நண்பர்களுக்கு வணக்கம்
நமது நிகழ் காலத்தின்மீது கறையாகப் படிந்துபோன நிகழ்வுகளில் ' பரமக்குடி படுகொலை' சம்பவமும் ஒன்று. தகவல் நெடுஞ்சாலைகளில் நித்தமும் நேரும் விபத்துகளில் உண்மைகள் உயிரிழந்துபோவது வாடிக்கையாகிவிட்டது. வரலாற்றை இடைமறித்துத் திருப்பும் ஆற்றல் நமக்கில்லை. அதிகபட்சமாக நாம் செய்யக்கூடியது நம் காலத்தைப் பதிவுசெய்து வைப்பது மட்டும்தான். ' இன்றைய செய்திகள் நாளைய பொய்கள் ' என்று ஆகிவிட்டச் சூழலில் இலக்கியப் பதிவுகள் மட்டுமே உண்மைகளை உயிர்த்துடிப்போடு வைத்திருக்கும்.
தமிழ் இலக்கியப் பரப்பில் இயங்கிக்கொண்டிருக்கும் நுன்ணுணர்வுகொண்ட படைப்பாளிகள் பரமக்குடி படுகொலை நிகழ்வை எளிதாகக் கடந்துசென்றிருக்கமாட்டார்கள்.அங்கு சிந்தப்பட்டக் குருதியின் ஒரு துளி அவர்களது இதயத்தின் ஏதோவொரு மூலையிலேனும் படிந்திருக்கும். அங்கு எழுந்த அலறல்களின் ஓலம் அவர்களது நெஞ்சில் மோதி எதிரொலித்திருக்கும். அந்த கணத்தில் அவர்களின் படைப்பு மனம் ஒரு கணமேனும் கண்திறந்து பார்த்திருக்கும். அந்தப் படைப்பாளிகளை நோக்கி இந்த வேண்டுகோளை முன்வைக்கிறேன். அந்த கணத்தை எழுத்தில் பதிவு செய்யுங்கள். அதை ஒரு தொகுப்பாக்கித் தமிழ்ச் சமூகத்தின் முன்னால் வைப்போம்.
இது நீதி கோருவதற்கான முறையீடல்ல. நாம் அந்த கணத்தில் மனிதராயிருந்தோம் என்பதற்கான சாட்சியம்.உங்கள் படைப்புகளை ( கவிதை,சிறுகதை,கட்டுரை,ஓவியம் இன்னபிற..)எனது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
- ரவிக்குமார்
மின்னஞ்சல் முகவரி : adheedhan@gmail.com
http://suryajeeva.blogspot.com/2011/09/blog-post_12.html
ReplyDeletehttp://suryajeeva.blogspot.com/2011/09/2.html
http://tparameshwari.blogspot.com/2011/09/6.html
ReplyDeleteஇந்த அழைப்பே
ReplyDeleteஒரு ஆழமான கவிதையாய் இருக்கிறது.