கேரள தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு நடத்திய மாநாட்டில் கலந்துகொண்டு கவிஞர் சுகதகுமாரி உரையாற்றினார். அதன் சுருக்கம் :
'' நான் தமிழ்நாட்டுக்குப் பல முறை சென்றிருக்கிறேன். நான் சிறு வயதாக இருக்கும்போது என் அப்பா என்னை அங்கே அழைத்துச் செல்வார். அங்கிருக்கும் தாமரைக் குளங்களைக் காட்டுவார்.பார்க்கவே ரம்மியமாக இருக்கும். ஆனால் அந்த தாமரைக் குளங்கள் இப்போது இல்லை. அங்கெல்லாம் கான்கிரீட் காடுகள் அடர்ந்துள்ளன. கேரளத்திலும் அப்படித்தான். தாமரைப் பூக்களையும் இன்னும் அழகழகான மலர்களையும் நாம் இழந்துவிட்டோம்.
கேரளத்தில் கிடைக்கும் காய்கள் கனிகள் மலர்கள் பெரும்பாலும் தமிழ்நாட்டிலிருந்துதான் வருகின்றன. அங்கு இப்போது அணு உலையை எதிர்த்து சாதாரண மக்கள் போராடுகிறார்கள். அவர்களுக்கு ஆதரவாக எந்தவொரு தேசிய கட்சியும் இல்லை. இடதுசாரி கட்சிகள்கூட இல்லை. ஆனால் மீனவ மக்கள் வீரத்தோடு போராடுகிறார்கள். அங்கிருக்கும் அணு உலையில் விபத்து நேர்ந்தால் அது இருநூறு மைல் சுற்றளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அந்த அணு உலை இருக்கும் இடத்திலிருந்து திருவனந்தபுரம் அற்பத்தைந்து மைல் தொலைவில்தான் இருக்கிறது. ஆனால் மலையாளிகள் அந்த ஆபத்தை உணர்ந்ததாகத் தெரியவில்லை. இங்கே முல்லைப் பெரியாறு குறித்து பயப்படுகிறார்கள். அதைவிட பெரிய ஆபத்து கூடங்குளம் அணு உலை தான். அதை எதிர்த்துப் போராட மலையாளிகள் முன்வரவேண்டும். அங்கு நடக்கும் ஆட்சியைப் பார்த்து அச்சப்படாமல் இங்கே இருக்கும் தமிழ் சங்கத்தைச் சேர்ந்தவர்களும் கூடங்குளம் அணு உலையை எதிர்த்துக் குரலெ ழுப்பவேண்டும்.
No comments:
Post a Comment