அன்புள்ள ரவிக்குமார்,
வணக்கம்
சில அடிப்படையான விஷயங்களை அறிந்து கொள்ள வேண்டி இந்த மடலை எழுதுகிறேன்
1.ஒரு பல்கலைக் கழகம் மிகச் சிறந்த நிலையில் செயல்பட எவ்வளவு இடம் தேவைப்படும்?
2.தமிழ்நாட்டில் உள்ள எத்தனைப் பல்கலைக்கழகங்களுக்கு 1000 ஏக்கர் நிலம் இருக்கிறது?
3தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்கு ஒதுக்கப்பட்ட ஆயிரம் ஏக்கரில் இப்போது எத்தனை ஏக்கர் பயன்பாட்டில் உள்ளது?
4.ஆயிரம் ஏக்கரில் 6 சதவீத இடத்தை மக்கள் அதிக அளவில் வந்து செல்லும் பயன்படுத்தும் ஆட்சியர், நீதித்துறை அலுவலகங்களை அமைப்பதால் பல்கலைக் கழகத்திற்கு எத்தகைய பாதிப்பு ஏற்படும்?
5.தமிழ்ப் பல்கலைக் கழகம் இத்தனை ஆண்டுகளில் தமிழ்ச் சமூகத்திற்கு ஆற்றியுள்ள பங்களிப்பு என்ன? எத்தனை நூல்கள் வெளியிட்டுள்ளது? எத்தகைய நூல்கள் வெளியிட்டுள்ளது? எத்தகைய path breaking ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன?கணிமையில் தமிழைப் பயன்படுத்துதல், மேம்படுத்துதல் போன்ற பணிகளில் அதன் பங்களிப்பு என்ன?
இந்தக் கேள்விகளுக்கு விடை கிடைத்தால் மகிழ்வேன்
அன்புடன்
மாலன்
No comments:
Post a Comment