Monday, December 6, 2010

துணை முதல்வரிடம் மனு



இன்று மாண்புமிகு துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடலூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டார். அவரிடம் நான்  மனு ஒன்றை அளித்தேன். அதில் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்துள்ளேன்:

1. சேதமடைந்த நெற்பயிருக்கு ஹெக்டேருக்கு 15 ஆயிரம் ரூபாய் வழங்கவேண்டும்.

2. முழுதும் சேதமடைந்த தகுதிவாய்ந்த குடிசைகளுக்குப் பதிலாக ‘ கலைஞர் வீட்டு வசதித் திட்டத்தில் ‘ இந்த ஆண்டே வீடுகள் கட்டித் தரவேண்டும்.

3. வெள்ளியங்கால் ஓடை , பழைய கொள்ளிடம் , மணவாய்க்கால முதலியவற்றின் கரைகளைப் பலப்படுத்தவேண்டும்.

4. நீரில் மூழ்கிய கிராமங்களில் இருக்கும் மாணவர்களுக்குப் பாடப் புத்தகங்கள் , சீருடைகள் வழங்கவேண்டும்.

5. கைவினைஞர்களுக்கும், மீனவர்களுக்கும் இழப்பீடு தரவேண்டும். விவசாயக் கூலித் தொழிலாளர்களுக்கு 30 நாட்கள் தேசிய வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வேலை தரவேண்டும்

07.12.2010 அன்று தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் தலைமையில் நடைபெற உள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன நிவாரணம் வழங்குவது என்பதை அக்கூட்டத்தில் முடிவு செய்ய உள்ளனர்.

No comments:

Post a Comment