Monday, December 8, 2014

மகராஷ்டிராவின் உதாரணத்தைத் தமிழகம் பின்பற்றுமா? - ரவிக்குமார்


மகராஷ்டிரா மாநிலத்தில் ஒவ்வொரு மாவட்டமாக மதுவிலக்கை நடைமுறைப்படுத்தி வருகிறது அந்த மாநில அரசு. வார்தா, கட்சிரோலி மாவட்டங்களைத் தொடர்ந்து இப்போது சந்திரபூர் மாவட்டத்திலும் பூரண மதுவிலக்கை அமல்படுத்த மகராஷ்டிர அரசு முடிவுசெய்துள்ளது. 

மதுவிலக்கை அமல்படுத்திய மாவட்டங்களில் கள்ளத்தனமாக மது விற்பனை ஒரு சில இடங்களில் நடப்பதாகப் புகார் வந்தாலும் மதுவிலக்கை நடைமுறைப்படுத்தவேண்டும் எனப் பெண்கள் போராடியதற்கு பலன் கிடைத்திருக்கிறது என்றே சொல்லவேண்டும். இந்த முறையை தமிழ்நாட்டில் ஏன் பின்பற்றக்கூடாது? 

இந்தக் கோரிக்கையை தமிழக அரசியல் கட்சிகள் வலியுறுத்தவேண்டும்.

ஒரு எச்சரிக்கை: மகராஷ்டிர மாநிலம் உருவாக்கப்பட்டு 54 வருட வரலாற்றில் இப்போது முஸ்லிம் ஒருவர்கூட இல்லாத அமைச்சரவையை அங்கே பாஜக- சிவசேனா கட்சிகள் உருவாக்கியுள்ளன. அந்த மதவாத முன்மாதிரியைத் தமிழ்நாடு பின்பற்றக்கூடாது

No comments:

Post a Comment