Sunday, July 24, 2011

தாராசுரம் :வாளேந்திப் போரிடும் பெண்கள்?

தாராசுரத்தில் பெண்கள் போல் தோற்றமளிக்கும் சிலர்  வாளேந்திப் போரிடும் காட்சியைச் சித்திரிக்கும் சிற்பம் ஒன்றைப் பார்த்தேன்.பெண்கள் போரில் ஈடுபட்டதாக சங்கப் பாடல்களில் குறிப்பேதும் இருக்கிறதா என்று தேடினேன். உ.வே.சா பதிப்பித்த புறநானூறு (1935) கைவசமிருந்தது. அதில் அப்படியான செய்தி எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. அதன்பிறகு பேராசிரியர் மாதையன் அவர்களைத் தொலைபேசியில் தொடர்புகொண்டுக் கேட்டேன். சங்க இலக்கியத்தில் அத்தகைய செய்தி எதையும் தாம் பார்த்ததாக நினைவில்லை ஆனால் பிற்காலத்தில் ஆட்சி அதிகாரத்துக்குப் பெண்கள் வந்திருக்கிறார்கள்.அப்போது அவ்வாறு நடந்திருக்கலாம் என்றார். தாராசுரம் கோயில் 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்பதால் பின்னாளில் பெண்கள் போரில் ஈடுபடுகிற நிலை வந்ததா என்று தெரியவில்லை. இந்தச் சிற்பத்தை உன்னிப்பாகப் பார்த்தால் இதில் இடம்பெற்றிருப்பது பெண் உருவங்கள்தானா என்ற ஐயமும் எனக்கு ஏற்பட்டது. இதுகுறித்து கலை வல்லுனர்களும் வரலாற்றறிஞர்களும்தான் விளக்கமளிக்கவேண்டும்.

No comments:

Post a Comment