தமிழ்த் திரைப்பட இயக்குனர் கே.பாலச்சந்தர் மறைந்துவிட்டார் என்ற செய்தி சிலநாட்களாகவே அவ்வப்போது பரவி மறைந்துவந்தது. இன்று அது உண்மையாகிவிட்டது.
நாடகத் தன்மை தூக்கலாக இருந்தபோதிலும் அவர் இயக்கிய திரைப்படங்கள் பார்த்துவிட்டுவந்த பின்பும் பேசத்தக்கனவாக இருந்தன. எனது பதின் பருவத்தில் நான் பார்த்த அரங்கேற்றம், தப்புத்தாளங்கள், அபூர்வராகங்கள்,முதலான படங்களின் பாத்திரங்களோடு என்னை நான் அடையாளம் கண்டுகொள்ள முடிந்ததில்லை. ஆனால் என்னை மிகவும் அவை வசீகரித்தன. ஆங்கிலத்தில் பேசி அதை உடனே தமிழில் மொழிபெயர்க்கும் சுந்தர்ராஜனைக்கூட சகித்துக்கொள்ளம்கூடிய பாத்திரமாக அவர் அபூர்வராகங்களில் படைத்திருந்தது நினைவுக்கு வருகிறது.
சரிதா என்ற அற்புதமான நடிகையைத் தந்ததற்காக அவர் ரஜினியை அறிமுகப்படுத்தியதைக்கூட நாம்
மறந்துவிடலாம் எனத் தோன்றுகிறது.
பாலச்சந்தரின் படங்களை ரசித்தவர்கள் அவற்றைவிடவும் நல்லபடங்களைத் தேடித்தான் போயிருப்பார்கள், ஒருபோதும் மலிவான கமர்ஷியல் குப்பைகளை நாடியிருக்கமாட்டார்கள். அந்த வகையில் தமிழில் நல்ல ரசனை உருவாகக் காரணமாக இருந்த கே.பாலச்சந்தர் அவர்களுக்கு என் அஞ்சலி!
No comments:
Post a Comment