைக்கு மிகக்குறைவாக நிதி ஒதுக்கும்  நாடு இந்தியாதான் . ஒரு நபருக்கு இரண்டாயிரம் ரூபாய் என்ற அளவில்தான் நிதி ஒதுக்கப்படுகிறது. நாம் மிகவும் விமர்சிக்கிற இலங்கை சுமார் ஐந்தாயிரம் ஒதுக்குகிறது. நாம் போட்டியாகக் கருதுகிற சீனாவோ சுமார் வ்ட்டாயிரம் ரூபாய் ஒதுக்குகிறது. தாய்லாந்தில் அது 13 ஆயிரமாக இருக்கிறது. இந்தக் கேவலமான நிலையில் நாம் சமூக சேவைப் பிரிவுக்கு அதிக நிதி ஒதுக்கியிருப்பதாகச் சொல்வது எத்தனை பெரிய பொய்!

கல்வியைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். கல்விக்காக மத்திய வரிகளில் விதிக்கப்படும் மூன்று சதவீத கூடுதல் வரியை ஒழுங்காக செலவிட்டாலே போதும்  எவ்வளவோ முன்னேற்றம் நடந்திருக்கும். அந்தப் பணமெல்லாம் எங்கு போகிறது என்பது அமைச்சர் சிதம்பரத்துக்கே வெளிச்சம். கல்விக்கு ஜி.டி .பி யில் குறைந்தபட்சம் 6%ஆவது ஒதுக்கவேண்டும் எனக் கேட்கப்பட்டுவந்தாலும் இதுவரை 4% கூட ஒதுக்கவில்லை. மத்திய அரசின் சர்வ சிக்ஷா அபியான் திட்டம் மிகப்பெரிய தோல்வி என்பதை எந்தவொரு பள்ளிக்குச் சென்று பார்த்தாலும் தெரிந்துகொள்ள முடியும்.ஆண்டுதோறும் வெளியாகும் ASER அறிக்கைகள் இதற்கான சான்றுகள்

ஏழ்மை குறித்து இந்த அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கும் விஷயமும் விவாதத்துக்குரியது. டெண்டுல்கர் கமிட்டி பரிந்துரைத்த அளவுகொகோல்களின்படி 2004-05 இல் நாட்டின் மக்கள் தொகையில் 37.2% பேர் வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழ்கிறார்கள் என மதிப்பிடப்பட்டது. அது 2009-10 இல் 29.8% ஆகக் குறைந்துவிட்டதாம். அதாவது சுமார் ஐந்தேகால் கோடி பேர் வறுமையிலிருந்து விடுபட்டுவிட்டார்களாம் .என்னவொரு மாஜிக் இது! ஐந்து வருடங்களில் ஐந்து கோடி பேர் வறுமையிலிருந்து விடுபடுவதேன்றால் ஆண்டுக்கு ஒருகோடி பேர் எனக் கணக்கு வருகிறது. இந்த கணக்கின்படியே பார்த்தாலும்கூட வறுமையை முற்றாக ஒழிக்க இன்னும் முப்பது வருடங்களுக்கு மேல்  ஆகும்.
   
 உணவுப் பொருட்களின் விலை உயர்வின் காரணமாக பணவீக்கம் அதிகரித்துவருவதாக இந்த அறிக்கை சொல்கிறது. இந்த ஆண்டு நாட்டின் பல மாநிலங்களையும் கடுமையான வறட்சி பாதித்திருக்கிறது. அதனால்  பெருமளவு  தெரிகிறது எனவே இந்த பணவீக்கம் மேலும் அதிகரிக்கவே செய்யும். அது மேலும் விளைஎற்றத்திலும் வறுமையிலும் சென்றே முடியும். இத்தகைய சூழலில் மானியங்களைக் குறைக்கலாம் எனச் சொல்வது  இந்தியாவில் இருக்கும் ஏழை எளிய மக்களை மேலும் இக்கட்டில் ஆழ்த்தவே வகைசெய்யும்.

நேற்று(26.02.2013) டெல்லியிலிருந்து அவுட்லுக் பத்திரிகையின் நிருபர் என்னைத் தொடர்புகொண்டு பேசினார். ப.சிதம்பரம் பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்பட்டால் அதை நீங்கள் ஏற்பீர்களா என்று அபிப்ராயம் கேட்டார். " தமிழ்நாட்டிலிருந்து எவர் ஒருவர் பிரதமராக வந்தாலும் அதை நான் வரவேற்பேன். ஏனென்றால் பிரதமர் சார்ந்திருக்கும் மாநிலத்துக்குக் கூடுதலாக நிதி ஒதுக்கீடு கிடைக்கும் என்ற நிலை உள்ளது . திரு ப.சிதம்பரம் அவர்கள் தமிழ்நாட்டில் இருக்கும் காங்கிரஸ் தலைவர்களில் சிறந்தவர், திறமையானவர்.நல்ல பேச்சாளர் . அவர் நிதி அமைச்சராக எப்படி செயல்பட்டார் எனக் கேட்டால், அவரது அணுகுமுறை  மத்தியதர வர்க்கத்தைப் பிழிந்தெடுப்பதாக இருந்தது,  அடித்தட்டு மக்களை மேலும் எழைகளாக்கியது.மேல்தட்டு வர்க்கத்துக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் உதவி செய்தது" என்று நான் சொன்னேன்.ஐக்கிய முற்போக்கு கூட்டணி-2 அரசில்  நிதி அமைச்சராக திரு ப.சிதம்பரம் சமர்ப்பிக்கும் முழுமையான கடைசி பட்ஜெட் இது. அவரது பட்ஜெட் எந்தவிதத்திலும் மக்களுக்கு நன்மை பயப்பதாக இருக்கப்போவதில்லை என்பதற்கான மூன்று  முன்னறிவிப்புகள் வந்துவிட்டன: ஓன்று, குடியரசுத் தலைவர் உரை, இரண்டு ரயில்வே பட்ஜெட், மூன்றாவது , பொருளாதார கணக்கெடுப்பு அறிக்கை.