இந்தித் திணிப்பை எதிர்த்து 1938 டிசம்பர் 8 ஆம் நாள் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு கைதியாகவே 1939 சனவரி 15 இல் தன் இன்னுயிரை நீத்து மொழிப்போரில் முதல் களப்பலியானவர் நடராசன். அவரது நினைவு நாள் சனவரி 15. அந்த நினைவு நாளை தமிழக அரசு சார்பில் கடைபிடிக்க நடவடிக்கை எடுக்கவும்;
நடராசன் இறந்த சிலநாட்களின்பின் கைதாகி மொழிப்போரில் இரண்டாவது களப்பலியானவர் தாளமுத்து. அவரை அடக்கம் செய்யும் நேரத்தில் " தந்தை பெரியாரின் ஒரு பக்கம் நடராசனும் இன்னொரு பக்கம் தாளமுத்துவும் இருப்பதுபோல சிலை நிறுவுவோம்' என்ற பேரறிஞர் அண்ணா அவர்கள் முழங்கிய சூளுரையை நிறைவேற்றும் விதமாக சென்னையில் பொருத்தமானதொரு இடத்தில் சிலை நிறுவவும்
தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்துவோம்.
இந்தியென்றும், சமஸ்கிருதமென்றும் மொழிப்பகை சூழும் இந்த நேரத்தில் சாதியற்ற தமிழர்களாய் ஒன்றிணைவோம்!
No comments:
Post a Comment