Thursday, September 15, 2011

'யாவரும் கேளிர்' மடற்குழுவில் உறுப்பினர் ஆகுங்கள்




கணினியின் பயன்பாடு எண்ணிப்பார்க்க முடியாத அளவுக்கு அதிகரித்துவரும் காலம் இது. அதுபோலவே இணையத்தின் பயன்பாடும் அதில் தமிழின் பங்கேற்பும் பெருகிவருகிறது. தளங்கள், வலைப்பூக்கள் என்பவற்றை உருவாக்கி எவரும் தமது கருத்துகளைப் பொது வெளியில் முன்வைக்க முடியும் என்ற சாத்தியப்பாடு ஜனநாயகத்தின் பரப்பை அதிகரிக்கச் செய்திருக்கிறது. தற்போது தமிழக அரசு துவக்கியிருக்கும் இலவச மடிக் கணினி வழங்கும் திட்டம் இதை இன்னும் விரிவாக்கும் என்பது உறுதி.

வலைத்தளம்,வலைப்பூ என்பவற்றைப் போலவே மடற்குழுக்களும் இன்று தமிழில் பெருகிவருகின்றன. முன்னவற்றைப் போலன்றி மடற்குழுக்கள் உரையாடலுக்கான வாய்ப்பை அதிகமாகக் கொண்டிருப்பதால் கூட்டுணர்வு பெருக இதில் வாய்ப்பு அதிகம். அதுமட்டுமின்றி தீவிரமான விவாதங்களையும் இவற்றில் நாம் நடத்த முடிகிறது. இணையத் தொழில்நுட்பம் எந்த அளவுக்கு ஜனநாயகத்துக்கு உதவியாக இருக்கிறதோ அதே அளவுக்கு அது சமத்துவத்துக்கு எதிராகப் போகும் ஆபத்தும் உண்டு. அதில் பங்கேற்கும் வாய்ப்பு எல்லோருக்கும் கிடைப்பதில்லை. அதற்குப் பல்வேறுவிதமான அரசியல், சமூக, பொருளாதார, பண்பாட்டுக் காரணங்கள் இருக்கின்றன. சம வாய்ப்பு இல்லாமல் சமத்துவம் இருக்க முடியாது. அதிலும் இந்தியா போன்றதொரு நாட்டில் இதைப்பற்றி நாம் எப்போதும் விழிப்போடு இருந்தாக வேண்டும். அந்த உணர்வோடு உருவாக்கப்பட்டிருப்பதுதான் ‘ யாவரும் கேளிர்’ என்ற மடற்குழு.

'பெரியோரை வியத்தலும் இலமே; சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே ' என்ற கணியன் பூங்குன்றனின் பாடல் வரிகளை மனதில் கொண்டு தமிழ்ச் சமூகத்தில் சமத்துவ உணர்வைப் பரவச் செய்யும் நோக்கோடு செயல்படும் மடற்குழு இது . இந்தியச் சமூகத்தின் படிநிலை அமைப்பு இணையத்தில் உருவாகிவிடாமல் காப்பது இதன் உடனடி நோக்கம். சங்க காலம் முதல் சமகாலம் வரை எந்தவொரு பொருள் குறித்தும் இதில் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளலாம்.

இந்த மடற்குழுவில் உறுப்பினராவது மிகவும் எளிது. yavarumkelir@googlegroups.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதுங்கள். அவ்வளவுதான். உங்கள் மடல் அந்தக் குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் சென்று சேர்ந்துவிடும். 

No comments:

Post a Comment