Thursday, November 22, 2012

பாமகவினர் தூண்டுதலால் தருமபுரி கலவரம்: திமுக குழு அறிக்கை




22 November 2012 09:39 PM IST
தருமபுரி கலவரத்தில் பாமகவில் உள்ள சில நிர்வாகிகளின் தூண்டுதலும், பங்கும் இருக்கிறது என்று திமுகவின் ஆய்வுக் குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.
தருமபுரியில் தலித் வீடுகள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக திமுக அமைப்புச் செயலாளர் பெ.வீ.கல்யாணசுந்தரம் தலைமையில் 5 பேர் கொண்ட குழு புதன்கிழமையும், வியாழக்கிழமை அங்கு ஆய்வு மேற்கொண்டனர்.
இது தொடர்பாக வியாழக்கிழமை அந்தக் குழு வெளியிட்ட அறிக்கை:-
* தருமபுரி கலவரம் திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒன்று! காதல் திருமணம் மட்டுமே இதற்குக் காரணமில்லை. பாமகவில் உள்ள சில நிர்வாகிகளின் தூண்டுதலும் பங்கும் உள்ளது.
* காதல் திருமணம் தொடர்பாக பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரை கிருஷ்ணாபுரம் காவல்துறையினர் முறையாக கையாளவில்லை.
காவல்துறையில் பணியாற்றும் இரண்டு சமூகத்தைச் சார்ந்த இரு காவல்துறை அதிகாரிகளின் பொறுப்பற்ற அணுகுமுறையால் இந்தப் பிரச்னை இன்னும் பெரிதாகி உள்ளது. இருவரும் தத்தம் சாதிப் பற்றுடன் பிரச்னையைக் கையாண்டுள்ளனர்.
* கலவரச் சம்பவம் ஆரம்பமாகி 4 மணி நேரம் கழித்தே காவல்துறையினரும், தீயணைப்புத் துறையினரும் சம்பவ இடத்துக்கு வந்துள்ளனர். * காவல் துறையினரின் அலட்சியத்தாலே பெரிய அளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது. கலவரத்தில் தொடர்புடைய உண்மைக் குற்றவாளிகள் பலர் இன்னும் கைது செய்யப்படாத நிலையில், இந்தச் சம்பவத்துக்கு சிறிதும் தொடர்பில்லாத சில அப்பாவிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
* அரசின் நிவாரணங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையாகச் சென்றடையவில்லை. ஒரு சிலருக்கு இழப்பீடும் வழங்கப்படவில்லை. இழப்பீடு தொகையான ரூ. 50 ஆயிரம் போதுமானதாக இல்லை.
* இரு தரப்பு மக்களிடமும் இன்னும் பதற்றமும் அகலவில்லை. காவல்துறையின் கைது நடவடிக்கையினால் ஆண்கள் நடமாட்டம் கிராமங்களில் காணப்படவில்லை. மாணவர்கள் போலீஸ் பாதுகாப்புடன், அவர்கள் வாகனத்திலேயே பள்ளிக்குச் சென்று வருகின்றனர்.
* அமைதி பேச்சுவார்த்தைக்கு மாவட்ட நிர்வாகம் இதுவரை அமைதிக் குழுவைக்கூட அமைக்கவில்லை
-இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

http://dinamani.com/latest_news/article1350470.ece

No comments:

Post a Comment