Monday, February 10, 2014

மணற்கேணி 21 தலையங்கம்

கைதிகளிடம் கருணைகாட்டுங்கள்

கருணைமனுமீது முடிவெடுக்கக் காலதாமதம் ஆனதைக் காரணம் காட்டி பதினைந்து மரணதண்டனைக் கைதிகளின் தண்டனையை ஆயுள் தண்டனையாக உச்சநீதிமன்றம் குறைத்திருக்கிறது. வரலாற்றுச் சிறப்புவாய்ந்த இந்தத் தீர்ப்பை வழங்கிய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி திரு சதாசிவம் அவர்களது தலைமையிலான அமர்வை நாம்பாராட்டத்தான் வேண்டும்.வீரப்பன் கூட்டாளிகள் எனக்குற்றம் சாட்டப்பட்டு தூக்குக் கயிறை எதிர்பார்த்துக் காத்திருந்த நான்கு அப்பாவித் தமிழர்கள் இந்தத் தீர்ப்பினால் இப்போது உயிர்பிழைத்திருக்கிறார்கள். உச்சநீதிமன்றம் தண்டனைக் குறைப்பு செய்திருந்தாலும் அவர்கள் விடுதலை செய்யப்படுவதென்பது மாநில அரசுகளின் கையில்தான் இருக்கிறது. 

ஆயுள் சிறைவாசிகளை நன்னடத்தையின் அடிப்படையில் தண்டனைக் குறைப்பு செய்து தலைவர்களின் பிறந்த நாட்கள், சுதந்திரதினம், குடியரசுதினம் போன்ற தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நாட்களில் விடுவிப்பது மாநில அரசுகளின் வழக்கம்.அதன்படி 2013 டிசம்பர் மாதத்தில் ஆந்திர மாநிலஅரசு 388 ஆயுள் கைதிகளை விடுதலை செய்திருக்கிறது.ஐந்து ஆண்டுகள் சிறையில் இருந்த பெண் கைதிகள்அனைவரும் ஆந்திர அரசால் விடுவிக்கப்பட்டுள்ளனர்ஏழுஆண்டுகள் சிறையில் இருந்த ஆண் கைதிகளும் விடுதலைஆகி உள்ளனர். 65 வயதைத் தாண்டிய அனைத்துக்கைதிகளும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்கர்னாடக மாநிலஅரசு அங்கிருக்கும் ஆயுள் சிறைவாசிகளை விடுதலைசெய்வது தொடர்பான வழிகாட்டு நெறிகளை அண்மையில்உருவாக்கியிருக்கிறதுஆனால் ஆயுள் சிறைவாசிகளைஅதிகமாகக் கொண்ட தமிழ்நாட்டிலோ அவர்களைவிடுவிப்பதற்கு எந்தவொரு நடவடிக்கையும்எடுக்கப்படவில்லை

இந்திய அளவில் இருக்கும் தண்டனை சிறைவாசிகளில்54.1சதவீதத்தினர் ஆயுள் சிறைவாசிகள் எனத் தேசிய குற்றஆவண மைய (என்.சி.ஆர்.பிபுள்ளிவிவரம் கூறுகிறதுஇந்ததேசிய சராசரியைவிடக் கூடுதலாக 64.1 சதவீத ஆயுள்சிறைவாசிகளைக் கொண்ட மாநிலமாக தமிழ்நாடுஇருக்கிறது

மற்ற மாநிலங்களைப்போலவே தமிழ்நாட்டிலும்நீண்டநாட்களாக சிறையில் இருப்பவர்களைப் புத்தாண்டிலும்,தலைவர்களின் பிறந்த நாட்களின்போதும் நன்னடத்தையின்அடிப்படையில் தண்டனைக் குறைப்பு செய்து விடுவித்துவந்தனர். 2006 ஆம் ஆண்டு அரசாணை எண் G.O.Ms.No.873, Home Department, dated 14.09.2006 அடிப்படையில் 10ஆண்டுகள் சிறையிலிருந்த 472 ஆயுள் சிறைவாசிகள்விடுதலை செய்யப்பட்டனர். 2007 ஆம் ஆண்டுபிறப்பிக்கப்பட்ட அரசாணை எண் G.O .Ms.No.1326, Home Department, dated 12.9.2007  அடிப்படையில் 5 பெண்கைதிகள் உட்பட 190 ஆயுள் சிறைவாசிகள் விடுதலைசெய்யப்பட்டனர். 2008 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்டஅரசாணை எண் G.O.Ms.No.1155, Home Department, dated 11.09.2008  அடிப்படையில் 1406 ஆயுள் சிறைவாசிகள்விடுதலைசெய்யப்பட்டனர்ஆனால், 2011 இல் ஆட்சி மாற்றம்நடைபெற்று அதிமுக அரசு பதவியேற்றபின் தண்டனைக்குறைப்பு செய்து ஆயுள் சிறைவாசிகள் எவரும் விடுதலைசெய்யப்படவில்லை

தி.மு. ஆட்சியின்போது 2008 ஆம் ஆண்டில்பிறப்பிக்கப்பட்ட அரசாணை இப்போதும்செல்லுபடியாகக்கூடியதுதான் என்பதை சில மாதங்களுக்கு முன் சென்னை உயர்நீதிமன்றம் உறுதிசெய்திருக்கிறதுஅந்தஅரசாணையைக் குறிப்பிட்டு தனது மகனைவிடுவிக்கவேண்டும் என சென்னை காசிமேடு பகுதியைச்சேர்ந்த மல்லிகா என்பவர் தொடுத்த வழக்கில் அவரதுவாதத்தை ஏற்றுக்கொண்ட சென்னை உயர்நீதிமன்ற அமர்வு,அவரது மகன் இளங்கோ என்ற ஆயுள் சிறைவாசியை 2013நவம்பர் 14 ஆம் தேதி விடுதலை செய்திருக்கிறது

தமிழ்நாட்டிலிருக்கும் ஆயுள் சிறைவாசிகளின் நிலைமை எப்படியிருக்கிறது என்பதற்கு தென்தமிழன் ஒரு உதாரணம்.தற்போது திருச்சி மத்திய சிறையில் ஆயுள் சிறைவாசியாகஇருக்கும் திருதென்தமிழன் மிகவும் உடல் நலிவுற்றநிலையில் எவ்வித நினைவுமின்றி மருத்துவமனையில்கிடக்கிறார்அவர் கைதியாகவே 25 ஆண்டுகளைக்கழித்துவிட்டார். 1987 ஆம் ஆண்டு அவர்கைதுசெய்யப்பட்டார். 1988 ஆம் ஆண்டு அவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டதுஅவருக்கு 2006, 2007 ஆம்ஆண்டு தமிழக அரசால் பிறப்பிக்கப்பட்ட அரசாணைகளின்அடிப்படையிலேயே விடுதலை கிடைத்திருக்கவேண்டும்.ஆனால் சிறை நிர்வாகமும்காவல்துறையும் எதிர்ப்புதெரிவித்த காரணத்தால் அவர் விடுவிக்கப்படவில்லைஅதைஎதிர்த்து அவர் தொடுத்த வழக்கை (Madras High Court , W.P.NO.20511 of 2008 ) விசாரித்த நீதியரசர் சந்துருஅவர்கள், தென்தமிழனை விடுவிக்காததற்கு அரசு தரப்பில்முன்வைக்கப்பட்ட வாதங்களை நிராகரித்ததுடன் அவரைவிடுவிப்பதுகுறித்து பரிசீலிக்கவேண்டும் என 2009 நவம்பர்மாதம் தீர்ப்பு வழங்கினார்(Madras High Court ,Thenthamizhan Alias Kathiravan vs State Of Tamil Nadu on 24 November, 2009,DATED : 24.11.2009) ஆனால் அந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்து தமிழக அரசு தடை ஆணை பெற்றுவிட்டதால் அவர் விடுதலை ஆகவில்லை. தற்போது அவர் கால்கள் செயலிழந்து படுத்த படுக்கையாகிவிட்டார். நினைவும் தவறிவிட்டது. ஏறத்தாழ ஒரு நடைப் பிணமாக மாறிவிட்ட அவரை திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்திருந்தார்கள். அவரது காலில் விலங்கிட்டு மருத்துவமனையின் கட்டிலோடு சேர்த்துப் பிணைத்து வைத்திருக்கிறார்கள் என்ற செய்தி நாளேடுகளில் வெளிவந்தது. அவரை விடுதலை செய்யவேண்டும் என அவர் மகள் தொடுத்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்யத் தாமதித்ததால் இப்போது அவருக்கு ஒருமாத காலம் பரோல்மட்டும் வழங்கியிருக்கிறது.


No comments:

Post a Comment