Showing posts with label lokpal. Show all posts
Showing posts with label lokpal. Show all posts

Friday, August 26, 2011

அம்பேத்கர் வழியில் வந்த அவர்களை வணங்குகிறேன்!


இன்று (26.08.2011) காலை சுமார் பதினொரு மணியளவில் பல்கலைக்கழக மானியக் குழுவின் (யு.ஜி.சி) முன்னாள் தலைவர் திரு.எஸ்.கே.தோரட் என்னைத் தொலைபேசியில் தொடர்புகொண்டார்.அவர் இந்து நாளேட்டில் லோக்பால் குறித்து எழுதியிருந்த கட்டுரையைச் சுட்டிக்காட்டிப் பாராட்டினேன். அவருடைய கட்டுரை வெளியானதற்கு முந்தைய நாள்தான் அருந்ததி ராயின் கட்டுரை வெளியாகியிருந்தது .(இதை எழுதும்போது இந்து நாளேட்டின் இணையதளத்தை சோதித்தேன். அருந்ததியின் கட்டுரைக்கு 1031 எதிர்வினைகள் பதிவாகியிருந்தன. தோரட்டின் கட்டுரைக்கு 229 எதிர்வினைகள் மட்டுமே பதிவுசெய்யப்பட்டிருந்தன.) இரண்டு கட்டுரைகளுமே அண்ணா அசாரேவின் வழிமுறைகளை ஏற்கவில்லை என்றபோதிலும் வேறுவேறு அணுகுமுறைகளைக் கொண்டிருந்தன.

கடந்த சில நாட்களாக இந்திய ஊடகங்களின் உயிர்க்காற்றாக மாறிவிட்டிருக்கும் லோக்பால் பிரச்சனையை மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு எப்படி தீர்க்கப்போகிறது எனத் தெரியவில்லை. பிரதமர் மன்மோகன் பேசியதற்கும், ராகுல் பேசியதற்கும் இடையே நிறைய வேறுபாடுகள்  இருக்கின்றன. மன்மோகனின் சரணாகதிப் பேச்சிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாக ராகுலின் பேச்சு இருந்தது.நாளையதினம் நாடாளுமன்றத்தில் வெளிப்படப்போவது மன்மோகனின் கருத்தா அல்லது ராகுலின் கருத்தா என்பதைக் கவனிக்கவேண்டும். மன்மோகன்சிங் ஓய்வெடுக்கப் போவதற்கான நேரம் நெருங்கிவிட்டது என்பது தெளிவாகிவிட்டது. அவர் இனிமேலும் பிரதமர் பொறுப்பிலிருந்துகொண்டு சிரமப்படத் தேவையில்லை. அவர் பதவியில் நீடித்தால் பாரதிய ஜனதாவுக்கென்று தனியே ஒரு தலைவரை நியமிக்கத் தேவையிருக்காது. அந்த அளவுக்கு பி.ஜே.பியை வளர்க்கின்ற பணியில் ஈடுபட்டிருக்கிறார் மன்மோகன் சிங்.  இது காங்கிரஸின் உள்கட்சிப் பிரச்சனை என்று நாம் ஒதுங்கிக்கொள்ள முடியாது. நரசிம்ம ராவ் வளர்த்துவிட்ட இந்துத்துவம் இந்த நாட்டையே சூறையாடியது,  பல்லாயிரக் கணக்கான உயிர்களைப் பலிவாங்கியது. அதுபோல மன்மோகன் சிங்கின் சரணாகதி அணுகுமுறையும் எதிர்கால இந்தியாவை நாசம் செய்யப் போகிறது. அதில் சந்தேகமே இல்லை.

தோரட்டோடு பேசிக்கொண்டிருந்தபோது அவரிடம் லோக்பால் குறித்த என் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டேன். தற்போது அரசுப் பணிகளில் மட்டும்தான் இட ஒதுக்கீடு இருக்கிறது.அதுவும் சரிவர நிரப்பப்படுவதில்லை. ’பின்னடைவுப் பணியிடங்களை நிரப்புவோம்’ என்பது அரசியல் கட்சிகளின் போலி வாக்குறுதிகளில் ஒன்றாகிவிட்டது.பதவி உயர்வுகளில் இட ஒதுக்கீடு இல்லை என்றார்கள், உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியும்கூட பல மாநிலங்களில் பதவி உயர்வில் இட ஒதுக்கீடு கொடுக்கப்படவில்லை. தட்டுத் தடுமாறி தலித் ஒருவர் பதவி உயர்வுக்குத் தகுதி பெற்றால் அவர்மீது இல்லாததும் பொல்லாததுமான குற்றச்சாட்டுகளைச் சொல்லி அவருக்கு ‘மெமோ’ கொடுத்து , பதவி உயர்வுக்குத் தகுதியில்லாமல் ஆக்கிவிடுவது ஆதிக்க சாதியினரின் சதிவேலைகளில் ஒன்று. அப்படியான சூழலில் அண்ணா அசாரேவின் லோக்பால் மசோதா சட்டமாகிவிட்டால் அதனால் தலித்துகள் அதிகம் பாதிக்கப்படுவார்கள். ஏற்றத் தாழ்வுகளை அடிப்படையாகக் கொண்ட இந்திய சமூகத்தில் எல்லையற்ற அதிகாரத்தோடு ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டால் ,அதில் தலித்துகள் இடம்பெறுவதற்கு வழியில்லையென்றால் நிச்சயம் அது சாதிய சமூகத்தின் பாரபட்சங்களை மறு உற்பத்தி செய்யும். செல்வாக்கு உள்ளவர்களையும், வலிமையானவர்களையும் லோக்பால் அமைப்பு தண்டிக்கும் என்று சொல்ல முடியாது, ஆனால் தலித்துகள் நிச்சயம் அதனால் பலியிடப்படுவார்கள். இந்த ஆபத்தை உணர்ந்தே தலித் அறிவுஜீவிகள் லோக்பால் மசோதாவை, அண்ணா அசாரேவை எதிர்க்கிறார்கள்.

தோரட் ஒரு யோசனையைத் தெரிவித்தார். ’தலித் ஒருவரைப் பற்றி லோக்பால் அமைப்பிடம் புகார் தெரிவிக்கப்பட்டால் அந்தப் புகாரில் சாதிய காழ்ப்பு இருக்கிறதா என்பதை ஆராயவேண்டும். அப்படி ஆராய்வதற்குத் தனியே ஒரு அமைப்பை உருவாக்கத் தேவையில்லை. தற்போது மத்தியிலும் மாநிலங்களிலும் இருக்கின்ற தாழ்த்தப்பட்டோர் ஆணையமே அதற்குப் போதும்’ என்று தோரட் சொன்னார்.அதைப்பற்றி விரிவாக ஒரு கட்டுரை எழுதி  அதை நாடாளுமன்ற தலித் உறுப்பினர்களிடையே சுற்றுக்கு விட்டிருப்பதாகவும் சொன்னார்.

பாபர் மசூதி இடிப்பின்போதும் அதற்குப் பிறகான வன்முறைகளிலும் எஸ்.சி/எஸ்.டி பிரிவைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டதாகப் பழிபோட்டார்கள். அதுபோலத்தான் குஜராத் கலவரத்துக்குப் பிறகும் சொன்னார்கள். லோக்பாலைப் பற்றியும் அப்படியொரு விமர்சனம் வந்திருக்கலாம். ஆனால் அதற்கு வாய்ப்பெதுவும் தராமல் தலித்துகள் சரியாகத் தமது உணர்வுகளை,ஐயங்களை வெளிப்படுத்தி வருகிறார்கள். அம்பேத்கர் வழியில் வந்த அவர்களை வணங்குகிறேன்!

Thursday, August 25, 2011

" Why Are Dalits Not Enthusiastic About Anna's Movement? " - By Bhanwar Megwanshi





Anna Hazare's `anti-corruption' has received considerable support across the
country. The `mainstream' media is awash with stories about Anna and his
fast. It is as if there is nothing else happening in India that is worth
reporting about.

But, at the same time as the media is busy projecting Anna and his movement,
a vast section of India's population—the country's Dalits, Adivasis and
religious minorities, who are at the bottom of India's social pyramid and
who suffer the most at the hands of the corrupt system that Anna and his
supporters are supposedly denouncing—have maintained a studied distance from
this movement. Not a single well-known and respected Dalit or Adivasi
intellectual, social activist or public leader has come out in support of
the movement. Nor, too, have ordinary Dalits and Adivasis. Likewise, workers
and peasants are hardly involved in the movement. Yet, despite this, the
movement and the men leading it claim to represent the entire country!

`India Against Corruption', the outfit behind Anna's movement, claims that
it is the voice of the 120 crore people of India. But, when the tens of
crores of Dalits, Adivasis and religious minorities have evinced little
interest in the movement, how can such erroneous claims be made on their
behalf and on behalf of this movement, too? One of the reasons that Dalits,
Adivasis and religious minorities feel ignored by the movement is precisely
this sort of behavior on the part of the men behind this movement,
self-proclaimed `people's leaders' who are projecting themselves as the
messiahs of the masses.

To understand why the oppressed castes have shown little or no interest in
what is being projected by the media as independent India's supposedly
largest mass movement, the movement needs to be analysed from a caste
perspective. It is striking to note that when Anna went on a fast at Jantar
Mantar, in New Delhi, the banners that his supporters put up depicted a
whole range of icons, from `Bharat Mata' to Gandhi, Shivaji and Lakshmi Bai.
But Babasaheb Ambedkar and Mahatma Jotiba Phule, the true liberators of the
oppressed castes, were conspicuous by their absence. At the venue of the
fast, slogans like `Scrap Reservations, End Corruption!' rent the air.
Dalits who visited the venue came back thoroughly disheartened on being
confronted with the fact that the movement was distinctly opposed to
reservations for the oppressed castes.

But that was not all. When the joint drafting committee for the Lokpal was
formed and five members from `civil society' were nominated for this
purpose, not a single one of them was found to be from among the Dalits,
Adivasis or religious minorities! Moreover, not one of them was a woman!
When Dalit leaders from across the country raised their voice against this,
Arvind Kejriwal, the man who heads `India Against Corruption', replied that
one needs specialists in order to devise laws.

Is it the case, Dalits demand to know, that more than 60 years ago, a Dalit,
in the form of Babasaheb Ambedkar, was available to take up the task of
presiding over the drafting committee of the Indian Constitution, but that
today not a single Dalit can be found who is thought `capable' enough to sit
on a panel to draft a single law? True to form, here, too, questions are
raised as to the supposed merit or capabilities of Dalits.

When Dalits protested against this insinuation, Kejriwal simply replied that
the government could appoint a Dalit. In other words, reservations may be
followed in the rapidly-shrinking government sector but certainly not in the
burgeoning private sector, nor in the so-called `civil society' that falsely
claims to represent the whole of Indian society. Is it at all surprising,
then, that Dalits and other oppressed castes consider this `anti-corruption
movement' to be a cover for an `anti-reservation movement' and, hence, have
distanced themselves from it? Can Anna's team, that presides over a movement
that is funded by certain corporate houses, tell us what the movement's
stand is on reservations for the oppressed castes in the private sector?
What is the condition of Dalits in Anna's own so-called model-village of
Ralegan Siddhi? Is Anna himself a supporter of the *varna* system in the
name of `*gram* *swaraj'*? What message is being sent out to the millions of
Dalits and other oppressed communities through slogans such as `Anna is
India!', `Those who are not with Anna are thieves!' and `Reservations are
the Root of Corruption!'?

Dalit, Adivasi and religious minorities are curious to know why Anna Hazare
and his followers did not care to go on a fast when heinous atrocities were
committed against their people. Why not when Dalits were brutally massacred
in Hazare's own state of Maharashtra, in the remote village of Kharilanji,
which set off mass protests by Dalits across Maharashtra and beyond? Why not
when, under the guise of Salwa Judum, the government was seeking to crush
Adivasis protesting against oppression by branding them as Naxalites? Might
this indicate that Anna and his team have no interest at all in the
injustice and oppression that millions of Dalits, Adivasis and religious
minorities have to suffer on a daily basis? By praising Narendra Modi, who
permitted the brutal murder of several thousand innocent Muslims, Anna has
clearly shown that communalism and fascism, too, are not issues that he is
interested in struggling against. Anna did not sit on a fast to protest
against the suicides of tens of thousands of impoverished peasants in his
own Maharashtra. Given all this, is it surprising that Dalits, Adivasis and
religious minorities are, by and large, simply not interested in joining his
movement?

The oppressed castes are wary of Anna's team and its demands for another
reason. The Lokpal that Anna's team is demanding will be so powerful that it
will possess all sorts of powers—to hear complaints, to investigate
allegations, to arrest, to tap phones, to snoop in on emails and SMSes and
even to impose punishments. This enormously powerful body will be even
superior to the country's Legislature, Executive and Judiciary. The
Constitution speaks of the separation of powers of these three wings of
governance, but the Lokpal that Anna's team is demanding would clearly
subvert this structure by imposing itself, in an Unconstitutional manner,
over and above the three wings. While from a village-level *patwari* to the
Prime Minister, everyone would be answerable to the Lokpal, the Lokpal
itself would be answerable to no one at all. This clearly indicates that
under the guise of Anna's `anti-corruption movement', an uncontrollable mob
is seeking to set aside the Constitution of this country and Constitutional
provisions and do away with democracy.

Babasaheb Ambedkar was the Chairman of the Drafting Committee of the Indian
Constitution, and so Dalits have an emotional attachment to the
Constitution. If a movement sets itself above the Constitution and
challenges democracy, a key pillar of the Constitution, Dalits will refuse
to support it. That is why Dalits and other oppressed caste groups remain
indifferent to Anna Hazare's movement. And, because of this, the movement,
despite claiming to speak for the whole of India, is nothing of the sort.
Rather, it may be considered the voice of just a section of the
English-speaking middle-class Savarna Hindu minority.



(Translated by Yoginder Sikand)


Bhanwar Megwanshi
is a noted social activist from Bhilwara, Rajasthan. He
edits the Hindi monthly `*Diamond India'*, a journal that deals with
grassroots' social issues. He is associated with the Rajasthan-based
Mazdoor-Kisan Shakti Sangathan (MKSS), and can be contacted on
bhanwarmegwanshi@yahoo.com/ 09829646720

Dalits call Anna stir 'upper caste'




The anti-politician feeling generated by Anna Hazare's agitation,
combined with Arvind Kejriwal's association with the Youth for
Equality, the organisation that spearheaded the anti-reservation
agitation in the AIIMS, has triggered a sense of unease among
parliamentarians belonging to Dalit and backward communities.

Dalit and OBC MPs on Wednesday lamented the "attack on the supremacy
of Parliament and the Constitution". From BJP's Hukumdeo Narain Yadav
to JD-U president Sharad Yadav and Lok Janshakti Party president Ram
Vilas Paswan, there was a sharp attack on what the MPs said was an
attempt to "undermine the Constitution".

This happened on a day when Dalit leader Udit Raj of the All India
Confederation of SC/ST Organisations led a march of around 500
activists from Jantar Mantar to India Gate against Hazare's agitation.
The rally brought peak hour evening traffic to a crawl in central
Delhi.

"Anna must clarify his stand on several issues before he speaks about
the Jan Lokpal Bill," Raj said. The protesters said Hazare's protest
was as "upper caste movement that has little to do with the oppressed
classes of society". Udit Raj's supporters criticised Team Anna's Bill
for leaving out of Lokpal's ambit NGOs, media and the corporate
sector.

Like them, the Dalit MPs too felt that the Jan Lokpal Bill assumes
supremacy of an unelected panel over legislature, executive and the
judiciary. This has instilled a fear among MPs belonging to weaker
sections who perceive Hazare's stir as an upper- caste movement.

Narain Yadav, a Lok Sabha MP from Bihar, expressed his unhappiness at
the " exclusion" of weaker sections from the debate at the BJP
parliamentary party meeting.

JD-U president Sharad Yadav received applause from the treasury as
well as the Opposition benches when he said corruption in society was
linked to the caste system and couldn't be eliminated through a law
alone.

"No law can prevent corruption that is inherent in Indian society
because of the caste system. Unless there is social justice,
corruption will continue to plague the system. When the drains are
flowing with sewage, how will sprinkling a bit of DDT help? You need
to clean the drain," Yadav said in the Lok Sabha.



http://indiatoday.intoday.in/site/story/dalits-call-anna-stir-upper-caste/1/149069.html

Wednesday, August 24, 2011

அண்ணா அசாரே : சாதியை ஒழிப்பதற்காக ஒரு சாதாரண ஆத்மாவோ அல்லது மகாத்மாவோ இருக்கிறர்களா?





24.8.2011 அன்று புதுதில்லியில் இந்திய தலைமை அமைச்சர் இல்லத்தில்  லோக்பால் மசோதா தொடர்பாகநடைபெற்ற நாடாளுமன்ற கட்சித்தலைவர்களின் கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் ஆற்றிய உரை:

மாண்புமிகு தலைமை அமைச்சர் அவர்களே, அனைத்துக் கட்சித் தலைவர்களே வணக்கம்
இந்த அரிய வாய்ப்புக்கு நன்றியைத்தெரிவித்துக்கொள்கிறேன்.
 
அண்ணா  அசாரே குழுவினரின் போராட்டத்தைஅரசு எவ்வாறு முடிவுக்குக் கொண்டுவரப்போகிறது என்பது தான் தற்போதைய முதன்மையான சிக்கலாக உள்ளது.பொதுமக்களின் பேராதரவுடன் அவர்களின்  போராட்டம் நாளுக்குநாள் வலுப் பெற்றுவருகிறது.இன்றைய நிலையில் அரசுக்கு இதுவே மிகப்பெரும் சவாலாக உள்ளது.

நமது நாட்டில் வறுமை,ஊழல்,பயங்கரவாதம்,மற்றும் சாதி,மதம்,ஆகியவற்றின் பெயரால் நடக்கும் ஓரவஞ்சனைகள் போன்ற தீர்வு காணப்படவேண்டிய  எரியும்  பிரச்சனைகள் ஏராளமாக  உள்ளன என்பதனை நாம் அறிவோம் .குறிப்பாக தலித் மக்கள் நாடு முழுவதும் ஒவ்வொரு நிமிடமும் அனைத்து வகையிலுமான வன்கொடுமைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.இதனைத்  தீர்க்கப்படவேண்டிய ஒரு பிரச்சனையாகவே எடுத்துக்கொள்ள யாரும் முன்வரத் தயாராக இல்லை .

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு  மேலாக இத்தகைய ஓரவஞ்சனைகள்,வன்கொடுமைகள்,தலித் மக்களுக்கும்,பிற உழைக்கும் மக்களுக்கும் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. இந்நாட்டில் சாதியை ஒழிப்பதற்காக யாரேனும் ஒரு சாதாரண ஆத்மாவோ அல்லது மகாத்மாவோ இருக்கிறர்களா? எனினும் ,தற்போது ஊழலை ஒழிப்பதற்காகப் போராடிக்கொண்டிருக்கும் அனைவரையும் நான் பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்.ஆனால் ,நாடாளுமன்ற அவைக்கு ஆணையிடும் வகையில் நடந்துகொள்ளும் முறை ஏற்புடையது அல்ல. அரசியலமைப்பு சட்டத்திற்கான உச்சநிலை அதிகாரம் அரசால் பாதுகாக்கப்பட வேண்டும் .எனவே அண்ணா   அசாரேவின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர வலுவானதொரு முடிவை எடுக்கவேண்டுமென அரசை கேட்டுக் கொள்கிறேன்.மக்களின் பிரதிநிதிகளே இத்தகைய பிரச்சனைகளை இறுதி செய்ய வேண்டும். அதுவே  பிரதிநிதித்துவ சனநாயகமாகும் .மாறாக அரசு இத்தகைய நடைமுறைகளை ஊக்கபடுத்தினால் அது இந்திய அரசியலமைப்புச்  சட்டத்திற்கும், சனநாயகத்திற்கும் ,அரசியலமைப்புச் சட்டத்தின் தந்தை .புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களுக்கும் செய்கிற அவமதிப்பாகவே  அமையும் .

நிறைவாக, அண்ணா   அசாரே குழுவினரின் கோரிக்கைகள் எளிதில் புறந்தள்ளக்கூடியவை அல்ல என்பதைச்  சொல்ல விரும்புகிறேன்.நாடாளுமன்றத்தின் உச்சநிலை அதிகாரம் நீர்த்துப்போகாத வகையில் அவர்களின் கோரிக்கைகளை அரசு பரிசீலிக்க  வேண்டும். நாடாளுமன்றத்தில் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்ட லோக்பால் மசோதாவை திரும்பப்  பெறவேண்டிய தேவையில்லை .ஆனால் அம்மசோதாவை வலுவுள்ளதாகவும் , பயனுள்ளதாகவும் அமையக்கூடிய வகையில் நீக்கல் மற்றும் சேர்த்தல் போன்ற தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் .நன்றி !.

Tuesday, August 23, 2011

ஊழலை ஒழிப்பது அல்ல சமூகநீதியை ஒழிப்பதுதான் அவர்களின் நோக்கம் .

அண்ணா அசாரேவை ஆதரிப்பவர்கள் யார்? அவருக்குப் பின்னால் இருப்பவர்களின் கருத்தியல் என்ன? என்பதைப் பற்றி இப்போதுதான் விவாதம் எழத் தொடங்கியிருக்கிறது. அண்ணா அசாரே ஆர்.எஸ்.எஸ் அமைப்போடு தொடர்புகொண்டிருந்தவர்,  அவரை இப்போது ஆதரிக்கும் பலர் இட ஒதுக்கீட்டு எதிர்ப்புப் போராட்டத்தில் முன்னின்றவர்கள் என்று எழுத்தாளர் அருந்ததிராய் அம்பலப்படுத்தியிருக்கிறார். அண்ணா அசாரேவின் ஆதரவாளர் ஒருவர் தன் முதுகில் தொங்கவிட்டிருக்கும் இந்த பதாகையைப் பாருங்கள் , அவர்கள் எதற்காகப் போராடுகிறார்கள் என்பது புரியும்.  ஊழலை ஒழிப்பது அல்ல சமூகநீதியை ஒழிப்பதுதான் அவர்களின் நோக்கம் .

Sunday, August 21, 2011

அண்ணா அசாரே:நாடாளுமன்றத்தில் தொல்.திருமாவளவன்உரை

ஈழத்தில் முகாம்களைப் பார்வையிடும் திருமாவளவன் 

அண்ணா அசாரேயின் கைதைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் பிரதமர் மன்மோகன் சிங் தாக்கல் செய்த அறிக்கையின்மீதான விவாதத்தில் பங்கேற்று சிதம்பரம் மக்களவைத் தொகுதியின் உறுப்பினரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (வி.சி.க) தலைவருமான திரு. தொல்.திருமாவளவன் அவர்கள் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை:


மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே!

இந்த அவையிலே இன்று காலை பிரதமர் அவர்கள் அண்ணா  அசாரே கைது தொடர்பாக தாக்கல் செய்த அறிக்கையின்
மீதான விவாதத்தில் பேசுவதற்கு எனக்கு வாய்ப்பு அளித்தமைக்கு இதயம் கனிந்த நன்றி.

மாண்புமிகு பிரதமர் அவர்கள்,  தனது நீண்ட நெடிய அறிக்கையில் எத்தகைய சந்தர்ப்ப சூழ்நிலையில் அண்ணா அசாராவை கைது செய்ய நேரிட்டது என்று விரிவாக எடுத்துரைத்தார்.அந்த அறிக்கையில் அண்ணா அசாரேவிற்கு உண்ணா விரதம் இருக்க அனுமதியளிக்கபட்டதாகவும் ஆனால் அதில் சில நிபந்தனைகள் அவருக்கு ஏற்புடையதாக இல்லையென்றும் அவரது பிடிவாதமான நிலைபாட்டால், அவர் மேற்கொள்ள இருந்த சில செயல்பாடுகள் சட்டம்,ஒழுங்கை பாதித்து விடுமோ  என்கின்ற ஐயத்தில் அவரை கைது செய்யும் நிலைக்கு அரசு தள்ளபட்டது  என தனது நீண்ட அறிக்கையில் தெரிவித்தார். மேலும் இந்த அரசு
அமைதியான போராட்டங்களுக்கு எதிரானது அல்ல எனக் குறிப்பிட்டார். சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கவே இந்த நடவடிக்கை எடுக்கபட்டது என்று பிரதமர் சொன்னாலும் கூட,  இந்தச் சூழலை இன்னும் திறம்படக் கையாண்டு இருக்கலாம். இது போன்ற  கைது நடவடிக்கையின் மூலம் மக்கள் மத்தியில் இந்த அரசின் மீது ஓர் எதிர்மறையான எண்ணம் தோன்றியுள்ளது.   ஆளும் காங்கிரஸ்கட்சி,   ஊழலை ஒழிக்க முன்வரவில்லை என்ற  ஓர் கருத்து மக்கள் மத்தியில்
ஏற்பட்டுள்ளது.  ஏனோ எதிர்கட்சிகள் மட்டுமே ஊழலை ஒழிக்கப்  போராடி வருவதைப்போல ஒரு பொய் தோற்றத்தை உருவாக்கியுள்ளது.   அவர்கள் இந்த சூழ்நிலையை தங்களுக்கு சாதகமாகப்  பயன்படுத்தி அரசியல் ஆதாயம் தேட முற்பட்டுள்ளார்கள்.

அண்ணா அசாராவைக் கைது செய்ததற்குப் பதிலாக அவரை வீட்டுக் காவலில் வைத்து இருக்கலாம். அல்லது, அவர்களின் உண்ணாவிரதத்தை தொடர அனுமதித்து,  அவருடன் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கலாம். இந்தப் பிரச்னையை தக்க வழிமுறையில் கையாண்டு சுமுகமாக அதே நேரத்தில் ஒரே அடியாகத் தீர்த்து வைத்திருக்கலாம்.  ஆனால்  இதனை இப்போது கையாண்ட முறையினால் அரசுக்கு எதிரான ஒரு கருத்தை உருவாக்கியுள்ளது.  இந்த அவையினை இன்றைக்கு
வழிநடத்துவது ஆளும் கூட்டணியா?அல்லது எதிர்க்கட்சிகளா?என்கின்ற ஒரு தெளிவற்ற நிலை உள்ளது.

எதிர்கட்சியினர் இந்த அவையைத் தாங்கள் இழுத்த இழுப்பிற்கு ஏற்றவாரு செயல்பட வேண்டுமென நினைக்கிறார்கள், தொடர்ந்து இந்த அவையினைச் செயலிழக்க  வைக்கின்றனர். இலங்கையில் சொந்த மண்ணில், மனிதத் தன்மையற்ற முறையில் வதைபடும்  அப்பாவி ஈழத்தமிழர்களின் நிலையினை எடுத்துரைத்து, அவர்களுக்காக இந்த அவையிலே குரல் எழுப்பமுடியாத ஒரு மோசமான நிலை இதனால் ஏற்பட்டுள்ளது என்பதை கனத்த இதயத்தோடு இந்த அவையில் பதிவு செய்கின்றேன்.

பல லட்சம் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாகத்தான் நாங்கள் இந்த அவையிலே இருகின்றோம்.இலட்சக்கணக்கானத் தமிழர்கள்
இலங்கையில் வதைபடும் நிலைகுறித்து,  இந்த அவையில் குரல் எழுப்புவதற்கு எங்களுக்கு   ஜனநாயக வாய்ப்பு மறுக்கப்படுகிறது.    எதிர்கட்சிகள் தான்தோன்றித் தனமாக நடந்து கொள்வதும், அசாரே கைதின் மூலம் ஏற்பட்டுள்ள சூழலும், அவர் விடுவிக்கப்பட்ட முறையும்- இந்த அரசு,  எதிர்கட்சியினரின்
இது போன்ற போராட்டத்தின் அழுத்தத்திற்குப் பணிந்துவிட்டது என்றே தோன்றுகிறது.

நான் இந்த அரசிடம் வலியுறுத்துவது- கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது, ஊழலை எதிர்த்துப் போராடுபவர்கள்மீது அல்ல,
ஊழலுக்கு எதிராகத்தான். இன்னும் குறிப்பாகச் சொன்னால்  ஊழலுக்கான ஆணிவேராக இருப்பவர்கள் மீதும், ஊழல்வாதிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்பதில்  இருவேறு கருத்துகள் இருக்க முடியாது. எனது இந்தக் கருத்தை  எதிர்க்கட்சி ,ஆளும்கட்சி சார்ந்த இருவரிசைகளில் உள்ளவர்களும் ஏற்றுகொள்வார்கள் என நம்புகிறேன். இன்றைக்கு எதிர்கட்சியினர், ஏதோ அவர்கள்தான் ஊழலை வேரோடு பிடிங்கி ஏறிய வந்தவர்கள் போன்ற ஒரு போலித்தனமான தோற்றத்தை உருவாக்கி வருகின்றனர். இந்த  மாயையை  உடைத்து எறிய வேண்டும் .நாம் அனைவரும் நம் அறிவாற்றலை ஒன்று சேர்த்து ஊழலை,  இந்த சமூகத்தில் இருந்து துடைத்து எறிய வேண்டும். இதற்கு நாம் ஊழலின் ஆணிவேரைக் கண்டறிய வேண்டும் .ஏழ்மையும் ஊழலும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்களாகும் ,ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்றால் தேர்தல் முறையில் பல புரட்சிகரமான திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும். மிகப்பெரிய தொழில் நிறுவனங்களும் ,வியாபார நிறுவனங்களும் தான் பல முக்கிய வேட்பாளர்களுக்கு நிதியை அளித்து அதன்மூலம் அவர்களைக் கைப்பாவைகளாக்கித் தங்கள் சொற்படி அரசை  நடத்துகிறார்கள்.
முதலாளிகளும்,தொழில் அதிபர்களும்,தேர்தலில் பணத்தைத் தண்ணீராக வாரியிறைத்து ஊழலுக்கு வழிவகுக்கிறார்கள் எனவே இந்த அரசு  ஊழலுக்கான இந்த ஊற்றுக்கண்ணை அடைத்து ஊழலை முளையிலேயே கிள்ளி எறிய உறுதியான நடவடிக்கைகளைத் திறம்பட மேற்கொள்ள வேண்டும் என்பது தான்  என்  வேண்டுகோள்.
ஒப்பந்தப் புள்ளிகள், ஒப்பந்தப் பணிகள், ஏல முறைகள் போன்றவற்றில் தற்போது உள்ள நடைமுறைகளை முறைப்படுத்தி, வெளிப்படையாக்கி ஊழலுக்கான வாய்ப்பினை முற்றிலுமாகத் தவிர்க்கலாம். கறுப்புப் பணத்தை முழுவதுமாக வெளிக்கொண்டுவரவேண்டும். ஊழல் என்பது மனித வாழ்வின் ஒரு அங்கமாக இருந்து வருகிறது. அதை எளிதில் வேரறுக்க முடியுமா ? ,வெறும் சட்டத்தினால் அதனை அழித்துவிடமுடியாது. ஏற்கனவே தடா, பொடா போன்ற கொடும் சட்டங்களை நடைமுறைபடுத்தியும்கூடப் பயங்கரவாதத்தையும் ,வன்முறையையும் கட்டுப்படுத்த முடியவில்லை.எனவே கடுமையான சட்டங்கள் மட்டும் ஊழலை ஒழிக்க உதவாது திருவள்ளுவர் அவர்கள் "நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும், வாய்நாடி வாய்ப்பச் செயல்" என்று ஒரு நோயைத்தீர்ப்பதற்கான அடிப்படை அணுகுமுறை அந்த நோய்க்கான மூலகாரணத்தை அறிவதுதான் என அறிவார்ந்த முறையில் எடுத்துரைத்திருப்பதை மேற்கோள்காட்ட விரும்புகிறேன்.

நாம் தக்க நடவடிக்கையின்மூலம் ஊழலுக்குக் காரணமானவர்களை, இந்த சமூகத்தை ஊழல் மயமாக்குபவர்கள் யார் என்பதை, ஊழல்வாதிகள் யார் என்பதைக் கண்டறிந்து ஊழலை இந்த சமூகத்தில் இருந்து முற்றிலுமாகத் துடைத்தெறிய வேண்டும் .ஊழல் முதலாளிகள் ,தொழில் அதிபர்கள் மீதும்
கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என இந்த அரசை வலியுறுத்துகிறேன்.ஜன்லோக்பால் சட்டமாக இருந்தாலும் லோக்பால் சட்டமாக இருந்தாலும் அதனால் ஊழலை வேரறுக்க முடியாது.

ஊழலுக்கான ஆணிவேர் கண்டறியப்படுவதோடு மக்களின் அடிப்படை மனநிலையும் மாறவேண்டும் தொழில் நிறுவனங்கள் ,முதலாளிகள்மீதான பிடியினை இந்த அரசு மேலும் இறுக்கவேண்டுமென வலியுறுத்துகிறேன் .

மேலும் இந்த விவகாரம் குறித்து ஒரு சமாதான உடன்படிக்கையை  ஏற்படுத்தும் வகையில் அண்ணா அசாரேவுடன் பேச்சுவார்த்தைத் தொடங்கி ஊழல் பிரச்சனையை திறம்படக் கையாண்டு முழுமையாக ஊழலை ஒழிக்க முற்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.