Showing posts with label caste violence. Show all posts
Showing posts with label caste violence. Show all posts
Sunday, January 13, 2013
Monday, January 7, 2013
கல்கி : கொலையா? துர்மரணமா ?
விழுப்புரம் மாவட்டம் வானூரில் ப்ளஸ் ஒன் படித்துவந்த தலித் பெண் கல்கி அவரது வீட்டின் பின்புறம் இருக்கும் சவுக்குத் தோப்பில் 04.01.2013 அன்று பகல் மூன்றரை மணியளவில் பிணமாகத் தொங்கியிருக்கிறார் .அவர் தற்கொலை செய்துகொள்ள எந்த முகாந்திரமும் இல்லை. மூன்று மணிவரை வீட்டில் டி வி பார்த்தபடி தனது தம்பியோடு சேர்ந்து படம் வரைந்து கொண்டிருந்த அவர் மின்சாரம் தடை பட்டதால் கொல்லைப்புறம் சென்றுள்ளார். அரை மணி நேரம் ஆகியும் அவர் வீடு திரும்பாததால் அவரது அம்மாவும் உறவினர்களும் தேடியுள்ளனர். அப்போது சவுக்குமரம் ஒன்றில் 15 அடி உயரத்தில் அவரது உடல் அவரது துப்பட்டாவில் தூக்கிடப்பட்டுத் தொங்கிக் கொண்டிருந்திருக்கிறது.
மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றபோது அவர் இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர். காவல் துறை அதை சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்திருக்கிறது. அவர் கொல்லப்பட்டிருந்தால் நிச்சயம் கொலையாளிகளைக் கண்டுபிடித்துவிடுவோமென விழுப்புரம் எஸ் பி என்னிடம் போனில் உறுதியளித்தார். சந்தேக மரணம் எனப் பதிவு செய்யப்பட்டதைப் பெரும்பாலும் மறந்துவிடுவதே காவல்துறையின் வழக்கம் என நான் அவரிடம் சொன்னேன். புதிதாகப் பொறுப்பேற்றிருக்கும் அவர் தன மீது நம்பிக்கை வைக்குமாறு கேட்டுக்கொண்டார்.
கல்கி படித்துவந்த பள்ளி மாணவர்களும் அவரது ஊர்க்காரர்களும் மூன்று நாட்கள் போராடியும் பலன் இல்லாததால் அவரது உடல் அவரது பெற்றோர்களால் அடக்கம் செய்யப்பட்டது.
எந்தவொரு அவச் சொல்லுக்கும் ஆளாகாத கல்கி எவ்வாறு இறந்தார் என்பது புரியாத புதிராக இருக்கிறது. அண்மைக்காலமாகப் பரப்பப்பட்டுவரும் சாதி வெறியின் காரணமாக இப்படி தலித் பெண்களைக் கொலை செய்வதற்கு மர்மக் கும்பல் எதுவும் உருவாகியிருக்கிறதோ என ஐயப்பட வேண்டியிருக்கிறது.
யாருமில்லாதவர்களுக்குத் தெய்வம்தான் துணை என்பார்கள். தலித் மக்களுக்கு அரசாங்கம்தான் கண்கண்ட தெய்வம் .அந்த தெய்வம் நீதி வழங்குமா அவர்களையே பலி கொள்ளுமா என்பதை காலம்தான் சொல்லவேண்டும்.

பள்ளி மாணவி கல்கி
கடைசியாக கல்கி வரைந்த ஓவியம்
பிணவறையில் கல்கி
Thursday, December 6, 2012
A party in retreat
The Pattali Makkal Katchi, a party predominantly of Vanniyars, a most backward class community of the northern districts, is now in a back-to-basics mode, opting for a limited, casteist agenda at the expense of an overly ambitious Tamil nationalist project
When identity-based political parties find their core constituency under threat, they take recourse to the coarsest forms of exclusivist, sectarian politics. In Tamil Nadu, the Pattali Makkal Katchi, a party predominantly of Vanniyars, a most backward class community of the northern districts, is now in a back-to-basics mode, opting for a limited, casteist agenda at the expense of an overly ambitious Tamil nationalist project. After finding itself on the losing side in two successive elections, the 2009 Lok Sabha election and the 2011 Assembly election, the PMK has been struggling to retain its original support base among rural Vanniyars. To win back some of this lost base, party founder S. Ramadoss has now hit upon the strategy of invoking familiar caste demons, pointing to the Dalit community as the natural enemy of the Vanniyars in a long-drawn social conflict. Although the immediate provocation for the revival of the PMK’s casteist agenda appears to be the recent caste-clash in Dharmapuri district following the marriage of a Vanniyar woman with a Dalit man, the real reasons run deeper. As a party too closely identified with Vanniyars, the PMK was unable to rally together large sections of other castes under the banner of Tamil nationalism. Actually, the party made sincere efforts to involve the Viduthalai Chiruthaigal Katchi, a Dalit party with influence in the same northern parts of the State, in the Tamil nationalist project, using issues such as the ethnic conflict in Sri Lanka and the Cauvery dispute. But a quantum jump in electoral fortunes eluded both parties. Indeed, for many Vanniyar youth who joined the party fired up on caste pride, the PMK began to lose its charm. It was then only a matter of time before the PMK again resorted to the Vanniyar card to keep the flock together.
However, in trying to win back Vanniyars, Dr. Ramadoss is stoking the embers of a caste conflict. Quite provocatively, the PMK founder is calling for amendments to the Scheduled Castes and Scheduled Tribes (Prevention of Atrocities) Act, 1989, to prevent what he describes as its “misuse” by Dalit youth. If anything, the law needs tightening to ensure better conviction rates. But, for Dr. Ramadoss, this is part of a strategy to draw in all those who want to counter Dalit assertion in northern Tamil Nadu. For a party like the PMK, which is trying to protect a shrinking voter base, caste conflict is the easiest way to polarise votes and mobilise support. But such cynical, manipulative politics offers limited purchase, and is doomed to fail over the long term. The sooner Dr. Ramadoss learns his lessons, the better it would be for the future of the PMK.
Tuesday, December 4, 2012
”இறந்துபோன அம்மாவைப் பார்ப்பதைவிடவும் துயரமானது எரிக்கப்பட்ட வீட்டைப் பார்ப்பது ” - ரவிக்குமார்
தர்மபுரிக்கு அருகில் தலித் மக்கள்மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து உடனடியாக இங்கே ஆய்வு மேற்கொள்ளும் உங்களை நான் பாராட்டுகிறேன். பல்கலைக்கழகத்தில் இப்படி மாணவர்கள் விவாதிப்பது ஒருவிதத்தில் எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. இன்னொருபுறம் இது என்னை அச்சமடையவைக்கிறது. ஒரு வன்முறை சம்பவம் எப்படி கருத்தரங்கப் பொருளாக மாறுகிறது என்பதை நினைத்து நான் அச்சப்படுகிறேன். எல்லாம் அமைப்பின் பகுதிகளாக மாற்றப்படுகின்றனவா என்று எனக்குள் கேட்டுக்கொள்கிறேன். விபத்து என்பது எப்படி போக்குவரத்தின் அங்கமாக மாறிவிட்டதோ அப்படி எதிர்ப்பும் இப்போது அமைப்பின் அங்கமாக மாறுகிறதோ என கவலைகொள்கிறேன். முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் உங்களைப்போல நானும் மாணவனாக இருந்தேன். அண்ணாமலைப் பல்கலைக்க்ழகத்தில் படிக்கும்போதுதான் இதே தர்மபுரி பகுதியில் நக்ஸலைட்டுகள் போலீஸால் வேட்டையாடப்பட்டார்கள். அப்போது அதைப்பற்றி கருத்தரங்கு நடத்தலாமென எங்களுக்குத் தோன்றவில்லை. நாமும் போராடுகிறவர்களோடு இணையவேண்டும் என்றுதான் தோன்றியது. அது சாகசத்தின்மேல் ஏற்பட்ட ஈர்ப்பாக இருக்கலாம். நாங்கள் அப்படித்தான் இருந்தோம். ஆனால் இன்று இங்கெ இருக்கும் மாணவர்கள் வன்முறையை ஒரு ஆய்வுப் பொருளாக எடுத்துக்கொண்டிருக்கிறீர்கள்.
ஈழத்துக் கவிஞர் விலவரத்தினம் தனது அனுபவம் ஒன்றைச் சொன்னார். ஒரு இரவு தனது வீட்டில் குடும்பத்தோடு படுத்திருக்கிறார். திடீரென அவரது மனைவி ‘ ஏதோ கெட்டது நடக்கப் போகிறது. நாம் இங்கே இருக்கவேண்டாம்’ எனச் சொல்லி எல்லோரையும் வெளியில் அழைத்து வருகிறார். அன்றிரவு உறவினர் வீட்டில் படுத்திருக்கிறார்கள். நள்ளிரவு கடந்ததும் பெரியதொரு வெடி சப்தம். வெளியில் வரப் பயந்து வீட்டிலேயே இருக்கிறார்கள். விடிந்தபின் பார்த்தால் சிங்கள விமானப் படையின் குண்டு வீச்ச்சில் விலவரத்தினத்தின் வீடு தரைமட்டமாகிக் கிடக்கிறது. அழுது அரற்றுகிறார்கள். அவர் தனது சட்டைப் பையைத் துழாவுகிறார்., வீட்டின் சாவி கையில் அகப்படுகிறது. எடுத்துப் பார்க்கிறார். அவரது மகன் சொல்கிறான்’ வீடே போய்விட்டது. எதற்கு இந்த சாவி? அதையும் வீசி எறியுங்கள்’ . வில்வரத்தினம் தன் மகனிடம் சொல்கிறார்’ இல்லையப்பா, நமக்கு ஒரு வீடு இருந்தது என்பதற்கு இந்த சாவிதான் சாட்சி.இதை வீசி எறியக்கூடாது’. தமிழ்நாட்டில் அப்படி நூற்றுக்கணக்கான சாவிகள் தலித் மக்களிடம் இருக்கின்றன. நாளை நீங்களெல்லாம் கள ஆய்வுக்காக தர்மபுரி போக இருப்பதாக அறிந்தேன். அங்கே அதுபோன்ற சாவிகள் இருநூறுக்கும் அதிகமாக இருக்கின்றன. அங்கிருக்கும் அந்த மக்களிடம் அந்த சாவிகளை வாங்கிப் பாருங்கள். அந்த சாவிகளைக்கொண்டு சாதியவாதிகளின் அடைத்துக்கிடக்கும் மனங்களைத் திறக்க முடியுமா என்று முயற்சித்துப் பாருங்கள்.
தர்மபுரிக்குச் செல்லும்போது அங்கே எரிந்து கிடக்கும் வீடுகளில் என்னென்ன பொருட்கள் சேதமடைந்தன என்று கணக்கெடுக்காதீர்கள் .அது வருவாய்த் துறையினரின் வேலை. எரிக்கப்பட்ட வீட்டின் முன்னால் ஐந்து நிமிடம் நில்லுங்கள், அந்த இழப்பை உணர்ந்துபாருங்கள். ஒரு மனிதரின் இழப்பில் மிகவும் துயரம் தருவது அம்மாவின் மரணம். கண்ணெதிரில் அம்மாவின் சடலத்தைப் பார்ப்பதுபோல துயரமானது வெறெதுவும் இருக்கமுடியாது. நீங்களெல்லாம் வயதில் இளையவர்கள், அந்தத் துயரம் உங்களில் பலருக்குத் தெரியாது. அம்மாவின் சடலத்தைப் பார்ப்பதைவிடவும் துயரமானது எரிக்கப்பட்ட வீட்டைப் பார்ப்பது. ஒரு வீடு எரிக்கப்படும்போது ஆடைகள் எரிந்துபோகின்றன, உடைமைகள் எரிந்து போகின்றன, கல்விச் சான்றிதழ்கள் எரிந்துபோகின்றன, பணம், நகைகள் சாம்பலாகின்றன. அவற்றையெல்லாம் திரும்பவும் வாங்கிக்கொள்ளலாம். ஆனால் ஒரு வீட்டோடு சேர்ந்து எரிந்து போகும் நினைவுகளை எப்படி திரும்பப் பெறுவது? ஒரு வீட்டோடு வைத்து எரிக்கப்படும் கனவுகளை எப்படித் திரும்பப் பெறுவது? அம்மாவின் சடலத்தைப் பார்ப்பதைவிடவும் துயரமானது எரிக்கப்பட்ட வீட்டைப் பார்ப்பது. அந்தத் துயரத்தை நீங்கள் உணரமுடியுமா என நாளைக்கு நீங்கள் முயற்சித்துப் பாருங்கள்.
அந்த தர்மபுரியில் அதே நாயக்கன்கொட்டாய் கிராமத்தில் 1984 ஆம் ஆண்டு 'தர் மபுரி எதிரொலிகள் ' என்ற எனது முதல் கவிதைத் தொகுப்பு வெளியிடப்பட்டது. அப்பு, பாலன் சிலை திறப்பில் ஆயிரக்கணக்கில் திரண்டிருந்த தோழர்களை, அவர்கள் இசைத்த புரட்சிப் பாடல்களை எண்ணிப் பார்க்கிறேன். திரும்பிய திசையெல்லாம் செங்கொடிகள் அசைந்த ஊர்கள். இப்போது அதே கிராமங்களில் தலித்துகளின் வீடுகளை எரித்த நெருப்பு செங்கொடிகளை விடவும் சிவப்பாக மேலெழுந்துள்ளன. இந்த நாட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன மிச்சம் இருக்கிறது? அவர்களது போராட்ட வடிவங்களும் அமைப்பின் அங்கங்களாக மாறிவிடும்போது அவர்கள் தம்மைத் தாமே மாய்த்துக்கொண்டு அழிவதுதவிர வேறென்ன வழி இருக்கிறது?
நேற்று நான் ஒரு டிவி சேனலின் விவாதத்தில் கலந்துகொண்டேன். இப்போது திரைப்படங்களைப் போலவே ’டாக் ஷோ’க்களும் கவனம் பெற்று வருகின்றன. அவற்றை எப்படி ’ஸ்பைஸியாக’ அமைப்பது என்ற வித்தை நமது ஊடகத் துறையினருக்கு அத்துப்படியாகிவிட்டது. இப்படியான ‘டாக் ஷோக்கள்’ அதில் கலந்துகொள்பவர்களின் சாமர்த்தியத்தைக் காட்டிக்கொள்ளும் வார்த்தை யுத்தங்களாக மாறிவிடும்போது அவற்றால் என்ன பயன் ? இதோ இங்கே நான் உங்கள் முன்னால் பேசுவதும்கூட ஒரு ‘பெர்ஃபார்மன்ஸாக’ மாறிக்கொண்டிருக்கிறது. இதனால் அங்கே வன்முறையால் பாதிக்கப்பட்ட தலித்துகளுக்கு என்ன பயன் ?
நான் இப்படிப் பேசும்போது ‘இதென்ன இவனொரு சினிக்காக இருக்கிறான்’ என்று உங்களுக்குத் தோன்றலாம். ஆமாம். அது உண்மைதான், உங்களையும் இதேபோல அவநம்பிக்கைகொள்ளுங்கள் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் சூழலின்மீது அருவருப்பு கொள்ளுங்கள், உங்கள் வகுப்பறையை, பல்கலைக்கழகத்தை வெறுங்கள். அத்தகைய அருவருப்பு உங்களுக்கு ஏற்பட்டால் நீங்கள் மனிதர்களாகத் தொடங்கிவிட்டீர்கள் என அர்த்தம். மனிதர்களாக உங்களை மறுபடியும் சந்திக்க விரும்புகிறேன், இப்போது விடை பெறுகிறேன்.
( 04.12.2012 செவாய் அன்று பாண்டிச்சேரிப் பல்கலைக்கழகத்தின் இதழியல் துறை மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசியதன் சுருக்கம் )
Thursday, November 22, 2012
பாமகவினர் தூண்டுதலால் தருமபுரி கலவரம்: திமுக குழு அறிக்கை
22 November 2012 09:39 PM IST
தருமபுரி கலவரத்தில் பாமகவில் உள்ள சில நிர்வாகிகளின் தூண்டுதலும், பங்கும் இருக்கிறது என்று திமுகவின் ஆய்வுக் குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.
தருமபுரியில் தலித் வீடுகள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக திமுக அமைப்புச் செயலாளர் பெ.வீ.கல்யாணசுந்தரம் தலைமையில் 5 பேர் கொண்ட குழு புதன்கிழமையும், வியாழக்கிழமை அங்கு ஆய்வு மேற்கொண்டனர்.
இது தொடர்பாக வியாழக்கிழமை அந்தக் குழு வெளியிட்ட அறிக்கை:-
* தருமபுரி கலவரம் திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒன்று! காதல் திருமணம் மட்டுமே இதற்குக் காரணமில்லை. பாமகவில் உள்ள சில நிர்வாகிகளின் தூண்டுதலும் பங்கும் உள்ளது.
* காதல் திருமணம் தொடர்பாக பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரை கிருஷ்ணாபுரம் காவல்துறையினர் முறையாக கையாளவில்லை.
காவல்துறையில் பணியாற்றும் இரண்டு சமூகத்தைச் சார்ந்த இரு காவல்துறை அதிகாரிகளின் பொறுப்பற்ற அணுகுமுறையால் இந்தப் பிரச்னை இன்னும் பெரிதாகி உள்ளது. இருவரும் தத்தம் சாதிப் பற்றுடன் பிரச்னையைக் கையாண்டுள்ளனர்.
* கலவரச் சம்பவம் ஆரம்பமாகி 4 மணி நேரம் கழித்தே காவல்துறையினரும், தீயணைப்புத் துறையினரும் சம்பவ இடத்துக்கு வந்துள்ளனர். * காவல் துறையினரின் அலட்சியத்தாலே பெரிய அளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது. கலவரத்தில் தொடர்புடைய உண்மைக் குற்றவாளிகள் பலர் இன்னும் கைது செய்யப்படாத நிலையில், இந்தச் சம்பவத்துக்கு சிறிதும் தொடர்பில்லாத சில அப்பாவிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
* அரசின் நிவாரணங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையாகச் சென்றடையவில்லை. ஒரு சிலருக்கு இழப்பீடும் வழங்கப்படவில்லை. இழப்பீடு தொகையான ரூ. 50 ஆயிரம் போதுமானதாக இல்லை.
* இரு தரப்பு மக்களிடமும் இன்னும் பதற்றமும் அகலவில்லை. காவல்துறையின் கைது நடவடிக்கையினால் ஆண்கள் நடமாட்டம் கிராமங்களில் காணப்படவில்லை. மாணவர்கள் போலீஸ் பாதுகாப்புடன், அவர்கள் வாகனத்திலேயே பள்ளிக்குச் சென்று வருகின்றனர்.
* அமைதி பேச்சுவார்த்தைக்கு மாவட்ட நிர்வாகம் இதுவரை அமைதிக் குழுவைக்கூட அமைக்கவில்லை
-இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
http://dinamani.com/latest_news/article1350470.ece

Monday, July 23, 2012
Resisting Caste Violence - NTUI on Maruti-Suzuki
Statement issued by NEW TRADE UNION INITIATIVE on the incidents at Maruti-Suzuki’s Manesar Plant
Secretary, New Trade Union Initiative NTUI
Dated 19 July, 2012, New Delhi
The present spate of violence at the Manesar plant of Maruti Suzuki as a fallout of a protest by workers against a casteist comment made by a supervisor at a dalit worker reflects the continuing use of ‘caste’ as a method of subordination and oppression reflecting the persistence of deeply rooted primordial structures of society that complement capitalist exploitation. When co-workers protested, the management suspended the abused worker and refused to re-instate him and instead resorted to brutal violence, orchestrated by goons, against the workers and targeting the union leaders.
It is important to note that the Maruti Suzuki management is yet to constitute the Grievance Redressal Committee and the Welfare Committee at its Manesar plant which was agreed upon after the last dispute in October 2011. The present dispute is a well planned instigation by the management to systematically derail the ongoing negotiations on the Charter of Demands submitted by the Maruti Suzuki Workers Union in April 2012 and to discredit the sustained and united struggle of the workers at the Manesar plant.The New Trade Union Initiative condemns the use of wanton violence by the Maruti Suzuki management to suppress workers’ protests in defence of their human and democratic rights and disrupt the union. The NTUI also condemns the manner in which the Government of Haryana and the Gurgaon police have consorted with the Maruti Suzuki management by arresting over 100 workers including union leaders and key activists without conducting due investigation and pre-supposing that the workers are solely responsible for the violence. This position of continued support to the Maruti Suzuki of the Government of Haryana demonstrates the lack of political will to protect workers in the state despite its own Labour Department initiating proceedings against Maruti Suzuki for violating the provisions of signed agreement of October 19, 2011 at its Manesar plant.
NTUI demands that the management of Maruti Suzuki India Ltd. –
Immediately lift the illegal lockout at the Manesar Plant
Immediately and unconditionally reinstate the suspended worker
Withdraw all false criminal charges filed against workers with the Haryana Police
Respect the Right to Association and negotiate in good faith with the democratically elected Maruti Suzuki Workers’ Union.
NTUI demands that the Government of Haryana
Immediately Stop the arbitrary and motivated arrests of workers and union leaders by the Gurgaon police without following due investigation and release all workers arrested so far.
Immediately declare the lockout at the Maruti Suzuki India Ltd’s Manesar Plant to be illegal
Initiate Prosecution proceedings against management of Maruti Suzuki India Ltd. for gross violation of the agreement of 19 October 2011.
Ensure that companies operating in the State of Haryana respect the laws of the land including laws that protect the rights of workers.
Gautam Mody
Thursday, September 15, 2011
Wednesday, September 14, 2011
Subscribe to:
Posts (Atom)