Saturday, December 4, 2010

எல்லாம் மழை

கடந்த ஒரு வாரமாகப் பெய்துவரும் மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் கடலூர் மாவட்டம் பாதிக்கப்பட்டிருக்கிறது. அதிலும் எனது காட்டுமன்னார்கோயில் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட குமராட்சி , காட்டுமன்னார்கோயில் ஒன்றியங்கள்  மிகமோசமாகப் பாதிப்படைந்துள்ளன. குமராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த நந்திமங்கலம் கிராமத்தில் சாலையில் வெள்ளம் பாய்கிறது. படகில்தான் ஊருக்குள் போகவேண்டும். நான் , அதிகாரிகளை அந்த கிராமங்களுக்கு அழைத்துச் சென்று நிவாரணப் பணிகளை மேற்கொண்டேன். கடந்த ஒரு வார காலமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பெரும்பான்மையான கிராமங்களுக்கும் சென்று பார்வையிட்டு நிவாரணப் பணிகளை மேற்கொண்டேன். அப்போது நான் எனது மொபைல் போனில் எடுத்த  பதிவுகள் இவை :









தினத்தந்தி நாளேட்டில் வெளியான செய்தி 

மத்திய அரசிடம்
பேரிடர் நிவாரண நிதியை பெற தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்
ரவிக்குமார் எம்.எல்.ஏ. பேட்டி


சிதம்பரம், டிச.1-

மத்திய அரசிடம் பேரிடர் நிவாரண நிதியை பெற தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என்று ரவிக் குமார் எம்.எல்.ஏ. கூறினார்.

வெள்ள பாதிப்பு

கடலூர் மாவட்டத்தில் பெய்த தொடர் மழையினால் சிதம்பரம், காட்டுமன்னார் கோவில் ஆகிய பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டது. சிதம்பரத்தில் குடியிருப்பு பகுதிகளில் மழைவெள்ளம் தேங்கியது.வடிகால்களில் வெள்ளம் கரைபுரண்டு வந்த தால் இன்னும் குடியிருப்பு பகுதிகளில் மழை வெள்ளம் வடியவில்லை.

இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.இதை அறிந்த காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ரவிக் குமார் நேற்று வெள்ளம் பாதித்த மாரியப்பாநகர், சிவ புரி மெயின்ரோடு போன்ற பகுதிகளை பார்வையிட் டார்.

பின்னர் சிதம்பரத்தில் ரவிக் குமார் எம்.எல்.ஏ.நிருபர் களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

பிற மாவட்டங்களால் பாதிப்பு

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெய்த மழையினால் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் பகுதிதான் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளது.நமது மாவட்டத்தில் பெய்த மழையை விட அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட் டங்களில் பெய்த மழை யினால் தான் வீராணம் ஏரி நிரம்பி அதன் உபரி நீர் வெள்ளியங்கால் ஓடையில் திறந்து விடப்பட்டதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட் டது.

புயல்,மழை,வெள்ளம் பற்றி வானிலை ஆய்வு மையம் தெரிவித்தவுடன் அதற்குரிய அதிகாரிகள் இன்னும் விரைந்து செயல்பட்டு இருந்தால் வெள்ள சேதங்களை தடுத்து இருக்க முடியும்.கடந்த 2 நாட்களாக அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், மாவட்ட கலெக்டர் ஆகியோருடன் நானும் வெள்ள சேதங்களை பார்வையிட்டேன். அமைச்சர் பார்வையிட்ட பிறகு தான் நிவாரண பணிகள் நடக்கிறது என்றாலும் போதுமான முன் தயாரிப்புகளை வட்டார அளவிலான அதிகாரிகள் மேற்கொள்ள வில்லை என்பது வருந்தத்தக்கது.

அரிசி

உதாரணமாக வெள்ள பாதிப்பு இடங்களில் தேவை யான அரிசி இருப்பை கூட அதி காரிகள் எடுத்து வைக்க வில்லை. திருநாரைïர், நந்தி மங்கலம் ஆகிய பகுதிகள் ஆண்டுதோறும் பாதிக்கப்படும் என்று தெரிந்தும் அவர்களுக்கு படகு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது.தற்போது இந்த குறைகள் களைய பட்டு உள்ளது.120 மூட்டை அரிசி வழங்கப்பட்டு உள்ளது. அரசு ஆணைப்படி பெரியவர்களுக்கு 450 கிராம் அரிசி, 200 கிராம் பருப்பு, பால் 125 மில்லி லிட்டர் போன்ற பல்வேறு பொருட்கள் வழங்கப்பட வேண்டும்.

வெள்ள பாதிப்புக்கு உடன டியாக நிவாரண மையம் அமைக்க வேண்டும்.மத்திய அரசு பேரிடர் நிவாரண நிதியை ஒதுக்க வேண்டும்.இதை மாநில அரசும், எம்.பி.க்களும் வலி யுறுத்த வேண்டும்.விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி. இது பற்றி மத்திய நிதி மந்திரியிடம் மனு கொடுக்கஉள்ளார். மத்திய அரசு ஆந்திரா போன்ற மாநிலங் களில் ஏற்படும் வெள்ள பாதிப்புகளுக்கு முக்கியத் துவம் கொடுக்கிறது. தமிழ் நாட்டை புறக் கணிக்கிறது.

முதலை பண்ணை

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குறைந்தபட்சம் ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்.முற்றிலும் பாதிக் கப்பட்ட குடிசை வீடுகளை இந்த ஆண்டு முதலே தமிழக அரசு கலைஞர் வீடு வழங் கும் திட்டத்தில் சேர்க்க வேண் டும்.வெள்ளத்தில் பலியான மாணவன் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரண உதவி வழங்க வேண்டும். வல்லம்படுகையில் முதலைகள் அதிகரித்து வரு கிறது.இதற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் வல்லம் படுகை அல்லது நெய்வேலியில் முதலை பண்ணை அமைக்க வேண்டும்.மழை வெள்ளத்தில் வட்டார அளவிலான அதி காரிகள் சரியாக செயல் பட வில்லை என்றால் அர சுக்கு தான் கெட்டப் பெயர் ஏற்படும்.இன்னும் மழை பெய்யும் என்று வா னிலை ஆய்வு மையம் தெரி வித்து உள்ளதால் இந்த பகுதிக்கு சிறப்பு அதிகாரிகளை நிய மித்து வெள்ள சேதங்களை கணக்கெடுக்க வேண்டும். வெற்றிலை பயிருக்கு அரசு நிவாரணம் வழங்குவதிலலை.ஆகவே வெற்றிலை பயிருக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்லப்படுவதை நிறுத்தினால் தான் இப்பகுதி பாதிக்காது.

இவ்வாறு ரவிக் குமார் எம்.எல்.ஏ. கூறி னார்.

பேட்டியின் போது மாவட்ட செயலாளர் திரு மாறன், அரசு ஊழியர் ஐக்கிய பேரவை நீதிவளவன், மாவட்ட துணை செயலாளர் செல்லப்பன், தமிழ்முரசு, நெடுமாறன், இளவரசு, ரத்தினவேல், கவுன்சிலர்கள் தியாகு, ராஜலட்சுமி, இன்ப வளவன் ஆகியோர் உடனிருந்த னர்.

No comments:

Post a Comment