Tuesday, February 4, 2014

ஏமாற்ற நினைக்கும் காங்கிரஸ் அரசு!

மக்களவையின் கடைசிக் கூட்டத் தொடரில் தலித்துகளையும் சிறுபான்மையினரையும் ஏமாற்ற நினைக்கும் காங்கிரஸ் அரசு! 


நாளை துவங்கவிருக்கும் மக்களவை கூட்டத்தொடரில்  மொத்தம் 33 மசோதாக்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்படவுள்ளன. தற்போது கிடப்பில் இருக்கும் 29 மசோதாக்கள் மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்படவுள்ள 4 மசோதாக்கள் இதில் அடங்கும். 


எஸ் சி/ எஸ் டி பிரிவினருக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்கும் மசோதா இதில் இடம்பெற்றிருந்தாலும் வன்கொடுமைத் தடுப்பு சட்டத்தை வலிமையாக்கும்  விதத்தில் பல மாதங்களுக்கு முன்பே வடிவமைக்கப்பட்ட திருத்த மசோதா இந்தக் கடைசிக்  கூட்டத் தொடரிலும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படாதது அதிர்ச்சியளிக்கிறது. அதுபோலவே வகுப்புவாதக் கலவரத் தடுப்பு மசோதாவும் தற்போதைய பட்டியலில் இல்லை. 


தலித் மற்றும் சிறுபான்மையினரை ஏமாற்ற நினைக்கும் காங்கிரஸ் அரசு நிச்சயம் அதற்கான விளைவை எதிர்வரும் தேர்தலில் சந்திக்கும்.

No comments:

Post a Comment