தமிழ்ப் பல்கலைக் கழக நிலத்தைக் காப்பதற்கான உண்ணாநிலை அறப் போராட்டத்தில் தாமே முன்வந்து கலந்துகொண்ட முன்னாள் கல்வி அமைச்சர் செ .அரங்கநாயகம் அந்தப் பல்கலைக் கழகத்தை உருவாக்கத் தானும் திரு.எம்.ஜி.ஆர் அவர்களும் எடுத்த நடவடிக்கைக்களை விவரித்தார்.
தமிழ்ப் பல்கலைக் கழகத்துக்கு மாத்திரமல்ல அப்போது உருவாக்கப்பட்ட பாரதியார், பாரதிதாசன் பல்கலைக்கழகங்களுக்கும் தலா ஆயிரம் ஏக்கர் ஒதுக்கித் தந்தோம் ஆயிரம் ஏக்கர் வேண்டுமா என சிலர் கேட்கிறார்கள், நான் பல்வேறு நாடுகளுக்குச் சென்று வந்திருக்கிறேன் அந்த அனுபவத்தில் சொல்கிறேன், இந்த நிலமே போதாது இயற்றமிழுக்கு ஐநூறு ஏக்கர், இசைத் தமிழுக்கு , நாடகத் தமிழுக்கு தலா இருநூற்றைம்பது ஏக்கர் ஒதுக்கிப் பணிகளைச் செய்யலாம் . அதற்கான நிதியை அரசு ஒதுக்கவேண்டும் அவர் தனது உரையில் வலியுறுத்தினார்
No comments:
Post a Comment