அன்பின் ரவிக்குமார்,
மணற்கேணி படித்து முடித்தேன். பூஃகோவின் நேர்காணல் மிகுந்த முக்கியத்துவமான விடயங்களைக் கொண்டிருக்கிறது. இன்றைய காலகட்டத்தின் பொருத்தப்பாடுகளை மேலும் உணர்த்துகிறது.
இலங்கை அரசியல் நிலவரங்கள் தொடர்பான கட்டுரைகள் அனைத்தும் வேறொரு தளத்தில் புரிந்துகொள்ள முடிகிறது. இவ்விதமான அக்கறைகள் மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கின்ற உங்கள் கணணோட்டங்கள் அவசியமானவைதானே...? விக்னேஸ்வரன் அவர்களின் உரை முஸ்லீம் மக்களின் இன்றை நிலையை தொட்டுச் செல்கிறது. அதில் குறிப்பிடப்டும் மருதமுனை எனது அடுத்த ஊராகும்.
மணற்கேணி தனது ஒருகையில் தொன்மையான அடையாளங்களையும், நவீன அரசியல் இலக்கியம் என்ற வகைப்பாடுகளை மறுகையிலுமாக வைத்திருக்கிறது.
உங்களுடைய தர்மபுரி கவிதைகள் மனதின் அறத்தை சுட்டி நிற்கின்றன.
இவ்விதமான காலத்தின் பிரதிபலிப்புகளோடு சமூக அக்கறைகளோடு உங்கள் அகத்தின் பிரதி பலிப்பை உங்கள் கவிதைகள்போல மணற்கேணியும் பிரதிபலிக்கின்றது.
வாழ்த்துக்களும் அன்பும்.
அனார்