Wednesday, December 3, 2014

அவர்கள் பயப்படுகிறார்கள் அதனால் கொலைசெய்கிறார்கள்


- மார்க் பியெர்ஸி
தமிழில்: ரவிக்குமார்


இது காட்டு வான்கோழிகளை வேட்டையாடும் காலம்
அவை எவருக்கும் தீங்கிழைப்பதில்லை அலங்காரமான சிறகுள்ள டைனோசர்கள்.
சாப்பிடக் கடினமானவை. பிறகு ஏன் அவற்றைச் சுடவேண்டும்? ஆனால் முடிந்துவிட்டது பருவகாலம்

உங்களிடம் ஒரு சீருடையும் துப்பாக்கியும் இருந்துவிட்டால் கறுப்பின இளைஞர்ளைப் பொருத்தவரை வருடம் முழுதும் பருவகாலம்தான். அவர்கள் மெய்யாலுமே  பயங்கொள்ள வைக்கிறார்கள் போலிஸ்காரர்களை

கறுப்பினக் குழந்தைகள் போலிஸ்காரர்களைத் தின்னப்போகிறார்கள். தலைமூடி கொண்ட சட்டைக்குள் பதுங்கித் திரியும் வெறுங்கை சிறுவர்கள் அச்சுறுத்துகிறார்கள் 
ஒருசில போலிஸ்காரர்கள் மட்டுமே வசிக்கும் நகரில்

செல்போன்கள் துப்பாக்கிகள், பொம்மைத் துப்பாக்கிகளும் பயங்கரமானவை 
கைகளும்கூட ஆயுதங்களாகலாம். ஒரு கறுப்பு உடலேகூட ஆபத்தானது அழிக்கப்படவேண்டியது


Marge Piercy is a poet, novelist, and activist.  She is the author of eighteen poetry books, most recently The Hunger Moon: New & Selected Poems, 1980-2010 (Knopf, 2011).  Her most recent novel is Sex Wars (Harper Perennial, 2005), and she has just published her first collection of short stories, The Cost of Lunch, Etc. (PM Press, 2014).  Piercy is also a frequent contributor to Monthly Review.

No comments:

Post a Comment