Sunday, December 12, 2010
கானல் - தலாத் அப்பாஸி
"நவம்பர் 20" என்றாள் சகோதரி ஆக்னஸ்
‘‘நவம்பர் 20" நான் எழுதிக்கொண்டேன்
" ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பது " என்றாள் சகோதரி ஆக்னஸ்
‘‘ 1980’’ நான் எழுதினேன்
அவள் அதை சொன்னவிதத்தில் பழக்கப்பட்ட ஒரு தொனி இருந்தது. இருந்தபோதிலும்
எல்லோருக்குள்ளும் ஒரு தயக்கம் இருந்தது. இறுதியாகக் கடைசி படிவத்தில்
கையெழுத்திட வேண்டியதுதான். வருடந்தோறும் அதிக எண்ணிக்கையிலான
பெற்றோர்கள், தங்களுடைய குழந்தைகளை சகோதரி ஆக்னஸிடம் ஒப்படைப்பதற்காக
நம்பிக்கை இல்லத்தை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள். ஏனெனில் அந்தக்
குழந்தைகள் மனவளர்ச்சிக் குன்றியவர்களாகவும், மனநோய் உற்றவர்களாகவும்,
வலிப்பு நோய் உடையவர்களாகவும், சிறு மூளை பாதிக்கப்பட்டவர்களாகவும்,
முடக்குவாதத்தால் தாக்குண்டவர்களாகவும் இருந்தார்கள். இவையெல்லாம் சில
எடுத்துக்காட்டுகள் மட்டுமே, காரணங்களின் முழுமையான பட்டியலைச் சொல்வது
கடினம். பெற்றோர்கள் அனைவரும் இளவயதினராகவும்,முப்பதுக்கும்
நாற்பதுக்கும் இடைப்பட்ட வயதினராகவும் இருந்தார்கள். ஏனெனில் நம்பிக்கை
இல்லம் பத்துவயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கானது. நான் ஒமருடன்
வந்திருப்பது போல பெரும்பாலோர் தனியாக தாங்களே அந்த இல்லத்தைத் தேடி
வந்திருந்தார்கள்.
நான் எனக்காகத் தயங்கவில்லை. நான் ஒரு பொம்மையைப்போல நடந்து கொள்வது
ஏனென்றால் நான் வறண்டுவிட்டேன். களைப்படைத்து விட்டேன். வீட்டைவிட்டு
வெளியேறுவதற்கு முன்பே நான் மனதளவில் களைப்படைந்துவிட்டேன். நான்
எப்பொழுதும் மன இறுக்கத்தோடு இருக்கிறேன். ஒரு இயல்பான சூழலில் அவனைப்
பொது இடங்களுக்கு அழைத்துச் செல்லவேண்டி இருக்கும்பொழுது மன
இறுக்கமடைகிறேன். எப்பொழுதையும் விட இன்று நான் மேசமாக நடந்துகொண்டேன்.
அதை அவன் உணர்ந்து கொண்டான். ஆகவே மிகவும் அடம் பிடித்தான். அவனுக்கு
டயாபரை அணிவிக்கும்போது ஒரு பை நிறைய மிட்டாய்களை அவன் வாயில் திணிக்க
வேண்டும். எல்லா நேரங்களிலும். ஒவ்வொரு முறையும், ஒரு டஜன் மிட்டாயகளைப்
பற்களுக்கிடையில் வைத்து அவன் மெல்லுவான். அவனுடைய வயதில் டயாபரை
அணிந்துகொள்வதற்கு எதிரான அவனுடைய நடவடிக்கைகள் புரிந்து கொள்ளக் கூடியது
தான். இது எல்லா நேரங்களிலும் நிகழ்வது இல்லை, எனினும் நான் எப்போதும்
அதற்குத் தயாராக இருக்கவேண்டும்.
இந்த மிட்டாய் பற்களில் ஒட்டிக்கொள்ளக்கூடியது. அப்படியே விழுங்கிவிட
முடியாத ஜவ்வு போன்றது. அவன் மெல்ல வேண்டும் அதுவரை எனக்குக் கொஞ்ச
நேரம் கிடைக்கும்.
" இந்த ஜவ்வு மிட்டாய் அவனுடைய பற்களுக்கு நல்லதல்ல"
நான் அவனுக்கு மயக்கமருந்து வாங்கச் செல்லும் ஒவ்வொரு முறையும் குழந்தை
நல மருத்துவர் இதைச் சொல்வார். ஆனால் அதை அவர் வலியுறுத்துவதில்லை.
நான் அவனுக்கு மிட்டாய் கொடுப்பதை நிறுத்திவிடுவேன் என்று அவர்
எதிர்பார்ப்பதில்லை.
நான் அவனை ஜீன்சுக்குள் திணித்து ஜிப்பைப் போட்டேன். பெல்ட்டை
இறுக்கினேன். அதை அவனால் அவிழ்க்க முடியாது. அதனால்தான் அவனுக்கு
ஜீன்ஸ் போடுவது, எளிதில் கழற்றக்கூடிய முழுக்கால்சட்டை போடுவதில்லை.
அவன் எதை அதிகமாக வெறுக்கிறானோ அதைக் கொண்டு அவனுடைய கைகளையும் வாயையும்
ஓய்வின்றி வைத்திருக்க வேண்டும். அவன் மிகவும் வெறுப்பது அவனுக்கு சேணம்
பூட்டுவதைத்தான். நான் அவனுக்குப் பிடித்த உருளைக்கிழங்கு சிப்ஸை அவனிடம்
கொடுத்தேன். அது உப்பிடப்பட்டது. அவனுக்கு மிகவும்
பிடித்தமானது.அதுவும்கூட அவன் உடலுக்குக் கேடுதான் என்று மருத்துவர் ஏனோ
சொன்னது கிடையாது.
திடீரென நான் அவனை லாவகமாகப் பிடித்துக் கொண்டேன். என் கைகளில் அவனுடைய
இரண்டு கைகளையும் பின்னிக்கொண்டேன். அவன் என்ன நடக்கிறது என்பது
குறித்து சிந்திப்பதற்குள் நான் அவனைப் பிடித்துக்கொண்டேன். சிறு
கரண்டியை அவன் பல்லிடுக்கில் திணித்தேன். அவன் மயக்க மருந்தைத்
துளித்துளியாக விழுங்கும்வரை அவை எல்லாம் தீரும்வரை கரண்டியை அங்கேயே
வைத்திருக்க வேண்டும். என்னுடைய பற்களை நான் இறுகக் கடித்துக்
கொண்டிருக்கிறேன் என்பது எனக்குத் தெரிந்தது. நாக்கைக் கடித்துக்
கொண்டுவிட்டேன். அவனுடைய நகங்களை நறுக்க நேரமில்லாததால் நான்
அழவேண்டியிருந்தது. டாக்ஸி டிரைவர் வேறு கீழே நின்றுகொண்டு ஹாரனை
அடித்துக் கொண்டிருந்தான்.
என்னுடைய அபார்ட்மென்ட்டிலிருந்து இரண்டு பிளாக் தள்ளி சாலையின்
குறுக்காக டாக்ஸியை அவன் நிறுத்தி இருந்தான். நான் களைப்படைவதற்கான
இன்னொரு காரணம் அது. ட்ராஃபிக் விளக்குகளையும் , பச்சை விளக்கு
எரிவதற்குள் சாலையைக் கடக்க வேண்டும் என்பதையும் நினைத்தாலே அலுப்பாக
இருந்தது.
(தேன்மொழி தமிழாக்கம் செய்திருக்கும் இக்கதையை முழுதாகப் படிக்க மணற்கேணி மூன்றாவது இதழை வாங்குங்கள் )
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment