Wednesday, February 26, 2014

ரவிக்குமார் கவிதை (26.2.2014)



இரவை ஊடறுக்கும் 
நாயின் அழுகையைப்போல 
கேட்கிறது
அவநம்பிக்கையின் அழைப்பு 
நடுப்பகல் காக்கையாய்க் கரைகிறது
வெறுமை 
நான் 
இதயத்தைத் திறந்து ஒரு புறாவை எடுக்கிறேன்
குழந்தையின் சிரிப்பால்
எழுதிய செய்தியோடு வானில் விடுகிறேன்
தெரியாதா எனக்கு
இந்த ஊரில் 
வீடற்றவர்களும் பெயரற்றவர்களும்
வேண்டுதல்களைத் தொங்கவிட்டுச்செல்லும் 
அரச மரம் நீதானென்பது


தமிழக காங்கிரஸ்காரர்களுக்கு தெலுங்கானா சொல்லும் செய்தி



பாராளுமன்றத்தில் கூச்சல் குழப்பங்களுக்கிடையே தெலுங்கானா மசோதாவை நிறைவேற்றி பிரிக்கப்பட்ட ஆந்திராவில் ஒரு பகுதியில் தனது செல்வாக்கைத் தக்கவைத்துக்கொண்டிருக்கிறது காங்கிரஸ். தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதியைத் தன்னுடன் இணைத்துக்கொள்வதன்மூலம் அங்கிருக்கும் தொகுதிகள் அனைத்தையும் அது கைப்பற்றக்கூடும். இவ்வளவு நாட்களாகச் செய்யாமல் தேர்தல் நெருங்கிய நேரத்தில் இதைச் செய்திருப்பது காங்கிரசின் அரசியல் கணக்கையே காட்டுகிறது. நீண்ட போராட்டத்துக்குப் பின்னர் இப்போது வெற்றிப் பெருமிதத்தில் இருக்கும் தெலுங்கானா மக்கள் ஒட்டுமொத்தமாகத் தம் வாக்குகளைக் காங்கிரசுக்கு அளிப்பார்கள். ஒன்றிரண்டு மாதங்களுக்கு முன்னால் இதைச் செய்திருந்தால்கூட இந்த எழுச்சி வடிந்திருக்கும். நிதானம் வந்துவிட்டால் அவர்கள் காங்கிரசை மற்ற கட்சிகளோடு ஒப்பிட்டுப் பார்த்து எடைபோடுவார்கள், பத்து ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சியில் அனுபவித்த துயரங்கள் அவர்களுக்கு நினைவுக்கு வந்துவிடும். அப்புறம், காங்கிரஸ் நினைத்த அரசியல் அறுவடையைச் செய்யமுடியாமல் போய்விடும். 


தெலுங்கானா விவகாரத்தில் தமிழக காங்கிரசுக்கும் ஒரு செய்தி இருக்கிறது. தற்போது தென் தமிழ்நாட்டில்தான் காங்கிரசுக்கு ஏதோ கொஞ்சம் ஆதரவு இருக்கிறது. ஏற்கனவே தமிழ்நாட்டை இரண்டாகப் பிரிக்கவேண்டும் என சில உதிரிக் கட்சிகள் பேசிவருகின்றன. ஏன் அந்தக் கோரிக்கையை காங்கிரஸ் கையில் எடுக்கக்கூடாது? இதை நான் வேடிக்கைக்காகக் கூறவில்லை. சென்னையை மட்டுமே மையப்படுத்தி செய்யப்பட்டுவரும் வளர்ச்சிப் பணிகள் ' வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது' என்ற உணர்வை தென் தமிழகத்து மக்களுக்கு ஏற்படுத்துகிறது. தாம் புறக்கணிக்கப்படுகிறோம் என்ற வருத்தமும் சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மதுரை என்ற பெருமிதமும் ஒன்றிணைந்தால் தனி மாநிலம் என்ற முழக்கமாகவே அது வெளிப்படும். இப்போது காங்கிரஸை எதிர்க்கும் தமிழ்த்தேசியவாதிகளில் சிலர் அப்போது அக்கட்சியுடன் கைகோர்த்தாலும் வியப்பதற்கில்லை. 


தமிழ்நாட்டில் காங்கிரஸ் புத்துயிர் பெற அருமையானதொரு ஆலோசனை தெலுங்கானா பிரச்சனையில் இருக்கிறது என்றே எனக்குத் தோன்றுகிறது.

Tuesday, February 25, 2014

ரவிக்குமார் கவிதை

பேருந்துகளின் இரைச்சலிலும்

குழந்தைகள் உறங்குகின்ற

நடைபாதைகள் கொண்ட நாட!


அரணற்ற படித்துறையில்

இழைத்த மஞ்சளை

சிறுவர்கள் விழிமலர்த்த 

அக்குள்களில் பூசி 

அரட்டை அடிக்கின்றார் பெண்டிர் 


அவர்தம்

மேனித் தகிப்பால் மீன்கள் மேலெழும்பும்

வாவிகள் கொண்டது எம் ஊர்! 

ஏனொ என் தோழி

கொண்டையும் நனையா குழாய்நீரில் ஆசைவைத்தாள்


கொல்லை வாழையில் 

கொழுந்து இலை அசைகிறது

காற்றிலும் கிழியலாம்

விருந்து வந்தால் அறுபடலாம்

காலத்தில் வந்தால் கறிசோறு சாப்பிடலாம்





Monday, February 24, 2014

Navi Pillay report on Sri Lanka: Conclusions and recommendations


A.     Conclusions

65. Despite the significant progress achieved in the physical aspects of resettlement and recovery, and the implementation of some of the recommendations made by the Lessons Learnt and Reconciliation Commission, the Government of Sri Lanka has yet to satisfy the call made by the Human Rights Council for a credible and independent investigation into the allegations of serious human rights violations that persist or to take the necessary steps to fulfil its legal obligations to ensure justice and redress.

66. It is important for the Human Rights Council to recall the magnitude and gravity of the violations alleged to have been committed by the Government and the LTTE, which left many thousands of civilians killed, injured or missing. In its report, the Secretary-General’s Panel of Experts concluded that, if proven, some of these acts would amount to war crimes and crimes against humanity. During her visit to Sri Lanka in August 2013, the High Commissioner was struck by the overwhelming sense of grief and trauma among victims and survivors that, if left unaddressed, will continue to undermine confidence in the State and reconciliation.

67. The Government has launched initiatives and established mechanisms, such as the military courts of inquiry and the Commission of Inquiry on Disappearances, but none of these have the independence to be effective or to inspire confidence among victims and witnesses. The military courts of inquiry lack independence and transparency and are limited in scope. Past commissions of inquiry have not always completed their mandate, their reports have not been published and their recommendations have not been implemented or followed by prosecutions. The Human Rights Commission of Sri Lanka, although handling many routine cases, has a poor record in responding credibly to serious violations committed by the military and security forces.[42]

68. For the past several years, Sri Lankan courts have been compromised by politicization and interference by the executive.[43] Cases or presiding magistrates and judges are often transferred from one court to other, thereby delaying judicial proceedings.[44] The High Commissioner heard from lawyers about large numbers of fundamental rights applications, including in cases of arbitrary detention and torture, that are discouraged or not given leave to proceed by the Supreme Court.[45]

69. One consequence of this situation is the understandable reluctance of victims and witnesses to come forward in the absence of any effective system for their protection. In many cases, witnesses have been intimidated to discourage their giving testimony, and even killed. This has been a major constraint on criminal investigations, as well as on the work of previous commissions of inquiry and the Lessons Learnt and Reconciliation Commission. The Attorney-General himself informed the High Commissioner that the reluctance of witnesses to come forward was the main reason for the lack of progress in such emblematic cases as the ones concerning Trincomalee and Action contre la Faim.

70. A bill on assistance and protection for victims of crime has been in preparation since 2007, and was tabled in Parliament in June 2008. The previous drafts contained many provisions that were not compliant with international human rights law. Although the Supreme Court recommended several amendments, it is not clear whether they were incorporated. According to the Government, the legislation is being finalized, even though the final version has yet to be released for public consultation.

71. At the same time, new evidence — including witness testimony, video and photographic material — continues to emerge on the events that took place in the final stages of the armed conflict. Human remains are also still being discovered, for instance in Matale, in November 2012, and Mannar, in December 2013.

72. As the emblematic cases highlighted above show, national mechanisms have consistently failed to establish the truth and achieve justice. The High Commissioner believes this can no longer be explained as a function of time or technical capacity, but that it is fundamentally a question of political will. The Secretary-General’s Panel of Experts and the initiatives taken by international non-governmental organizations have shown that witnesses are willing to come forward to testify to international inquiry mechanisms that they trust and can guarantee their protection. For this reason, the High Commissioner remains convinced that an independent, international inquiry would play a positive role in eliciting new information and establishing the truth where domestic inquiry mechanisms have failed. In the absence of a credible national process, she believes the international community has a duty to take further steps, which will advance the right to truth for all in Sri Lanka and create further opportunities for justice, accountability and redress.

73. The High Commissioner reiterates her concern at the continuing trend of attacks on freedom of expression, peaceful assembly and association, particularly against human rights defenders, journalists and families of victims, the rising levels of religious intolerance, and continued militarization, which continue to undermine the environment where accountability and reconciliation can be achieved. She therefore reiterates and updates the recommendations made in her previous report to the Human Rights Council, most of which remain unimplemented.

B.     Recommendations

74. The High Commissioner recommends that the Human Rights Council establish an international inquiry mechanism to further investigate the alleged violations of international human rights and humanitarian law and monitor any domestic accountability processes. OHCHR stands ready to assist in such a process.

75. The High Commissioner recommends that the Government of Sri Lanka:

            (a)        Finalize laws dealing with incitement to hatred, witness and victim protection, the right to information and the criminalization of enforced disappearances, and revise existing laws in accordance with international standards;

(b)     Repeal the Prevention of Terrorism Act and lift the regulations promulgated under it that allow for arbitrary detention;

(c)      Arrest, prosecute and punish perpetrators of attacks on minority communities, media and human rights defenders, and ensure protection of victims;

(d)     Undertake independent and credible criminal and forensic investigations with international assistance into all alleged violations of human rights and humanitarian law, including recently discovered mass graves;

(e)      Establish a truth-seeking mechanism and national reparations policy in accordance with international standards as an integral part of a more comprehensive and inclusive approach to transitional justice;

(f)      Broaden the scope and tenure of the Commission of Inquiry on Disappearances to encompass cases from all parts of the island and all periods of the history of disappearances;

(g)     Publish the final report of the military courts of inquiry, the presidential commission of inquiry of 2006 and the more recent commissions of inquiry to allow the evidence gathered to be evaluated;

(h)     Take further steps in demilitarization, ensure military disengagement from activities that are meant to be civilian, resolve land disputes and promote meaningful community participation in reconstruction and development;

(i)      Engage civil society and minority community representatives more fully in an inclusive and consultative process to support the implementation of the recommendations made by the Lessons Learnt and Reconciliation Commission;

(j)      Implement the Commission’s recommendation for a national day of commemoration, allow all citizens their right to hold individual or group commemorations, and hold national consultations on the design of appropriate memorialization for the victims of the war;

(k)     Give positive consideration to the offers of technical assistance made by the Office of the High Commissioner;

(l)      Invite special procedures mandate holders with outstanding requests to visit the country in 2014, particularly the Working Group on Enforced or Involuntary Disappearances and the Independent Expert on minority issues.

                                      



                     [1]   The Commission was appointed in May 2010 by the President of Sri Lanka to investigate the facts and circumstances that led to the failure of the 2002 ceasefire agreement, the lessons to be learned from those events, and to suggest institutional, administrative and legislative measures to prevent any recurrence of such events, and to promote national unity and reconciliation among all communities. The report of the Commission is available from www.llrcaction.gov.lk/reports/en/Final_LLRC_Report_en.pdf.

ரவிக்குமார் கவிதை

பெண்ணே! 
உன் தோழியை எப்படிச் சேர்வது? 

அவளொரு சிம்மாசனமெனில் சொல்
யுத்தங்களை வெல்கிறேன்
அவளொரு சிறைச்சாலையென்றால் சொல்
தேசத்துரோகி ஆகிறேன்
அவள் வானமா? சொல் 
நட்சத்திரங்களாய் வெடிக்கிறேன்
அவள் சமுத்திரமா? சொல்
மழையாகப் பொழிகிறேன்

பெண்ணே! உன் சிநேகிதியை
எப்படி நான் சேர்வது

அவளொரு கேணியென்றால் சொல்
தவளையாய்க் குதிக்கிறேன்
அவள் பாலையென்றால் சொல்
கானலாய்த் தகிக்கிறேன்

அவளும் என்னைப்போல 
ஒரு பைத்தியமென்றால் போய்ச் சொல்
தெளியவே வேண்டாம் தெளியவே வேண்டாம் தெளியவே வேண்டாம் தெளியவே வேண்டாம்




Sunday, February 23, 2014

எழுத்தாளர்களின் தேர்தல் அறிக்கை 2014 (வரைவு)



1. எந்தவொரு நூலும் தடை செய்யப்படக்கூடாது.


2. எழுத்தாளர்கள் எவரும் அவர்களின் எழுத்தைக் காரணம்காட்டிக் கைதுசெய்யப்படக்கூடாது.


3. கருத்து சுதந்திரத்துக்கு அச்சுறுத்தலாக இருக்கும் இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 153 A மற்றும் 295 A ஆகியவைத் திருத்தப்படவேண்டும்.


4.மத்திய/ மாநில அரசின் விருதுபெற்ற எழுத்தாளர்களுக்கு அவர்கள் ஊதியம் / ஓய்வூதியம் பெறுபவர்களாக இல்லாவிட்டால் மாதந்தோறும் ஐந்தாயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கப்படவேண்டும். அவர்களது ஆக்கங்களை வெளியிட அரசு நல்கை வழங்கவேண்டும். 


4. சாகித்ய அகாடமி உள்ளிட்ட தன்னாட்சி நிறுவனங்களின் செயல்பாடுகள் மேலும் வெளிப்படை தன்மையோடும் ஜனநாயகத்தன்மையோடும் திருத்தியமைக்கப்படவேண்டும். 


5. பல்கலைக் கழகங்களின் பாடத்திட்டங்களை இறுதிசெய்யும் குழுக்களில் எழுத்தாளர்களின் பிரதிநிதித்துவம் இருக்கவேண்டும். 


6. வட்ட/ மாவட்டத் தலைநகரங்களிலுள்ள அரசு பொதுநூலகங்களில் நூல்கள் விற்பனை செய்வதற்கு ஏற்பாடு செய்யப்படவேண்டும்.


7. அனைத்து மாவட்டங்களிலும் டிஜிட்டல் நூலகங்கள் அமைக்கப்படவேண்டும். 


( இந்த அறிக்கை மீதான கருத்துகளையும் மேலும் சேர்க்கப்படவேண்டிய ஆலோசனைகளையும் வரவேற்கிறேன்.)

Saturday, February 22, 2014

புதுமைப்பித்தன் எழுதிய துன்பக்கேணி

 


சென்னைப் பல்கலைக்கழகத்தில் இந்தச் சிறுகதையை பாடத்திட்டத்திலிருந்து நீக்கிவிட்டு அவர் எழுதிய வேறொரு கதையை வைப்பதென முடிவுசெய்திருக்கிறார்களாம். அட்டவணை சாதிகளைச் சேர்ந்த பாத்திரங்களை சாதியின் பெயரால் குறிப்பிட்டு புதுமைப்பித்தன் எழுதியிருப்பதால் அந்தக் கதையை நீக்கவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. மீண்டும் அந்தக் கதையை சற்றுமுன் படித்து முடித்தேன். மனம் கனத்துவிட்டது. சாதி கொடுக்கும் அதிகாரத்தைக் கொண்டு ஒரு தலித் குடும்பத்தை எத்தனை சுலபமாக சிதறடித்துவிடுகிறார்கள்! 


புதுமைப்பித்தன் இந்தக் கதையை எழுதிய காலத்திலிருந்து இப்போதைய சூழல் எவ்வளவோ மாறிவிட்டது என்றாலும் தலித்துகள்மீதான வன்முறைகளின் அளவோ தன்மையோ மாறிவிடவில்லை. கதை பல இடங்களில் ஒரு செய்திக் கட்டுரையின் தன்மையைப் பெற்றிருக்கிறது என்ற குறைபாட்டையும் தாண்டி, படித்து முடிக்கும்போது நெஞ்சை அறுக்கிறது. அதுதான் புதுமைப்பித்தனை ஒரு படைப்பாளி என நாம் ஒப்புக்கொள்வதற்கான அடிப்படை. 


ஒரு இலக்கியப் பிரதியைப் புரிந்துகொள்வதற்கான வாசிப்பு முறைகளை கல்லூரிகளில் பணபுரியும் பெரும்பாலான பேராசிரியர்களே அறிந்திராத நிலையில் மாணவர்களிடம் அதை எதிர்பார்ப்பது பேராசைதான். அதுவும் சாதிவெறி கொள்ளை நோயாகப் பரவும் காலம் இது.

Friday, February 21, 2014

வெண்டி டோனிகரின் நூல் குறித்த சர்ச்சை

 பெங்குவின் பதிப்பகத்தைக் குற்றம் சாட்டுவது பிரச்சனையைத் திசைதிருப்பும்


வெண்டி டோனிகரின் the hindus என்ற புத்தகத்தின் பிரதிகளைத் திரும்பப் பெற்று அழித்துவிடப்போவதாக பெங்குவின் நிறுவனம் அறிவித்துள்ளது. அந்த நூலுக்கு எதிராக இந்து மதவாத அமைப்பு ஒன்று தொடுத்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த நிலையில் நீதிமன்றத்துக்கு வெளியே செய்துகொண்ட உடன்படிக்கையின்பேரில் இந்த நடவடிக்கையை பெங்குவின் எடுத்துள்ளது. அடுத்து பாஜக ஆட்சி அமையக்கூடும் என்ற அச்சமே பெங்குவின் நிறுவனத்தை இந்த முடிவை நோக்கித் தள்ளியிருக்கிறது. 


பெங்குவின் நிறுவனத்தின் அறிவிப்பையொட்டி online petition மூலம் இந்துத்துவ அமைப்புகளுக்குக் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அதில் நானும் கையொப்பமிட்டேன். அதன் பின்னர் சித்தார்த் வரதராஜனும் இன்னும் ஒரு எழுத்தாளரும் பெங்குவின் மூலம் வெளியிடப்பட்ட தமது நூல்களைத் திரும்பப் பெறுவதாக அறிவித்தனர். இப்போது ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறையைச் சேர்ந்த பேராசிரியர்கள் கூட்டாக பெங்குவினுக்குக் கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். இரண்டு அறிக்கைகளும் அடிப்படைவாதிகளைக் கண்டிக்கின்றன. தான் வெளியிட்ட எழுத்தாளரின் உரிமையைப் பாதுகாத்து நிற்காமல் அடிப்படைவாதிகளுடன் சமரசம் செய்துகொண்ட பெங்குவினைக் கண்டிக்கின்றன. அந்த விஷயங்களில் எனக்கும் மறுப்பில்லை. ஆனால் இந்தக் கண்டனங்கள் நமது கவனத்தை அடிப்படைவாதிகளிடமிருந்து திசைதிருப்புகின்றனவோ என்ற ஐயம் எனக்கு எழுகிறது. 


தான் தெரிவிக்கும் ஒரு கருத்தை விட்டுக்கொடுக்காமல் உயர்த்திப்பிடிக்க வேண்டியது முதன்மையாக அந்த எழுத்தாளரின் பணி. பதிப்பாளர் இரண்டாவதாகத்தான் வருகிறார். பெங்குவின் ஒரு புரட்சிகரப் பதிப்பு நிறுவனம் என்பதற்காக அதன்மூலம் எழுத்தாளர்கள் நூல்களை வெளியிடவில்லை. அதன் பதிப்புத் தரம், வினியோக வலைப்பின்னல், brand value ஆகியவற்றுக்காகவே அதன்மூலம் நூல்களை வெளியிடுகிறார்கள். பெரும்பாலான பதிப்பகங்களுக்கும் இது பொருந்தும். அப்படி இருக்கும்போது அவர்கள் போராளிகளாகவும் தியாகிகளாகவும் மாறவேண்டும் என எதிர்பார்ப்பது என்ன நியாயம்? 


இந்துத்துவ அச்சுறுத்தலை,  வன்முறையை எதிர்த்து நிற்பதே இன்றைய தேவை. அப்படியொரு எதிர்ப்பு வலுவாக இருந்தால் பெங்குவின் இப்படியொரு முடிவை எடுத்திருக்காது. எனவே நமது கவனத்தை இந்துத்துவ எதிர்ப்பில் ஒருமுகப்படுத்துவோம்!

Wednesday, February 19, 2014

அந்த நான்கு தமிழர்களை நினைவிருக்கிறதா?



ராஜிவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஏழுபேர் மட்டுமல்ல இன்னும் பல மரண தண்டனை ஆயுள் தண்டனை சிறைவாசிகள் இருக்கிறார்கள் என்பதை தமிழ்நாடு மறந்துவிட்டதா? காலையிலிருந்து  உணர்ச்சிவெள்ளம் முகநூலை மூழ்கடித்துக்கொண்டிருக்கிறதே! நண்பர்களே! இந்தியாவிலேயே ஆயுள் சிறைவாசிகளின் விகிதம் அதிகமாக இருக்கும் மாநிலம் தமிழ்நாடுதான். இந்தியாவிலேயே அதிகமாக குண்டர் சட்டத்திலும் தேசிய பாதுகாப்புச் சட்டத்திலும் கைது செய்யப்பட்டிருப்பதும் தமிழ்நாட்டில்தான். நுய்ற்றுக்கு மேற்பட்டவர்கள் ஐந்து ஆண்டுகளுக்கும் அதிகமாக விசாரணைக் கைதிகளாக இருப்பது தமிழ்நாட்டில்தான். ஏழு பேரை விடுவிப்பதாக அறிவித்திருக்கும் முதல்வரைப் பாராட்டுவோம். ஆனால் இந்தத் தீர்ப்புக்கு முன்னோடியாக வீரப்பன் கூட்டாளிகள் எனக் குற்றம் சாட்டப்பட்ட நான்கு தமிழர்களின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டதே அப்போது ஏன் இந்த குதூகலம் இல்லை? அவர்கள் என்ன கொஞ்சம் மாற்றுக் குறைவான தமிழர்களா? அவர்களை விடுவிக்கவேண்டிய அதிகாரம் கர்னாடக அரசிடம் உள்ளது. தமிழக முதல்வர் அந்த நான்குபேரையும் விடுவிக்கவேண்டும் எனக் கர்னாடக முதல்வரை வலியுறுத்துவாரா? அதற்காக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுவாரா? 

Tuesday, February 18, 2014

வீரப்பன் கூட்டாளிகளை விடுதலை செய்க!

இராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலை!

தமிழக அரசுக்கு நன்றி! 

வீரப்பன் கூட்டாளிகளை விடுதலை செய்ய கர்நாடக அரசுக்கு வேண்டுகோள்!

தொல்.திருமாவளவன் அறிக்கை

 உச்சநீதிமன்றம் வழங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்கதீர்ப்பையொட்டி இராஜீவ் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த மூவர் உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ள தமிழக அரசையும் தமிழக முதல்வர் மாண்புமிகு ஜெயலலிதா அவர்களையும் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் பாராட்டி நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

கடந்த 5 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தண்டனை குறைப்பு நடவடிக்கையை மீண்டும் மேற்கொண்டு தமிழகச் சிறைகளில் 10ஆண்டுகளுக்கும் மேல் வாடும் ஆயுள் சிறைவாசிகளை விடுவிப்பதற்கு தமிழக முதல்வர் முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

விசாரணை கைதிகளை நீண்ட நாட்களுக்கு சிறையில் வைத்திருக்கக் கூடாது என்ற உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலையும் மீறி 5 ஆண்டுகளுக்கும் அதிகமாக நூற்றுக்கணக்கான விசாரணைக் கைதிகள் தமிழகச் சிறைகளில் வாடிக்கொண்டிருக்கிறார்கள்.

எனவே அவர்களையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதல்வர் அவர்களை கேட்டுக்கொள்கிறேன்.

வீரப்பன் கூட்டாளிகள் என்ற குற்றச்சாட்டின்பேரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நான்கு தமிழர்களின் தண்டனையை இரத்து செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி பல நாட்களாகிவிட்டன.  தற்போது தமிழக அரசு எடுத்திருக்கும் நடவடிக்கையைப் பின்பற்றி அவர்களை விடுதலை செய்ய கர்நாடக முதல்வர் முன்வரவேண்டுமெனவும், இது குறித்து தமிழக முதல்வர் அவர்கள் உரிய வகையில் கர்நாடக முதல்வரை வலியுறுத்த வேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறேன்.

இவண்

 தொல்.திருமாவளவன்

 

 


Saturday, February 15, 2014

Navi Pillay report to UNHRC leaked ?

A damning 20-page report from United Nations Human Rights High Commissioner Navi Pillay became the subject of close scrutiny by the UPFA Government this week.  Pillay’s office urged the Government, as is the practice, to respond to the contents of this 74-point report — the precursor to the United States backed latest resolution on Sri Lanka next month — within a week. The External Affairs Ministry (EAM), which co-ordinated the point by point answers converting it to a formal document kept to the deadline which was last Wednesday (February 12). 
It was sent to Ravinatha Ariyasinha, Sri Lanka’s Permanent Representative at the United Nations in Geneva, for onward transmission. The Pillay report too had earlier been channelled through him to the Government in Colombo. It will be made public by the Human Rights Council just days before the 25th sessions which begin on March 3 or in less than two weeks.

This report, a copy of which was seen by the Sunday Times, has made recommendations both to the 25th sessions of the UN Human Rights Council as well as the Government of Sri Lanka.To the UNHRC, it recommends, that it should “establish an international inquiry mechanism to further investigate the alleged violations of international human rights and humanitarian law and monitor any domestic accountability process. OHCHR (Office of the High Commissioner for Human Rights) stands ready to assist such a process.”

Here is what the Pillay report calls upon the Government of Sri Lanka to carry out:


(a) Finalise laws dealing with incitement to hatred, witness and victim protection, the right to information, the criminalization of enforced disappearances, in line with international standards, and revise existing laws to bring them into line with International Human Rights Law;
 (b) Repeal of the Prevention of Terrorism Act and lift the regulations promulgated under it which allows for arbitrary detention;
 (c) Arrest, prosecute and punish alleged perpetrators of attacks on minority communities, media and human rights defenders, and ensure protection of victims;
 (d) Undertake independent and credible criminal and forensic investigations with international assistance into all alleged violations of human rights and humanitarian law, including recently discovered mass graves;
 (e) Establish a truth seeking mechanism and national reparations policy in line with international standards as an integral part of a more comprehensive and inclusive approach to transitional justice;
 (f) Broaden the scope and tenure of the Commission on Disappearances to encompass cases from all parts of the island and all periods of the history of disappearances. Ensure an effective public information campaign and provide sufficient time to hear and record all petitioners who wish to submit complaints;
 (g) Publish the final report of the military courts of inquiry, presidential commission of inquiry 2006 and more recent commissions of inquiry to allow the evidence gathered to be evaluated;
 (h) Take further steps in demilitarization, and initiate a meaningful and transparent reduction of the military presence to peacetime levels, which would require a clear timeline for demobilisation, disarmament and disengagement from activities that are meant to be civilian;
 (i) Engage civil society and minority community representatives more fully in an inclusive and consultative process to support implementation of the LLRC recommendations;
 (j) Implement the LLRC recommendation for a national day of commemoration, allow all citizens their right to hold individual or group commemorations, and hold national consultations on the design of appropriate memorialisation for the victims of the war;
 (k) Give positive consideration to the offers of technical assistance made by the High Commissioner for Human Rights;
 (l) Invite special procedure mandate holders with outstanding requests to visit the country in 2014, particularly the Working group on Enforced and Involuntary Disappearances and the Independent Expert on Minority Issues.

Among other matters, Pillay says that “new evidence — including witness testimony, video and photographic material — continues to emerge on what took place in the final stages of the armed conflict. Human remains also continue to be discovered, for instance in Matale in November 2012 and Mannar in December 2013.” She adds: “As the emblematic cases highlighted above show, national mechanisms have consistently failed to establish the truth and achieve justice. The High Commissioner believes this can no longer be explained as a function of time or technical capacity, but that it is fundamentally a question of political will.

The Secretary-General’s PoE (Panel of Experts) and initiatives by international non-governmental organisations have shown that witnesses are willing to come forward to testify to international inquiry mechanisms which they trust and which can guarantee their protection. For this reason, the High Commissioner remains convinced that an independent, international inquiry would play a positive role in eliciting new information and establishing the truth where domestic inquiry mechanisms have failed. In the absence of a credible national process, she believes the international community has a duty to take further steps which will advance the right to truth for all in Sri Lanka and create further opportunities for justice, accountability and redress.

“The High Commissioner reiterates concern about the continuing trend of attacks on freedom of expression, peaceful assembly and association, particularly against human rights defenders, journalists and families of victims; the rising levels of religious intolerances; and continued militarisation which continues to undermine the environment where accountability and reconciliation can be achieved. She therefore reiterates and updates the recommendations made in her previous report to the Human Rights Council, most of which remain unimplemented.” Diplomatic sources say the Pillay report will form the basis on which the US resolution would be finally worded. That is to make clear that their resolution has been further complemented by the outcome of the UN Human Rights Commissioner’s findings.

 One of the important elements in the Human Rights High Commissioner’s report to the Human Rights Council, besides the call for an international inquiry, is that there should be no amnesty for those found guilty of war crimes if a truth seeking mechanism is established. The Government has looked at the South African model for such a purpose and wanted to set up a Truth and Reconciliation Commission.

Monday, February 10, 2014

மணற்கேணி 21 தலையங்கம்

கைதிகளிடம் கருணைகாட்டுங்கள்

கருணைமனுமீது முடிவெடுக்கக் காலதாமதம் ஆனதைக் காரணம் காட்டி பதினைந்து மரணதண்டனைக் கைதிகளின் தண்டனையை ஆயுள் தண்டனையாக உச்சநீதிமன்றம் குறைத்திருக்கிறது. வரலாற்றுச் சிறப்புவாய்ந்த இந்தத் தீர்ப்பை வழங்கிய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி திரு சதாசிவம் அவர்களது தலைமையிலான அமர்வை நாம்பாராட்டத்தான் வேண்டும்.வீரப்பன் கூட்டாளிகள் எனக்குற்றம் சாட்டப்பட்டு தூக்குக் கயிறை எதிர்பார்த்துக் காத்திருந்த நான்கு அப்பாவித் தமிழர்கள் இந்தத் தீர்ப்பினால் இப்போது உயிர்பிழைத்திருக்கிறார்கள். உச்சநீதிமன்றம் தண்டனைக் குறைப்பு செய்திருந்தாலும் அவர்கள் விடுதலை செய்யப்படுவதென்பது மாநில அரசுகளின் கையில்தான் இருக்கிறது. 

ஆயுள் சிறைவாசிகளை நன்னடத்தையின் அடிப்படையில் தண்டனைக் குறைப்பு செய்து தலைவர்களின் பிறந்த நாட்கள், சுதந்திரதினம், குடியரசுதினம் போன்ற தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நாட்களில் விடுவிப்பது மாநில அரசுகளின் வழக்கம்.அதன்படி 2013 டிசம்பர் மாதத்தில் ஆந்திர மாநிலஅரசு 388 ஆயுள் கைதிகளை விடுதலை செய்திருக்கிறது.ஐந்து ஆண்டுகள் சிறையில் இருந்த பெண் கைதிகள்அனைவரும் ஆந்திர அரசால் விடுவிக்கப்பட்டுள்ளனர்ஏழுஆண்டுகள் சிறையில் இருந்த ஆண் கைதிகளும் விடுதலைஆகி உள்ளனர். 65 வயதைத் தாண்டிய அனைத்துக்கைதிகளும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்கர்னாடக மாநிலஅரசு அங்கிருக்கும் ஆயுள் சிறைவாசிகளை விடுதலைசெய்வது தொடர்பான வழிகாட்டு நெறிகளை அண்மையில்உருவாக்கியிருக்கிறதுஆனால் ஆயுள் சிறைவாசிகளைஅதிகமாகக் கொண்ட தமிழ்நாட்டிலோ அவர்களைவிடுவிப்பதற்கு எந்தவொரு நடவடிக்கையும்எடுக்கப்படவில்லை

இந்திய அளவில் இருக்கும் தண்டனை சிறைவாசிகளில்54.1சதவீதத்தினர் ஆயுள் சிறைவாசிகள் எனத் தேசிய குற்றஆவண மைய (என்.சி.ஆர்.பிபுள்ளிவிவரம் கூறுகிறதுஇந்ததேசிய சராசரியைவிடக் கூடுதலாக 64.1 சதவீத ஆயுள்சிறைவாசிகளைக் கொண்ட மாநிலமாக தமிழ்நாடுஇருக்கிறது

மற்ற மாநிலங்களைப்போலவே தமிழ்நாட்டிலும்நீண்டநாட்களாக சிறையில் இருப்பவர்களைப் புத்தாண்டிலும்,தலைவர்களின் பிறந்த நாட்களின்போதும் நன்னடத்தையின்அடிப்படையில் தண்டனைக் குறைப்பு செய்து விடுவித்துவந்தனர். 2006 ஆம் ஆண்டு அரசாணை எண் G.O.Ms.No.873, Home Department, dated 14.09.2006 அடிப்படையில் 10ஆண்டுகள் சிறையிலிருந்த 472 ஆயுள் சிறைவாசிகள்விடுதலை செய்யப்பட்டனர். 2007 ஆம் ஆண்டுபிறப்பிக்கப்பட்ட அரசாணை எண் G.O .Ms.No.1326, Home Department, dated 12.9.2007  அடிப்படையில் 5 பெண்கைதிகள் உட்பட 190 ஆயுள் சிறைவாசிகள் விடுதலைசெய்யப்பட்டனர். 2008 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்டஅரசாணை எண் G.O.Ms.No.1155, Home Department, dated 11.09.2008  அடிப்படையில் 1406 ஆயுள் சிறைவாசிகள்விடுதலைசெய்யப்பட்டனர்ஆனால், 2011 இல் ஆட்சி மாற்றம்நடைபெற்று அதிமுக அரசு பதவியேற்றபின் தண்டனைக்குறைப்பு செய்து ஆயுள் சிறைவாசிகள் எவரும் விடுதலைசெய்யப்படவில்லை

தி.மு. ஆட்சியின்போது 2008 ஆம் ஆண்டில்பிறப்பிக்கப்பட்ட அரசாணை இப்போதும்செல்லுபடியாகக்கூடியதுதான் என்பதை சில மாதங்களுக்கு முன் சென்னை உயர்நீதிமன்றம் உறுதிசெய்திருக்கிறதுஅந்தஅரசாணையைக் குறிப்பிட்டு தனது மகனைவிடுவிக்கவேண்டும் என சென்னை காசிமேடு பகுதியைச்சேர்ந்த மல்லிகா என்பவர் தொடுத்த வழக்கில் அவரதுவாதத்தை ஏற்றுக்கொண்ட சென்னை உயர்நீதிமன்ற அமர்வு,அவரது மகன் இளங்கோ என்ற ஆயுள் சிறைவாசியை 2013நவம்பர் 14 ஆம் தேதி விடுதலை செய்திருக்கிறது

தமிழ்நாட்டிலிருக்கும் ஆயுள் சிறைவாசிகளின் நிலைமை எப்படியிருக்கிறது என்பதற்கு தென்தமிழன் ஒரு உதாரணம்.தற்போது திருச்சி மத்திய சிறையில் ஆயுள் சிறைவாசியாகஇருக்கும் திருதென்தமிழன் மிகவும் உடல் நலிவுற்றநிலையில் எவ்வித நினைவுமின்றி மருத்துவமனையில்கிடக்கிறார்அவர் கைதியாகவே 25 ஆண்டுகளைக்கழித்துவிட்டார். 1987 ஆம் ஆண்டு அவர்கைதுசெய்யப்பட்டார். 1988 ஆம் ஆண்டு அவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டதுஅவருக்கு 2006, 2007 ஆம்ஆண்டு தமிழக அரசால் பிறப்பிக்கப்பட்ட அரசாணைகளின்அடிப்படையிலேயே விடுதலை கிடைத்திருக்கவேண்டும்.ஆனால் சிறை நிர்வாகமும்காவல்துறையும் எதிர்ப்புதெரிவித்த காரணத்தால் அவர் விடுவிக்கப்படவில்லைஅதைஎதிர்த்து அவர் தொடுத்த வழக்கை (Madras High Court , W.P.NO.20511 of 2008 ) விசாரித்த நீதியரசர் சந்துருஅவர்கள், தென்தமிழனை விடுவிக்காததற்கு அரசு தரப்பில்முன்வைக்கப்பட்ட வாதங்களை நிராகரித்ததுடன் அவரைவிடுவிப்பதுகுறித்து பரிசீலிக்கவேண்டும் என 2009 நவம்பர்மாதம் தீர்ப்பு வழங்கினார்(Madras High Court ,Thenthamizhan Alias Kathiravan vs State Of Tamil Nadu on 24 November, 2009,DATED : 24.11.2009) ஆனால் அந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்து தமிழக அரசு தடை ஆணை பெற்றுவிட்டதால் அவர் விடுதலை ஆகவில்லை. தற்போது அவர் கால்கள் செயலிழந்து படுத்த படுக்கையாகிவிட்டார். நினைவும் தவறிவிட்டது. ஏறத்தாழ ஒரு நடைப் பிணமாக மாறிவிட்ட அவரை திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்திருந்தார்கள். அவரது காலில் விலங்கிட்டு மருத்துவமனையின் கட்டிலோடு சேர்த்துப் பிணைத்து வைத்திருக்கிறார்கள் என்ற செய்தி நாளேடுகளில் வெளிவந்தது. அவரை விடுதலை செய்யவேண்டும் என அவர் மகள் தொடுத்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்யத் தாமதித்ததால் இப்போது அவருக்கு ஒருமாத காலம் பரோல்மட்டும் வழங்கியிருக்கிறது.


ரவிக்குமார் கவிதை

நமக்குத் தெரியும்
பிரபஞ்சத்தின் எல்லையைத்தாண்டி நீளும்
இப்பாதை எங்கும் முடியாதென்பது

நமக்குத்தெரியும்
இந்த தேவாலயத்தில் சாத்தான்களும் இல்லையென்பது

நமக்குத் தெரியும் 
இந்தக் கருந்துளைக்குள் வீழ்ந்தவர்களின் பெயர்கள்கூட கிடைக்காதென்பது

நமக்குத் தெரியும்....

எனினும் 
மீண்டும் மீண்டும் 
நாம் நடக்கிறோம்
ஒருவர் கையில் இன்னொருவர்
இதயத்தை ஒப்படைத்து

மீண்டும் மீண்டும்  
நாம் கிடக்கிறோம்
புன்னகை மொய்க்க 
பூக்கள் நெரிய
வானத்தைப் பார்த்தபடி

பின் நவீனத்துவமும் எதிர் நவீனத்துவமும்

தமிழவனின் நாவல்களை முன்வைத்து 1995 இல் நடைபெற்ற விவாதத்தின்போது நான் எழுதிய கட்டுரை ஒன்று: 




Tuesday, February 4, 2014

ஏமாற்ற நினைக்கும் காங்கிரஸ் அரசு!

மக்களவையின் கடைசிக் கூட்டத் தொடரில் தலித்துகளையும் சிறுபான்மையினரையும் ஏமாற்ற நினைக்கும் காங்கிரஸ் அரசு! 


நாளை துவங்கவிருக்கும் மக்களவை கூட்டத்தொடரில்  மொத்தம் 33 மசோதாக்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்படவுள்ளன. தற்போது கிடப்பில் இருக்கும் 29 மசோதாக்கள் மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்படவுள்ள 4 மசோதாக்கள் இதில் அடங்கும். 


எஸ் சி/ எஸ் டி பிரிவினருக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்கும் மசோதா இதில் இடம்பெற்றிருந்தாலும் வன்கொடுமைத் தடுப்பு சட்டத்தை வலிமையாக்கும்  விதத்தில் பல மாதங்களுக்கு முன்பே வடிவமைக்கப்பட்ட திருத்த மசோதா இந்தக் கடைசிக்  கூட்டத் தொடரிலும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படாதது அதிர்ச்சியளிக்கிறது. அதுபோலவே வகுப்புவாதக் கலவரத் தடுப்பு மசோதாவும் தற்போதைய பட்டியலில் இல்லை. 


தலித் மற்றும் சிறுபான்மையினரை ஏமாற்ற நினைக்கும் காங்கிரஸ் அரசு நிச்சயம் அதற்கான விளைவை எதிர்வரும் தேர்தலில் சந்திக்கும்.

Monday, February 3, 2014

முட்டை ஏற்றுமதியைத் தடைசெய்யவேண்டும்! - ரவிக்குமார்


நாமக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் மட்டும்  நாளொன்றுக்கு சுமார் ஒன்றரை கோடி முட்டைகள் உற்பத்தியாகின்றன. இதில் கணிசமான முட்டைகள் கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கும் ஆப்கானிஸ்தான், ஈரான் முதலான அயல் நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. முட்டை வணிகம் சார்ந்து ஏராளமானோர் உள்ளனர். கணிசமான வேலை வாய்ப்புகளையும் அன்னிய செலாவணியையும் இந்தத் தொழில் ஈட்டித் தந்துள்ளது என்பது உண்மைதான். ஆனால் தமிழகத்தின் தண்ணீர்ப் பஞ்சத்துக்கு இந்தத் தொழிலே பிரதான காரணியாக அமையப்போகிறது. 


தமிழகத்தின் நீர்வளம் குறைந்துகொண்டே வரும் இன்றைய சூழலில் நேரடியாகவும் மறைமுகமாகவும் தண்ணீரை அதிகம் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் பொருட்களின் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்தினால் மட்டுமே தமிழகத்தில் ஏற்படப்போகும் தண்ணீர்ப் பஞ்சத்தை சமாளிக்க முடியும். இந்த சிக்கலின் தீவிரத்தைப் புரிந்துகொள்ள நாம் புலப்படாத் தண்ணீர் ( virtual water) குறித்துத் தெரிந்துகொள்ளவேண்டும். 


நெல் விளைவிப்பதற்கு மட்டுமல்ல கார் உள்ளிட்ட எந்தவொரு பொருளை உற்பத்தி செய்யவும் தண்ணீர் தேவைப்படுகிறது. அப்படி உற்பத்தி செய்யப்படும் பொருளை நாம் ஏற்றுமதி செய்யும்போது அந்தப் பொருளோடு அதற்குப் பயன்படுத்திய தண்ணீரையும் சேர்த்தே ஏற்றுமதி செய்கிறோம். ஆனால் அந்தத் தண்ணீர் நம் கண்ணுக்குத் தெரிவதில்லை அதனால்தான் அதை புலப்படாத் தண்ணீர் என்கிறோம். 


ஒரு நாட்டின் நீர் மேலாண்மை என்பது பாசனம், குடிநீர் ஆகியவற்றை நிர்வகிப்பது மட்டுமல்ல. கழிவுநீர், புலப்படாத் தண்ணீர் ஆகியவற்றை நிர்வகிப்பதும்தான். 


இந்தப் புலப்படாத் தண்ணீர் பிரச்சனை குறித்துத் தமிழக சட்டமன்றத்தில் நான் 2006 இல் பேசினேன். 10 ஆண்டுகளுக்கு முன்பே காலச்சுவடு இதழிலும் அதன் பின்னர் ஜூனியர் விகடனிலும் கட்டுரைகளையும் எழுதியிருக்கிறேன். 


இந்த புலப்படாத் தண்ணீரின் முக்கியத்துவம் தெரிந்ததால்தான் வளர்ச்சிபெற்ற நாடுகள் பல இப்போது ஆப்ரிக்க நாடுகளைத் தமது விளைநிலங்களாக மாற்றி வருகின்றன. முன்பு காலனிகளாக மாற்றித்தான் இந்த சுரண்டலை செய்ய முடிந்தது. இப்போது அதற்கு அவசியமில்லை. நவகாலனிய வணிகமுறை அதை எளிதாக்கியுள்ளது. 


தமிழக அரசு தொலைநோக்கோடு இந்தப் பிரச்சனையை அணுகவேண்டும். நமது மாநிலத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களில் பொதிந்திருக்கும் புலப்படாத் தண்ணீரின் அளவு என்ன என்பதைக் கணக்கிட்டு அதை மேலாண்மை செய்யும் நோக்கில் ஏற்றுமதிக் கொள்கையை மறு ஆக்கம் செய்யவேண்டும். 


ஒரு முட்டையை உற்பத்தி செய்ய 126 லிட்டர் தண்ணீர் செலவாகிறது என நிபுணர்கள் கணித்துள்ளனர். தமிழ்நாட்டில் தினமும் உற்பத்தியாகும் ஒன்றரை கோடி முட்டையில் எவ்வளவு ஏற்றுமதியாகிறது எனப் பாருங்கள். அதன்மூலம் எவ்வளவு நீர்வளத்தை நாம் இழக்கிறோம் என்பதைக் கணக்கிடுங்கள். அப்போதுதான் இந்த முட்டை உற்பத்தித் தொழிலால் ஏற்படப்போகும் ஆபத்து உங்களுக்குப் புரியும். 


பிற மாநிலத்தவர் மீதான வெறுப்பை வைத்து அரசியல் செய்யும் தமிழ்த்தேசிய அமைப்புகளும், பெரிய திட்டங்களை எதிர்ப்பதில் மட்டும் அக்கறைகாட்டும் சூழலியலாளர்களும் இந்த புலப்படாத் தண்ணீர் சிக்கலில் கவனம் செலுத்தினால் தமிழ்நாட்டுக்கு நல்லது. 


Saturday, February 1, 2014

டெசோ கூட்டத்தில் தமிழ்ப் பாடம்



இன்று( 1.2.2014) காலை நடைபெற்ற டெசோ கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஊடகங்கள் வாயிலாக அறிந்திருப்பீர்கள். இன்றைய கூட்டத்தில் பேராசிரியரைப் பார்த்தது கூடுதல் மகிழ்ச்சியைத் தந்தது. உடல் கொஞ்சம் மெலிந்திருந்தார் என்றாலும் கருத்துகளில் அதே வலிமை! 


டெசோ கூட்டத்தில் நிறைவேற்றப்படவுள்ள தீர்மானங்கள் ஒவ்வொன்றாக வாசிக்கப்பட்டு விவாதிக்கப்படுவது வழக்கம். அப்போது திரு கலைஞர் அவர்களும் திரு பேராசிரியர் அவர்களும் சொல்லுகிற திருத்தங்கள் அவர்களது கூர்மையான அரசியல் பார்வையை வெளிப்படுத்துவது மட்டுமின்றி தமிழ் மொழிமீதான அவர்களது ஆளுமையையும் புலப்படுத்தும். மற்றவர்களின் கருத்துகளுக்கு அவர்கள் தரும் மதிப்பில் ஜனநாயகம் மிளிரும். 


இன்று நிறைவேற்றப்பட்ட முதல் தீர்மானத்தில் " இலங்கையின் வடக்கு மாகாண கவுன்சில் முதல்வர் விக்னேஸ்வரன் அவர்கள், சமீபத்தில் நடைபெற்ற கவுன்சில் கூட்டத்திலும்" என்று எழுதப்பட்டிருந்தது. அதைக் கேட்ட கலைஞர் சமீபத்தில் என்ற சொல்லைநீக்கிவிட்டு அண்மையில் என்ற சொல்லைப் போடுமாறு கூறினார். " தூரத்தைக் குறிப்பிடும்போதுதான் சமீபத்தில் என்று சொல்லவேண்டும். இங்கு காலத்தைக் குறிப்பிடுகிறோம் எனவே அண்மையில் என்று சொல்வதுதான் சரி" என்று அவர் விளக்கமளித்தார். 


பேராசிரியர் சொன்ன பல திருத்தங்கள் பொருள் குழப்பம் இல்லாமல் உரைநடையை எழுதுவதற்கான பயிற்சியாக இருந்தன. 


டெசோ கூட்டத்தின்போது மட்டுமல்ல ஒவ்வொரு முறை கலைஞரைப் பார்க்கும்போதும் இப்படி ஏதோ ஒன்றைக் கற்றுக்கொள்ள முடிகிறது. நம்மை மாறா வியப்பில் ஆழ்த்தும் இத்தகைய ஆற்றல் கொண்ட அரசியல் தலைவர் வேறு யாராவது தமிழ்நாட்டில் இருக்கிறார்களா?