Friday, July 6, 2012

பிராமி எழுத்தைக் கண்டுபிடித்தவர்கள் பிராமணர்கள்?





வணக்கம்
ஆத்திரமூட்டல் மூலம் கவனத்தை ஈர்ப்பதென்பது ஆய்வுலகைப் பீடித்திருக்கும் ஒரு நோய் . கல்வெட்டியல் ஆய்வையும் அது இப்போது பற்றிக்கொண்டுவிட்டது. மரியாதைக்குரிய திரு.ஆர்.நாகஸ்வாமி அவர்கள் எழுதியிருக்கும் Mirror of Tamil and Sanskrit என்ற நூல் குறித்து அவர் இந்து நாளேட்டுக்கு வழங்கியிருக்கும் நேர்காணல் ஆழ்ந்த ஆய்வை வெளிப்படுத்துவதற்குப் பதிலாக ஆத்திரமூட்டிக் கவனத்தை ஈர்க்கும் அணுகுமுறையைக் கொண்டிருப்பது வேதனை அளிக்கிறது.
 
அசோகர் புத்த மதத்தைத் தழுவினாலும் அவர் அந்த மதத்தைப் பரப்புவதாக எங்குமே குறிப்பிட்டதில்லை என நாகஸ்வாமி தெரிவித்திருக்கிறார். இதை மறுத்து திரு. பி.என்.சுப்ரமணியன் இந்து நாளேட்டுக்குக் கடிதமொன்றை அனுப்பியிருக்கிறார். அதை இங்கே தருகிறேன் : 

"Asoka embraced Buddhism no doubt. But nowhere does he mention that he 
is spreading Buddha Dharma" 

"Thus speaks the Beloved of the Gods, (Asoka): I have been a Buddhist 
layman for more than two and a half years, but I did not make much 
progress. Now for more than a year I have drawn closer to the Order 
and have become more ardent. The gods, who in India up to this time 
did not associate with men, now mingle with them, and this is the 
result of my efforts. Moreover this is not something to be obtained 
only by the great, but it is also open to the humble, if they are 
earnest and they can even reach heaven easily. This is the reason for 
this announcement that both humble and great should make progress and 
that the neighboring peoples also should know that the progress is 
lasting, And this investment will increase and increase abundantly, 
and increase to half as much again. This matter must he inscribed here 
and elsewhere on the hills, and wherever there is a stone pillar it is 
to be engraved on that pillar. You must go out with this document 
throughout the length and breadth of your district. This announcement 
has been proclaimed while on tour; 256 nights have been spent on 
tour."

from:  PN Subramanian

பிராமி எழுத்தைக் கண்டுபிடித்தவர்கள் பிராமணர்கள் என்று  நாகஸ்வாமி கூறியிருக்கிறார். அசோகன் பிராமியைவிட காலத்தால் முந்தைய தமிழ் எழுத்துப் பொறிப்புகள் பொருந்தல் அகழ்வாய்விலும் வேறு சில அக்ழ்வாய்வுகளிலும் கிடைத்துள்ள நிலையில் அசோகன் பிராமியிலிருந்தே தமிழ் எழுத்து உருவானது என்கிற பழைய வாதத்தையே முன்வைப்பது மட்டுமின்றி பிராமியைக் கண்டுபிடித்தவர்கள் பிராமணர்கள்தாம் என்று எந்த ஆதாரமும் இல்லாமல் நாகஸ்வாமி பேசியிருப்பது அதிர்ச்சி மதிப்பீட்டுக்காகத்தான் என என்ன வேண்டியிருக்கிறது. இதுகுறித்து ctamil மடல் குழுமத்தில் திரு.ஜார்ஜ் ஹார்ட் சரியான மறுப்புகளைப் பதிவு செய்திருக்கிறார். 

இந்த மடல் குழுமத்தில் இருக்கும் தமிழ் அறிஞர்கள் இதுகுறித்துத் தமது கருத்துகளைப் பதிவு செய்தால் உதவியாக இருக்கும். 

ரவிக்குமார் 

2 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. "எந்த ஆதாரமும் இல்லாமல் நாகஸ்வாமி "
    No lay man can give opinion on this. experts have to discuss in a forum and come to some tentative conclusion. It is difficult to come to a firm conclusion in such historical events where the evidence is sparse and prone to different interpretation. As Budha said " where knowledge is not sufficient suspend judgement"

    ReplyDelete