பகவத் கீதையை தேசிய நூலாக அறிவிக்கவேண்டும் என அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கூறியிருக்கிறார். தமிழில் பாரதி கீதையை மொழிபெயர்த்திருப்பதை அறிவோம். அவர் மொழிபெயர்ப்பதற்கு முன் 14 மொழிபெயர்ப்புகள் வெளிவந்துள்ளன. 1981 வரை தமிழில் பகவத் கீதைக்கு 20 மொழிபெயர்ப்புகள் வெளிவந்துள்ளன. மற்ற இந்திய மொழிகளில் இந்த அளவுக்கு கீதையின் மொழிபெயர்ப்புகள் வெளிவந்துள்ளனவா?
தருண் விஜய்க்கு நடத்தியதுபோல சுஷ்மா ஸ்வராஜுக்கும் பாராட்டுவிழா நடத்துவார்களென்று நம்புகிறேன். ஏனென்றால் "(பகவத் கீதை) முக்கியமான ஒரு மோக்ஷ சாஸ்திரம். மனிதன் சகல துக்கங்களிலிருந்தும் விடுபடும் வழியைப் போதித்தலே இந்நூலின் முதற்கருத்து" என்று பாரதி பாராட்டியிருக்கிறார். 'தமிழறிஞர்கள்' சும்மா இருக்க முடியுமா? பாரதி பாராட்டிய, மொழிபெயர்த்த நூலை தேசிய நூலாக அறிவித்தால் 'தமிழ் அறிஞர்கள்' அதை வரவேற்றுத்தானே ஆகவேண்டும்?
No comments:
Post a Comment