Thursday, February 14, 2013

மூன்று நாட்களுக்கு ஒருவருக்கு தூக்கு தண்டனை




இந்தியாவில் 2001- 2011 க்கு இடைப்பட்ட ஆண்டுகளில் மொத்தம் 1455 மரண தண்டனைகள் கொடுக்கப்பட்டிருப்பதாக தேசிய குற்ற ஆவண மையம் கூறியிருக்கிறது.அதாவது, இந்தியாவில் சராசரியாக மூன்று நாட்களுக்கு ஒருவருக்கு மரண தண்டனை கொடுக்கப்படுகிறது. இதில் உத்தரப் பிரதேசத்தில்தான் அதிகபட்சமான மரண தண்டனைகள் வழங்கப்பட்டிருக்கின்றன. 2001-11 காலத்தில் அங்கே 370 பேருக்குத் தூக்கு தணடனை கொடுத்திருக்கிறார்கள்.பீகாரில் 132,மகராஷ்டிராவில் 125,கர்னாடகாவிலும் தமிழ்நாட்டிலும் தலா 95, மத்திய பிரதேசத்தில் 87,ஜார்கண்ட் 81,மேற்குவங்கம் 79,கேரளாவில் 34. பேருக்குத் தூக்கு தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது.இந்தத் தகவலை மனித உரிமைகளுக்கான ஆசிய மையம் ( ஏ.சி.எச்.ஆர்) அறிக்கை ஒன்றில் வெளிப்படுத்தியிருக்கிறது.  தூக்கு தண்டனை என்பது குற்றங்களைத் தடுப்பதற்கு எவ்விதத்திலும் உதவவில்லை. காந்தியை சுட்ட கோட்சேவைத் தூக்கில் போட்டோம் .ஆனால், அது இந்திரா காந்தியின் படுகொலையையோ,ராஜிவ்காந்தியின் கொலையையோ தடுக்கவில்லை.  2004 ஆம் ஆண்டுமுதல் 2012 வரை இந்தியாவில் எவரும் தூக்கில் போடப்படவில்லை.ஆனால், அந்த காலத்தில்தான் கொலைக் குற்றங்கள் குறைந்திருந்தன என்பதைப் புள் ளிவிவரங்கள் காட்டுகின்றன. ’கண்ணுக்குக் கண் என்று பழிவாங்கக் கிளம்பினால் நாட்டில் எவருக்கும் கண் இல்லாமல் போய்விடும்’ என காந்தி சொன்னார். அவரது பெயரைச் சொல்லி ஆட்சி நடத்துகிறவர்கள் , இதை மறந்துபோனது ஏன்?

1 comment:

  1. பழி வாங்குதலுக்கும் குற்றவியல் நடைமுறைகளின் படி நீதி மன்றம் தண்டனை தருவதற்கும் உள்ள அடிப்படை வேறுபாடு தெரியாதவர்கள் தயவு செய்து காந்தியின் பெயரால் திரிபு வாதம் செய்யாதீர்கள்

    உங்களை எல்லாம் எப்படி மக்கள் சபைக்கு தேர்வு செய்கிறார்கள் என்று யோசித்தால் உங்களுக்கே அசிங்கமா இருக்கும்

    ReplyDelete