Wednesday, February 19, 2014

அந்த நான்கு தமிழர்களை நினைவிருக்கிறதா?



ராஜிவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஏழுபேர் மட்டுமல்ல இன்னும் பல மரண தண்டனை ஆயுள் தண்டனை சிறைவாசிகள் இருக்கிறார்கள் என்பதை தமிழ்நாடு மறந்துவிட்டதா? காலையிலிருந்து  உணர்ச்சிவெள்ளம் முகநூலை மூழ்கடித்துக்கொண்டிருக்கிறதே! நண்பர்களே! இந்தியாவிலேயே ஆயுள் சிறைவாசிகளின் விகிதம் அதிகமாக இருக்கும் மாநிலம் தமிழ்நாடுதான். இந்தியாவிலேயே அதிகமாக குண்டர் சட்டத்திலும் தேசிய பாதுகாப்புச் சட்டத்திலும் கைது செய்யப்பட்டிருப்பதும் தமிழ்நாட்டில்தான். நுய்ற்றுக்கு மேற்பட்டவர்கள் ஐந்து ஆண்டுகளுக்கும் அதிகமாக விசாரணைக் கைதிகளாக இருப்பது தமிழ்நாட்டில்தான். ஏழு பேரை விடுவிப்பதாக அறிவித்திருக்கும் முதல்வரைப் பாராட்டுவோம். ஆனால் இந்தத் தீர்ப்புக்கு முன்னோடியாக வீரப்பன் கூட்டாளிகள் எனக் குற்றம் சாட்டப்பட்ட நான்கு தமிழர்களின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டதே அப்போது ஏன் இந்த குதூகலம் இல்லை? அவர்கள் என்ன கொஞ்சம் மாற்றுக் குறைவான தமிழர்களா? அவர்களை விடுவிக்கவேண்டிய அதிகாரம் கர்னாடக அரசிடம் உள்ளது. தமிழக முதல்வர் அந்த நான்குபேரையும் விடுவிக்கவேண்டும் எனக் கர்னாடக முதல்வரை வலியுறுத்துவாரா? அதற்காக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுவாரா? 

No comments:

Post a Comment