24.11.2012 சனிக் கிழமை
ஹோட்டல் ராம் இண்டர்நேஷனல்
காலை 10 மணி முதல் மாலை
5 மணி வரை
அன்புடையீர் வணக்கம்
அந்தத் துறையாலும் அத் துறையில் ஆர்வம் கொண்ட அறிஞர்களின் தனிப்பட்ட முயற்சிகளாலும் தமிழின் தொன்மை உலகறியச் செய்யப்பட்டிருக்கிறது. தமிழக வரலாறு குறித்த ஆய்வுகளுக்கு இவை பெருமளவில் பங்களிப்பைச் செய்திருக்கின்றன.
இந்திய அளவிலும் உலக அளவிலும் தமிழகத் தொல்லியல் ஆய்வுகள் அறியப்பட்டிருந்தாலும் போதுமான நிறுவன ஆதரவுகளைப் பெறுவதிலும் புதிய ஆய்வாளர்களை ஈர்ப்பதிலும் பல்வேறு சிக்கல்களை இத் துறை சார்ந்த அறிஞர்கள் சந்தித்து வருகின்றனர்.
தொல்லியல் துறையில் நிகழ்ந்துவரும் ஆய்வுகளும் கண்டுபிடிப்புகளும் பிற துறைகளைச் சேர்ந்த கல்வியாளர்களுக்கு அவ்வளவாகத் தெரியாத காரணத்தால் இந்தத் துறைகளுக்கிடையில் பரஸ்பர கொடுக்கல் வாங்கல் நிகழவில்லை. இதனால் ஒருங்கிணைந்த விதத்தில் தமிழ் இலக்கியம், வரலாறு , பண்பாடு முதலானவற்றை ஆராய்வதில் பின்னடைவு காணப்படுகிறது. புதிய ஆய்வாளர்கள தொல்லியல் துறை நோக்கி வராமல் போவதற்கு அது ஒரு காரணமாக இருக்கிறது.
இந்த நிலையை மாற்றி தமிழகத் தொல்லியல் , கல்வெட்டியல் துறைகளில் நடைபெற்று வரும் ஆய்வுகளை மேலும் பரந்த தளத்துக்கு எடுத்துச் செல்வதில் மணற்கேணி எப்போதும் ஆர்வம் காட்டி வருகிறது. இத் துறையைச் சேர்ந்த அறிஞர்களான திரு. நடன. காசிநாதன், பேராசிரியர் விஜய வேணுகோபால் , பேராசிரியர் கா.ராஜன், பேராசிரியர் சு.ராஜவேலு உள்ளிட்டப் பலரது கட்டுரைகளை மணற்கேணி வெளியிட்டிருக்கிறது. பொருந்தல், கொடுமணல் அகழ்வாய்வுகள் குறித்தும் பதிவுகளைச் செய்திருக்கிறது. அதன் தொடர்ச்சியாக
' தமிழகத் தொல்லியல் ஆய்வுகள்
- 1961 - 2011 ' என்னும் தலைப்பில் ஆய்வரங்கு ஒன்றை மணற்கேணி நடத்தத் திட்டமிட்டிருக்கிறது .
24.11.2012 சனிக்கிழமை அன்று பாண்டிச்சேரியில் இந்த ஆய்வரங்கு நடைபெறும்.
காலை துவங்கி மாலை வரையில் இரு அமர்வுகளாக நடைபெறவுள்ள இந்த ஆய்வரங்கில் கலந்துகொண்டு ஆய்வுரை வழங்கிச் சிறப்பிக்க இருப்பவர்கள் :
திரு.நடன.காசிநாதன்
( தமிழகத் தொல்லியல் துறை முன்னாள் இயக்குனர் )
பேராசிரியர் திரு.ஒய் .சுப்பராயலு
( ஃபிரெஞ்சு இந்திய ஆய்வு நிறுவனம், புதுவை )
முனைவர்
திரு.தயாளன்
(
பிராந்திய இயக்குனர், இந்தியத் தொல்லியல் துறை)
திருமதி வசந்தி
( இயக்குனர், தமிழ்நாடு தொல்லியல் துறை )
பேராசிரியர் திரு.கோ.விஜய வேணுகோபால்
( ஃபிரெஞ்சு கீழ்த் திசைப் பள்ளி, புதுச்சேரி)
பேராசிரியர் திரு.கா.ராஜன் ,
( வரலாற்றுத் துறை , புதுவைப் பல்கலைக்கழகம்)
முனைவர் ப.சண்முகம்
( இயக்குனர், தெற்கு மற்றும் தென்கிழக்காசிய பண்பாட்டு நிறுவனம்,
சென்னை )
முனைவர் வெ.வேதாசலம்
( கல்வெட்டாய்வாளர், மதுரை )
டாக்டர் திரு. கலைக்கோவன் ,
(அமைப்பாளர்,
டாக்டர் ராசமாணிக்கனார் வரலாற்று ஆய்வு மையம்)
பேராசிரியர் செல்வகுமார்
( தமிழ்ப் பல்கலைக் கழகம் , தஞ்சாவூர்)
இந்த ஆய்வரங்கில் கலந்துகொள்ள
விரும்புவோர் தமது விவரங்களோடு manarkeni@gmail.com
என்ற மின்னஞ்சலுக்கோ அல்லது எனது அலைபேசியில் ( எண் 9443033305 ) தொடர்புகொண்டோ தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்
ரவிக்குமார்
ஆய்வரங்க
அமைப்பாளர்
No comments:
Post a Comment