Sunday, December 21, 2014

’விகடன்’ ஆசிரியர் எஸ்.பாலசுப்ரமணியன்: கிளிகள் மறக்காது - ரவிக்குமார்ஜூனியர் விகடனில் நான் தொடர்ந்து பத்திஎழுதிக்கொண்டிருந்த காலம் அதுஅப்போது விகடன் குழுமஇதழ்கள் அந்த ஊழியர்களால்’எம்டி’ எனவும் 'பெரியவர்எனவும்மரியாதையோடு குறிப்பிடப்படும் திரு பாலசுப்ரமணியன்அவர்களின் மேற்பார்வையில் இருந்தன என நினைவுசுமார்மூன்றாண்டுகாலம் பத்திகள் எழுதிய பின்னர் அப்போது ஜூவியில்இணையாசிரியராகப் பணியாற்றிக்கொண்டிருந்த நண்பர்விகேஷ் அவர்களிடம் 'பெரியவரைசந்திக்கவேண்டும் என்ற என்விருப்பத்தைத் தெரிவித்தேன்.

தற்போதிருக்கும் அன்ணாசாலை அலுவலகத்தில் புதிப்பிக்கும் பணிகள் நடந்துவந்ததால் ஜூவி அலுவலகம் அப்போது க்ரீம்ஸ் ரோட்டில் தற்காலிகமாக இயங்கிவந்தது. விகேஷ் எனக்கு உடனடியாகவே நேரம் வாங்கித் தந்துவிட்டார்அடுத்த நாள்காலை ஜூவி அலுவலகத்தில் அவரை சந்தித்தேன்.ஒரு சிறிய அறையில் அவர் அமர்ந்திருந்தார். முறுவல் தவழ்வதுபோன்ற முகபாவம், பார்ப்பவர்களிடம் மரியாதையை உருவாக்கும் தோற்றம். எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் இந்தியாவையே திரும்பிப் பார்க்கவைத்த துணிச்சல்காரர் இவர்தானென்று சொன்னால் நம்புவதற்கு சிரமமாகத்தான் இருக்கும், அப்படியொரு பணிவு. 

ஒரு எம்.எல்.ஏ எனத் தெரிந்திருந்தும் ஜூவியில் எல்லா விஷயங்களையும் பற்றி பத்தி எழுத வாய்ப்பு தந்ததற்காகஅவருக்கு நன்றி  தெரிவித்தேன். " நான் தான் உங்களுக்குநன்றி சொல்லணும்ஜூவி வாசகர்கள் க்ரைம் விஷயங்களமட்டும்தான் படிப்பாங்க அப்படீன்னு ஒரு எண்ணம் இருந்ததுஉங்களோட பத்தி வந்தப்புறம் தான் அவங்களோட ரீச் என்னன்னு தெரிஞ்சதுஅதும் ஒரு எம்.எல்.ஏவா இருந்துட்டு நடுநெலையோட உலக விஷயங்களையெல்லாம் பத்தி எழுதுறீங்க. அதுக்கு எவ்வளவு ஒழைக்கணும்னு எனக்குத் தெரியும். ஒங்க நேரத்த ஒதுக்கி எங்களுக்காக எழுதுறீங்களே அதுக்காக நான் உங்களுக்கு தேங்க் பண்ணனும்என்றார்.

என்னைப்பற்றியும் எனது பிள்ளைகள் பற்றியும் கேட்டுத்தெரிந்துகொண்டார்.” தமிழ்ல பயிற்சி பெற்ற இதழாளர்கள் குறைவாத்தான் இருக்காங்க. அதனால ரிப்போர்ட்டிங்ல பல பிரச்சனைகள் வருது.இந்து பத்திரிகை நிறுவனம் ஆங்கில இதழியலுக்காக ’ஆசியன் காலேஜ் ஆஃப் ஜர்னலிசம்னு’ நடத்துற மாதிரி தமிழ் ஜர்னலிசத்துக்காக நீங்க ஒரு பயிற்சிக் கல்லூரியை ஆரம்பிச்சா உதவியா இருக்கும்” என்று அவரிடம் சொன்னேன். ” என்னைக் கேட்டா அப்படி எந்த ட்ரெயினிங்கும் வேணாம்னுதான் சொல்வேன். இப்போ தமிழ்ல இருக்குற நல்ல பத்திரிகையாளர்கள் எந்த காலேஜ்ல படிச்சாங்க?” என்று என்னைத் திருப்பிக் கேட்டார். “அது வேற தலைமுறை. இன்னைக்கு நெலமை அப்படி கிடையாது. ஒரு கிராமத்துல இருக்குற பிரச்சனைய புரிஞ்சுக்கணும்னாகூட உலக நடப்புகளப் பத்திய அறிவு இருந்தாகணும்குற நெலமை இப்போ” என்று நான் சொன்னேன். ” என் காலம் முடிஞ்சு போச்சு.என் பையன் சீனிவாசன்தான் இப்போ எல்லாத்தையும் பார்க்கிறார். அவருக்கு நீங்க சொல்ற விஷயத்துல ஆர்வம் உண்டு. அவர்கிட்ட பேசுங்க” என்றார். 

திரு பாலசுப்ரமணியன் அவர்கள் பிராமண வகுப்பில் பிறந்தாலும் தனது நிறுவனத்தில் சாதி பார்த்து எவரையும் வேலைக்கு அமர்த்தியது இல்லை என நான் கேள்விப்பட்டிருக்கிறேன். இப்போதுகூட அந்தக் குழுமத்தின் பத்திரிகைகளை ஆசிரியர்களாக இருந்து நிர்வகிப்பவர்கள் பெரும்பாலும் பிராமணர் அல்லாத இளைஞர்கள்தான். அதைப்பற்றி அவரிடம் நான் குறிப்பிட்டபோது நான் இப்போ படப்பையில இருக்குற வீட்லதான் இருக்கிறேன். அங்கே எனக்கு எல்லாமும் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான். அவங்கதான் என்னப் பாத்துக்குறாங்க. நீங்க படப்பைக்கு என்னோட வீட்டுக்குவரணும்நான் பிரமாதமா என்.வி சமைப்பேன்.அதுவும் போர்க் ரொம்ப நல்லா சமைப்பேன். நானே சமைச்சு உங்களுக்குசாப்பாடு போடறேன்என்றார்அவரோடுபேசிக்கொண்டிருந்தபோது தமிழ்நாட்டின் மிகப்பெரிய ஊடகநிறுவனம் ஒன்றின் முதலாளியோடு பேசுகிற உணர்வேஎழவில்லைஅவ்வளவு எளிமையாகவும் அன்பாகவும் இருந்ததுஅவரது அணுகுமுறை.

நான் சந்தித்துவிட்டுவந்த சில நாட்களில் அவர்அமெரிக்காவுக்குப் போய்விட்டதாக அறிந்தேன்மீண்டும்ஒருமுறையாவது அவரைப் பார்க்கவேண்டும் எனநினைத்திருந்தேன்அதற்குள் காலம் அவரைப்பறித்துக்கொண்டுவிட்டதுபடப்பையில் அவர் வளர்த்துவரும் எண்ணற்ற பறவைகள் பற்றி நண்பர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். அங்கிருக்கும் கிளிகள் அவரை ‘பாலு’ என்று பெயர் சொல்லிக் கூப்பிடும் என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன். அவரால் பயன்பெற்றவர்கள் அவரை மறந்துவிட்டாலும் அந்தக் கிளிகள் அவரை மறக்காது என்று தோன்றுகிறது.


1 comment:

  1. "நான் பிரமாதமா என்.வி சமைப்பேன்.அதுவும் போர்க் ரொம்ப நல்லா சமைப்பேன். நானே சமைச்சு உங்களுக்குசாப்பாடு போடறேன்"# விகடன் ஆசிரியர்
    இந்த விஷயம் விஷேசமானது!

    ReplyDelete