Friday, November 16, 2012

விவாதம்

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் விவாதம்

புதியதலைமுறை தொலைக்காட்சி நடத்தும் புதுப் புது அர்த்தங்கள் நிகழ்ச்சியில் ஞாயிறு (18.11.2012) இரவு எட்டரை மணிக்கு  ஒளிபரப்பாகவிருக்கும் நிகழ்ச்சியில் நான் கலந்துகொண்டு பேசியிருக்கிறேன். 
அண்மைக்காலமாக தமிழ்நாட்டில் தலித் மக்களுக்கு எதிராக அதிகரித்துவரும் வன்முறைகளைப் பற்றி அந்த நிகழ்ச்சியில் விவாதிக்கப்பட்டுள்ளது.


1 comment:

  1. அ. ஜெயபால்November 18, 2012 at 7:49 AM

    இந்த சாதிய சமூகத்தில் நாம் இன்னும் பலவிதமான போராட்டங்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது என்பதை உங்களின் புதிய தலைமுறை விவாத நிகழ்ச்சியைக் கண்டு தெரிந்து கொண்டேன் அண்ணா. மிக்க வேதனை அளிக்கிறது. கடைசி பத்து நிமிடங்கள் உங்கள் முகத்தில் ஒருவித கோவமும் வருத்தமும் இருந்ததை அறிய முடிகிறது. இன்னும் அரைமணி நேரம் விவாதம் நடத்தி இருந்தால் நன்றாக இருந்திருக்கும். எதிர்காலம் எப்படி தலித் மக்களின் வாழ்க்கை அமையப்போகிறது என்பதை நினைத்தாலே வருத்தமாக இருக்கிறது. ஒவ்வொரு கிராமமும் சாதி இந்துக்களின் கையில் சிக்கியிருப்பதாக நான் உணர்கிறேன். விடுதலைச் சிறுத்தைகள் எழுச்சிக்குப் பின்னால் மாற்றம் நிகழ்ந்திருக்கிறது என்ற போதிலும் உங்களுக்குப் பிறகு இது போன்ற சூழல்கலை எதிர்கொள்ள தலித் சமுதாயம் எப்படி தங்களை உருவாக்கிக் கொள்ள போகிறது என்று புரியவில்லை.


    எங்கோ ஓரிடத்தில் அநீதி நடந்தாலும் - அது எல்லா இடங்களிலும் நீதியை அச்சுறுத்துகிறது.
    --மார்டின் லூதர் கிங்
    (இது உங்கள் கட்டுரை ஒன்றிலிருந்து எடுக்கப்பட்ட வாசகம்) நன்றி. ஜெய்பீம்!

    ReplyDelete