திரு மாலன் அவர்களுக்கு வணக்கம்
பல்கலைக்கழகம் சிறப்பாகச் செயல்படுவது நிலம் சார்ந்த ஒன்றல்ல, எனினும் அதன் விரிவாக்கத்துக்குப் போதுமான நிலம் தேவை. டெல்லியில் இருக்கும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தை நீங்கள் பார்த்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
அன்று அந்த கூட்டத்தில் தானே முன்வந்து கலந்துகொண்டு பேசிய முன்னாள் கல்வி அமைச்சர் செ .அரங்கநாயகம் தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கு மட்டுமின்றி அப்போது துவக்கப்பட்ட பாரதியார், பாரதிதாசன் பல்கலைக்கழகங்களுக்கும் தலா ஆயிரம் ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டதாகச் சொன்னார். தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் பங்களிப்புகள் குறித்து அவர்கள் ஒரு நூல் வெளியிட்டிருக்கிறார்கள், அதை நீங்கள் வாசிப்பது பயன்தரும். எனக்குத் தெரிந்து நல்ல பல நூல்களை அது வெளியிட்டிருக்கிறது. அறிவியல் கலைக்களஞ்சியத் தொகுதிகள் அவற்றுள் முக்கியமானவை. தொல்லியல் துறையில் பணியாற்றிய ஒய் .சுப்பராயலு, கா.ராஜன் உள்ளிட்ட தொல்லியல் அறிஞர்கள் முக்கியமான பல கண்டுபிடிப்புகளை அங்கிருக்கும்போது செய்திருக்கிறார்கள். பூம்புகாரில் மேற்கொள்ளப்பட்ட கடல் அகழ்வாய்வும் குறிக்கத்தக்க ஓன்று. ஆட்சியர் மற்றும் காவல் துறை அலுவலகங்கள் மக்கள் வந்து செல்லக்கூடியவை என்றாலும் அவை கல்விச் சூழலுக்கு உகந்தவை அல்ல. அந்த அலுவலகங்களை அமைப்பதற்கு தஞ்சையில் இடமே இல்லை என்ற நிலை கிடையாது. இவை எல்லாவற்றையும்விட ஒரு குறிப்பிட்ட நோக்கத்துக்காகக் கையகப்படுத்தும் நிலத்தை அந்த நோக்கத்துக்குப் பயன்படு த்தவில்லைஎனில் அதன் உரிமையாளருக்கே திருப்பித் தரவேண்டும் என சட்டம் சொல்கிறது.
மொழிக்காக ஏற்படுத்தப்பட்டிருக்கும் பல்கலைக்கழகங்கள் பிற மாநிலங்களில் எவ்வாறு செயல்படுகின்றன என்று பார்க்கவேண்டும். தமிழுக்கான உருப்படியான பணிகளைச் செய்வதற்கு அரசு போதிய நிதி ஒதுக்க முன்வந்தால் ஆயிரம் ஏக்கர் கூடப் போதாது. உங்களது கண்ணோட்டத்தின்படிப் பார்த்தால் சென்னையில் இருக்கும் ஐ.ஐ.டி வளாகமும் தேவையானதுதானா என்ற கேள்வி எழும். அந்தக் கேள்வி எப்போதேனும் உங்களுக்கு எழுந்ததுண்டா ? என்று அறிய விரும்புகிறேன்.
தமிழ்ப் பல்கலைக் கழகம் உள்ளிட்ட தமிழுக்கென உருவாக்கப்பட்ட நிறுவனங்களை மேம்படுத்துவதும் காப்பதும் நமது நோக்கமாக இருக்கவேண்டும் எனக் கருதுகிறேன்.அந்த நோக்கில் எனக்குத் தெரிந்த சில கருத்துகளை எனது உரையில் முன்வைத்திருக்கிறேன். இன்னும் பலர் இதைவிட உருப்படியான ஆலோசனைகளை முன்வைக்கக்கூடும். இயலுமெனில், அவற்றைத் தொகுத்து புதிய தலைமுறையில் கட்டுரை ஒன்றை நீங்கள் வெளியிடலாம்.
அன்புடன்
ரவிக்குமார்

Dear Ravi,
ReplyDeleteThe same questions that Malan has raised may have been in the minds of many. And you have given the reply that needs to be written. People don't bother to even find out what a university has done and its struggles.You are right that no one would bother about asking if IIT needs such a big campus. And why encroach upon the land of a university for setting up such offices? I don't think they are the kind of offices a university should accommodate. I can understand giving it to another educational institution or similar institution.
Warmly,
Lakshmi ( Ambai )
There is nothing wrong is government acquiring some portion of the unused land for public purposes. Managing 1000 acres of land is no easy task.It is an expensive proposition. One cant compare this university with IIT Madras. I think that there are more important issues need to be addressed urgently. If the government demarcates the land in to two parts and assures that in future there wont be any further acquisition that should be fine.So even after all that if the university has about 70-80% of 1000 acres that should be more than enough for such a university.
ReplyDeleteIn any case no court will stop the government from acquiring university land for public purposes as the university has enough space left after this acquisition to function and expand.So this will be a futile exercise and the public cannot be expected to support this.Instead efforts should be made to put the university on a firmer ground in matters of finance and functioning and that is not possible with the support of state government.So why waste efforts in an initiative that is bound to fail.