1.
மரம் நனைகிறது
இலைகள் ஒற்றையொன்று குளிப்பாட்டுகின்றன
குருவிகளற்ற மின் கம்பிகள் நனைகின்றன
மழை நீர்
சுவர்களில் வழியும் போது
வீடு அழுவதுபோல் தோன்றுகிறது.
மாலையில் மழை பொழியும்போது
உயிர் நசுங்கும்படி
இரவின் கனம் கூடிவிடுகிறது
மழையே
வெள்ளிக்கிழமை மாலையில் பெய்யாதே
விடுமுறை நாட்களின் வெறுமையை
மேலும் கூட்டாதே
2.
மழை
ஏன் துயரத்தைத் தரவேண்டும் ?
தனிமையாய் உணரச்செய்ய வேண்டும் ?
அழுதால் தேவலாமென எண்ண வைக்கவேண்டும் ?
மழையில் நனைந்தபடி குழந்தைகள்
காகிதப் படகுகளை விடுகிறார்கள்
கூரையிலிருந்து ஒழுகும் நீர்த் திரையில்
நான்
உனக்கொரு கவிதையை எழுதுகிறேன்.
No comments:
Post a Comment