Thursday, May 30, 2013

Interview of Noboru Karashima

‘Unless knowledge of epigraphy develops, no ancient or medieval history of this country can be studied'

Parvathi Menon
Noboru Karashima, Professor Emeritus, University of Tokyo. Photo: M. Vedhan
The Hindu Noboru Karashima, Professor Emeritus, University of Tokyo. Photo: M. Vedhan

In an interview, Japanese scholar Noboru Karashima speaks on his recent work, the state of historical research in universities and government institutes in India, and his deep concern over the uncertain future of the discipline of epigraphy in India.

It is now over 50 years since Noboru Karashima, now Professor Emeritus at the University of Tokyo, published his first study on the medieval economic history of South India – a small essay on land control in Allur and Isanamangalam villages in the Cauvery delta, based on a study of Chola inscriptions. With that he pioneered a methodological framework for studying inscriptions, and for interpreting the mass of information that this historical source contains. He is today a pre-eminent scholar on the medieval history of south India. He has also contributed significantly to a rich tradition of Japanese social science research on India, with his hallmark of careful empirical research. In this interview given to Parvathi Menon in Bangalore, the Japanese scholar speaks on his recent work, the state of historical research in universities and government institutes in India, and his deep concern over the uncertain future of the discipline of epigraphy in India.
Professor Karashima, you have done path-breaking work on ancient and medieval south Indian history. You have also been part of the group of Indian and foreign social scientists who, since the mid-1960s, have nurtured and given academic shape to the broad discipline of what is called Tamil Studies, through publications, collaborations, and most notably, through the work of the International Association for Tamil Research. You recently quit as President of the IATR, citing your discomfort with its proximity to the political establishment in Tamil Nadu as one of your reasons. What do you think is the future of the IATR and Tamil Studies in general?
I have already clarified my thoughts and stand concerning the Tamil Conference and the IATR, in an article published in The Hindu on July 23, 2010, and have nothing more to say about it. Somebody had to sound the alarm about the IATR, which got entangled with local politics, and that is what I did. The reason for my resignation as its President is that I had no hope of reviving the IATR from within. In addition, there were the factors of my age and health. I hope its resurrection will be taken up by young and sincere Tamil scholars.
After the publication of your last book, Ancient to Medieval: South Indian Society in Transition, you and your collaborators have moved on to researching the religious history of the medieval period, and the role of mathas. What are your conclusions here, and do they fit in with your theory of economic change in medieval south India?
I wanted to relate the socio-economic changes that occurred in the 12th and 13th centuries to the contemporary religious movements, something I did not touch on in my recent book. For that purpose, I organised a project on the study of inscriptions with references to mathas, called “Medieval Religious Movements in South India: Study of Matha Inscriptions,” with my colleagues Y. Subbarayalu, P. Shanmugam and others.
There were two religious traditions which caused the development of matha activities in the Tamil country, and I will explain them briefly.
The first was the Bhakti movement of the period from the 7th to 10th centuries, which is attested to by the recitation of Devaram hymns and Tirumurai in mathas of the 11th century and after. The second is the North Indian Brahmanical tradition brought by the influx of Saiva ascetics to the Tamil country during the 11th and 12th centuries, which is shown by the appointment of those Brahmana ascetics as rajagurus by Rajaraja I and Rajendra I.
These two traditions merged when the people of the lower social sections, such as cultivators, merchants, artisans, [members of the] hill tribes and soldiers, who had increased their power during the 12th century, also joined in matha activities in the 13th century, as our study of the inscriptions indicate. Their activities are spread all over the Tamil country. Sivananabodam, written in Tamil by Meykandar, a Vellalla ascetic, in the 13th century, is the hallmark of this fusion of the two traditions and the establishment of South Indian Saivasiddhantism in the 13th century.
Thus, we can say that the social change that occurred in the Tamil country during the 12th and 13th centuries, which I have clarified in my recent book, was well related to the religious movement too.
There is a great deal of published historical work on ancient and medieval south Indian history. How would you describe the state of research into the history of the late-17th and 18th centuries, when with the onset of colonialism the region experienced considerable economic and social turbulence?
I should say that it is still insufficient and unsatisfactory. There is not enough work that goes into the source material properly. There are lots of new ideas around which history is written, but we need to reconstruct history more substantially by studying the sources.
Past studies on the period emphasised the point that British colonial rule devastated the Indian economy entirely, but recently many scholars have begun to argue that the Indian economy continued to develop during the 18th and 19th centuries also.
This issue should be studied from the angle of the Asian economy, particularly its commercial development, and its relationship to British imperialism and global history.
The most important thing is to study historical change based on material showing domestic conditions, and not only from the Portuguese, Dutch or British trade records. In that sense, recent studies of my colleagues, H. Kotani who examined Maratha documents on the watan system; T. Mizushima and H. Yanagisawa, who studied economic change by analysing British land settlement, are very significant. If we continue such studies, we may be able to get a clear idea on the economic conditions of the 18th century.
Why do you think the 18th century is a neglected period? Is it because of the difficulties in reading source material, or because of a waning interest in history?
I think that in general there is deterioration in the quality of historical studies in the universities in the south. When I first came in 1961 and joined the Department of Ancient Indian History and Archaeology [of the University of Madras], scholars like K.A. Nilakanta Sastri and N. Venkataramanayya had done some very substantial work studying inscriptions and literary sources. I would also like to make the point that while the Dravidian movement in Tamil Nadu was historically very important and socially progressive, especially their view that the caste system needed to be changed, it unfortunately had an anti-intellectual tendency. The situation was something like what took place in China during the Cultural Revolution, a movement that may have been historically necessary to some extent, but did great damage to academics.
What about the government research institutes?
I think they suffer even more, and I don't know why. I think not enough attention is being paid to them. The Director General of the Archaeological Survey of India used to be an archaeologist. But for an interim period of several years, IAS officers took the place of the DG and they did not have any knowledge of archaeology itself. A similar thing happened in the State departments of archaeology too. Of epigraphy IAS officers did not know anything, and as a consequence the Epigraphical Office has suffered. For a considerable period until recently there was no recruitment of new epigraphists in the office. When I first went to Ooty in 1962 to the Epigraphical Office, the atmosphere was active and intellectually dynamic. Dr. K.V. Ramesh, Dr. B.R. Gopal (he is no more) and Dr. S.H. Rithi were young epigraphy assistants who subsequently did very good work. Now that atmosphere has been lost, as there has not been any encouragement for epigraphists for a long time. Unless the knowledge of epigraphy develops, no ancient or medieval history of this country can be studied. These days most scholars, Indian and foreign, depend on summaries of the inscriptions that appear in the annual reports. They therefore don't go into the material.
What do you think can be done to encourage epigraphy?
We have to start a system of contracting work to outside epigraphists to work on the inscriptions. Fortunately this has happened recently. The Tamil University came forward to help in digitalising the impressions (rubbings) preserved in the Mysore Epigraphy Office of the ASI and I appreciate the decision taken by the ASI and the Tamil University. Two new epigraphists were appointed recently in the Mysore office. I can only hope the situation will gradually improve.
And if not?
If not, the study of ancient history will die in this country! I am not saying this lightly at all, and am very afraid of this happening. We are really at a critical stage, I should say. If this happens, history will be built only on the basis of ideas and theory, and not on substantial work based on historical sources.
Printable version | May 31, 2013 9:14:16 AM | http://www.thehindu.com/opinion/interview/unless-knowledge-of-epigraphy-develops-no-ancient-or-medieval-history-of-this-country-can-be-studied/article925942.ece

Monday, May 27, 2013

மீண்டும் கிடைக்குமா கச்சத்தீவு?





       மீனவர்களைக் காப்பாற்றுவதற்காகத் தமிழக அரசியல் கட்சிகள் யாவும் இப்போது களமிறங்கியுள்ளன. சிங்கள கடற்படையின் தாக்குதலைக் கண்டிப்பதில் போட்டிபோடும் அரசியல் தலைவர்கள் கச்சத்தீவு பிரச்சனையைப் பற்றிப் பேசவும் தவறவில்லை.கடந்த முப்பது  ஆண்டுகளாகத் தமிழக மீனவர்களின் தலையாயப் பிரச்சனையாக விளங்குகின்ற கச்சத்தீவுப் பிரச்சனை எப்படி உருவானது?அந்த ஒப்பந்தம் போடப்பட்டபோது தமிழகத்தை ஆண்ட தி.மு.க அப்போது அதை எதிர்க்கவில்லை என சொல்லப்படுவது உண்மைதானா? என்பதைத் தெரிந்துகொள்வது அவசியம்.

       ’எந்த முக்கியத்துவமும் இல்லாத வெறும் பாறைகளால் ஆனது’ என அன்றைய பிரதமர் இந்திரா காந்தியால் வர்ணிக்கப்பட்ட கச்சத்தீவு 285 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும்.அந்த கச்சத்தீவுப் பிரச்சனை இன்று நேற்று ஏற்பட்டதல்ல.1921ஆம் ஆண்டிலேயே அது ஆரம்பித்துவிட்டது.அப்போது இந்தியா இலங்கை ஆகிய இரண்டு நாடுகளும்  பிரிட்டிஷ் ஆட்சியின் கீழிருந்தன. இரண்டு நாடுகளின் பிரதிநிதிகளைக் கொண்ட மாநாடு ஒன்றில் அப்போது இந்தப் பிரச்சனை விவாதிக்கப்பட்டது. கச்சத்தீவு பாரம்பரியமாக ராமநாதபுரத்து ராஜாவுக்கு சொந்தமாக இருந்தது என்பதை  ஏற்றுக்கொண்டபோதிலும், ராமநாதபுரத்து ராஜாவின் ஜமீன்தாரி உரிமை தொடரும் அதே வேளையில் அந்தத் தீவு இலங்கைக்கு சொந்தமாக அளிக்கப்படவேண்டும் என்று இலங்கை அப்போதுதான் முதன்முதலாகக் கோரியது. ஆனால் அன்றிருந்த பிரிட்டிஷ் அரசாங்கம் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.

1974ஆம் ஆண்டு ஜூன் மாதம் 28ஆம் தேதி அன்று இந்திய பிரதமராக இருந்த  இந்திராகாந்தியும் இலங்கைப் பிரதமராக இருந்த சிறீமாவோ பண்டார நாயகேவும் செய்து கொண்ட ஒப்பந்தம்தான் இந்தியா சுதந்திரம் அடைந்ததற்குப் பிறகு முதன்முதலாக வங்கக்கடலில் இந்திய-இலங்கைக் கடல் எல்லையை வரையறுத்த நடவடிக்கையாகும். அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தியாவும் இலங்கையும் தமது எல்லைக்கு உட்பட்ட பகுதிகளின் மீது முழுமையான உரிமையைப் பெற்றன. அந்த ஒப்பந்தத்தின் பிரிவு ஐந்தில், ‘‘இந்திய மீனவர்களும், இலங்கை மீனவர்களும், கச்சத்தீவுக்கு வழக்கம்போல சென்று வரலாம். அதற்கு இலங்கையிடமோ, இந்தியாவிடமோ விசா முதலான அனுமதிகளைப் பெறத்தேவையில்லை’’ எனத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. பிரிவு ஆறில் ’இந்திய&இலங்கை கப்பல்கள் ஒன்று மற்றதன் கடல் எல்லைக்குள் சுதந்திரமாகச் சென்று வரலாம். பாரம்பரியமாக இருந்து வரும் அத்தகைய உரிமைகள் தொடர்ந்து காப்பாற்றப்படும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

1976 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இருபத்து மூன்றாம் நாள் இலங்கையும் இந்தியாவும் அடுத்து ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. மன்னார் வளைகுடாப் பகுதியில் கடல் எல்லையை வரையறுக்கும் ஒப்பந்தம்தான் அது. இந்தியா சார்பில் கேவல் சிங்கும், இலங்கைக்காக டபிள்யூ.டி. ஜெயசிங்கேவும் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தனர். இந்த இரண்டு ஒப்பந்தங்களிலோ இவற்றுக்குப் பிறகு அதே ஆண்டு நவம்பர் 22ஆம் தேதி கையெழுத்தான இலங்கை, இந்திய, மாலத்தீவு ஆகியவற்றுக்கிடையேயான முச்சந்தியை வரையறுக்கும் ஒப்பந்தத்திலோ கச்சத்தீவு பகுதியில் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கக்கூடாது என்று சொல்லப்படவில்லை.

இந்த ஒப்பந்தங்களுக்குப்பிறகு பரிமாறிக்கொள்ளப்பட்ட கடிதங்களில்தான் கச்சத்தீவை இலங்கைக்குத் தாரைவார்த்துத் தந்தார்கள். அவ்வாறு பரிமாறிக்கொள்ளப்பட்ட கடிதத்தில் ‘‘இந்திய மீனவர்களோ, மீன்பிடி கப்பல்களோ இலங்கையின் கடற்பரப்புக்குள் செல்வதோ, அதன் பிரத்யேக பொருளாதார மண்டலத்துக்குள் சென்று மீன் பிடிப்பதோ கூடாது. அதுபோலவே இலங்கை மீனவர்களோ, மீன்பிடிக் கப்பல்களோ இந்திய கடற்பரப்புக்குள் செல்வதோ, அதன் பிரத்யேக பொருளாதார மண்டலத்துக்குள் சென்று மீன் பிடிப்பதோ கூடாது’’ எனக் கறாராக வரையறுக்கப்பட்டது.

கச்சத்தீவு ஒப்பந்தம் போடப்பட்ட காலத்தில் தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி நடந்து வந்தது.  அந்த ஒப்பந்தத்தை தி.மு.க. சரியான முறையில் எதிர்க்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் இப்போது குற்றம் சாட்டி வருகின்றன. ஆனால் அது உண்மையல்ல. 1974ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23ஆம் தேதி நாடாளுமன்றத்தில் இதுபற்றிப் பிரச்சனை எழுப்பி தி.மு.க. உறுப்பினர்களாக இருந்த இரா.செழியன், நாஞ்சில் மனோகரன் ஆகியோர் வெளிநடப்பு செய்துள்ளனர். ‘‘இந்தியாவுக்குச் சொந்தமான பகுதியை தாரைவார்த்துக் கொடுக்கும் இந்த மோசமான ஒப்பந்தத்தைப் போடுவதற்கு முன் மத்திய அரசு எங்களோடு ஆலோசனை நடத்தியிருக்க வேண்டும் அல்லது நாடாளுமன்றத்தில் விவாதித்து இந்த அவையின் ஒப்புதலைப் பெற்றிருக்க வேண்டும். இலங்கையோடு நல்லுறவு தொடர வேண்டும் என்பதை நாங்களும் விரும்புகிறோம். ஆனால் இந்த ஒப்பந்தம் நமது நாட்டின் ஒரு பகுதியை எந்த வரைமுறையுமின்றித் தாரைவார்த்துக் கொடுப்பதாக இருக்கிறது. இது எந்தவொரு அரசாங்கமும் செய்யக்கூடிய காரியம் அல்ல. எனவே நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம்.’’ என்று இரா.செழியன் பேசினார். ‘‘இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த ஒப்பந்தம் தேச விரோதமானது. தேசப்பற்று இல்லாதது. உலகில் உள்ள நாகரீகமடைந்த நாடு எதுவும் இத்தகைய மோசமான ஒப்பந்தத்தை செய்துக்கொண்டது இல்லை.’’ என்று பேசினார் நாஞ்சில் மனோகரன். ‘‘இந்த ஒப்பந்தத்தின் மூலம் இலங்கை பிரதமர் வெற்றி பெற்றவராகியிருக்கிறார். இந்தியப் பிரதமரோ பரிதாபமான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார். இது நமது ஒருமைப்பாட்டின் மீது விழுந்த பலமான அடியாகும்’’ என்று ஆவேசமாகப் பேசி விட்டு நாஞ்சில் மனோகரன் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தார்.

தி.மு.க. உறுப்பினர்களைத் தொடர்ந்து ஃபார்வர்டு பிளாக் கட்சியைச் சேர்ந்த பி.கே.என்.தேவர் ‘‘கச்சத்தீவு எனது தொகுதிக்கு உட்பட்ட பகுதியாகும். ஆயிரக்கணக்கான தமிழக மீனவர்களின் வாழ்க்கை இப்போது ஆபத்தில் தள்ளப்பட்டு உள்ளது. இலங்கை அரசாங்கம் தனது ராணுவத்தை கச்சத்தீவுக்கு அருகில் கொண்டு வந்து இப்போது குவித்துள்ளது. நீங்கள் துரோகம் செய்து விட்டீர்கள். மக்கள் மீது உங்களுக்கு இரக்கம் கிடையாது... நாட்டுப்பிரிவினை தான் மகாத்மா காந்தியடிகளின் உயிரைக் காவு வாங்கியது. கச்சத்தீவு என்பதோ தமிழகத்தின் பகுதி மட்டுமல்ல, இந்திய நாட்டின் ஓர் அங்கம். நீங்கள் துரோகம் செய்கிறீர்கள்’’ என்று கூறி விட்டு வெளிநடப்பு செய்தார்.

பெரியகுளம் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த முஸ்லீம் லீக் கட்சியைச் சேர்ந்த முகமது ஷெரீப் ‘‘1968 ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதியே நான் இந்த அவையில் கச்சத்தீவு ராமநாதபுரத்து ராஜாவுக்குத்தான் சொந்தமானது என்பதை நிரூபிக்கக்கூடிய ஆவணங்களை சமர்ப்பித்தேன். அந்த ஆவணங்களை படித்துப்பார்க்க அரசாங்கம் தவறிவிட்டது. முன்னர் நான் அந்த தொகுதியின் உறுப்பினராக இருந்தேன். அந்தப் பகுதி மக்களின் கருத்தையோ, தமிழக முதல்வரின் கருத்தையோ கேட்காததற்காக மத்திய அரசு வெட்கப்படவேண்டும். அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து நானும் வெளிநடப்பு செய்கிறேன்’’ என்று பேசினார்.

ஒரிசா மாநிலத்தின் கலஹாந்தி தொகுதியைச் சேர்ந்த சம்யுக்தா சோஷலிஸ்ட் கட்சி உறுப்பினர் பி.கே.தேவ்: ‘‘நம்மிடம் உள்ள வருவாய்த்துறை ஆவணங்கள் யாவும் கச்சத்தீவு என்பது ராமநாதபுரம் ஜமீனுக்கு உட்பட்டது. தமிழக அரசுக்கு சொந்தமானது என்பதை நிரூபிக்கின்றன. ஆகவே அரசியலமைப்பு சட்டப்படி கச்சத்தீவை வழங்குவதற்கு மத்திய அரசுக்கு அதிகாரம் கிடையாது. இந்த நாடு காங்கிரஸ் கட்சியினுடைய ஜமீன் சொத்தல்ல. சில நாட்களுக்கு முன்னாள் அந்தமான் தீவுகளின் ஒரு பகுதியாக இருந்த கொக்கோ தீவு பர்மாவிடம் கொடுக்கப்பட்டது. இப்போது கச்சத்தீவு கொடுக்கப்படுகிறது. இப்படி நமது நாட்டின் பகுதிகளை கொடுத்துக்கொண்டே இருந்தால் அதற்கு பிறகு என்ன மிச்சம் இருக்கும்.’’ என்று கேள்வி எழுப்பினார்.

ஜனசங்க உறுப்பினராய் இருந்த வாஜ்பாயி கச்சத்தீவின் பழைய பெயர் வாலிதீப் என்றும் அங்குதான் ராமனும் வாலியும் போரிட்டுக்கொண்டனரென்றும் பேசினார்.அந்த சமயத்தில் மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜய்ன் தொகுதியைச் சேர்ந்த ஜனசங்க உறுப்பினர் உக்கம்சந்த் கச்வாய் என்பவர் சில காகிதங்களைக் கிழித்து அவையில் வீசினார். இப்படியான சம்பவங்களுக்குப் பிறகுதான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஸ்வரண்சிங் அவையில் அறிக்கையை வாசித்தார். ‘‘இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையில் உள்ள பாக் நீரிணையில் சர்வதேச கடல் எல்லையை வரையறுத்துக்கொள்ள வேண்டியது அவசியமாகி இருக்கிறது. அதனால் தான் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது இரண்டு நாடுகளுக்கும் நியாயம் செய்யக்கூடிய விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது இருநாட்டு மீனவர்கள் அனுபவித்து வருகின்ற மீன்பிடிக்கும் உரிமையும், கோயில்களுக்கு புனிதப்பயணம் மேற்கொள்ளும் உரிமையும், கடலுக்குள் சென்று வரும் உரிமையும் எதிர்காலத்திலும் முழுமையாக காப்பாற்றப்படும் என நான் மாண்புமிகு உறுப்பினர்களுக்கு உறுதி அளிக்கிறேன்.’’ என்றார் அவர்.

       அந்தக் காலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி.யாக இருந்த எம்.கல்யாணசுந்தரம் இந்த ஒப்பந்தத்தைத் தமது கட்சி வரவேற்பதாகக் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். ஆனால் அமைச்சரின் வாக்குறுதி பற்றி விரிவான விவாதம் நடத்தப்படவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். அதற்குபதிலளித்த அமைச்சர் ஸ்வரண்சிங், ‘‘மீன் பிடிப்பதற்கான எல்லை பிரிட்டிஷ் அரசால் 1921ஆம் ஆண்டிலேயே வரையறுக்கப்பட்டுள்ளது. கச்சத்தீவுக்கு மேற்கே மூன்றரை மைல் வரை இந்திய மீனவர்கள் மீன்பிடித்துக்கொள்ளலாம். அதற்கு கிழக்கே உள்ள பகுதியில் இலங்கை மீனவர்கள் மீன் பிடித்துக்கொள்ளலாம் என்று அப்போது கூறப்பட்டது. ஆனாலும்கூட இரண்டு நாட்டு மீனவர்களும் கச்சத்தீவை சுற்றிச் சுதந்திரமாக மீன்பிடித்து வருகின்றனர். தங்களது வலைகளைக் காயவைப்பதற்கு கச்சத்தீவை பயன்படுத்திக் கொள்கின்றனர். பாரம்பரிய உரிமை என்றால் என்ன என்பதும் இந்த ஒப்பந்தத்தில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. கச்சத்தீவின் மீதான இலங்கையின் உரிமை அங்கீகரிக்கப்பட்ட போதிலும், இந்திய மீனவர்களின் பாரம்பரியமான உரிமைகளும், அங்குள்ள தேவாலயத்துக்குச் செல்வதற்கான உரிமையும் பாதிக்கப்படாது. அதுபோலவே இந்திய&இலங்கை மீனவர்கள் ஒருவர் மற்ற நாட்டு எல்லைக்குள் படகுகளிலோ, கப்பல்களிலோ சென்று வருவதற்கான உரிமையும் தொடர்ந்து காப்பாற்றப்படும்’’ என்று ஸ்வரண்சிங் விளக்கம் அளித்தார்.

மத்திய அரசு அளித்த வாக்குறுதி சுமார் பத்து ஆண்டுகள் வரை இடையூறின்றி தொடர்ந்தது.ஆனால் இலங்கையில் ஏற்பட்ட இனக்கலவரத்தைத் தொடர்ந்து கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிப்பதற்கு இலங்கை அரசு தடை விதித்தது. அதன்பிறகு தமிழக மீனவர்கள் சிறை பிடிக்கப்படுவதும், அவர்களது மீன்களும், வலைகளும், படகுகளும் இலங்கைக் கடற்படையால் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்கதையாயின. கடந்த 25 ஆண்டுகளில் சுமார் முன்னூறு தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். ஆயிரக்கணக்கான மீனவர்கள் படுகாயப்படுத்தப்பட்டார்கள். நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள படகுகளும், வலைகளும், மீன்களும் சிங்கள கடற்படையால் நாசப்படுத்தப்பட்டன. அப்படித் தமிழக மீனவர்கள் பாதிக்கப்படும்போதெல்லாம் இந்திய அரசு இலங்கையைக் கண்டிக்கக்கூட முன்வருவதில்லை என்பது வேதனைக்குரிய செய்தியாகும்.

        ஒப்பந்தத்தின் மூலம் வழங்கப்பட்ட கச்சத்தீவை எப்படி திரும்பப்பெற முடியும் என்று ஒருசிலர் கேள்வி எழுப்புகின்றனர். 1987ஆம் ஆண்டு இந்திய& இலஙகை அரசுகளுக்கு இடையே போடப்பட்ட ‘ராஜீவ் ஜெயவர்த்தனே ஒப்பந்தம்’ இப்போது இலங்கை அரசால் தன்னிச்சையாக மீறப்பட்டுள்ளது. இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகள் தமிழர்களின் பாரம்பரிய தாயகமாக கருதப்படவேண்டும். அதை பிரிக்கக்கூடாது என்று அதில் கூறப்பட்டிருந்தது. ஆனால் இன்று இலங்கை அரசு வடக்கு, கிழக்கு பகுதிகளை பிரித்தது மட்டுமின்றி கிழக்குப் பகுதியில் அரசாங்கம் ஒன்றையும் உருவாக்கியுள்ளது. இது ராஜீவ் ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தை அப்பட்டமாக மீறிய செயலாகும். இப்படி ஒப்பந்தத்தை மீறி இலங்கையே ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்தியா மட்டும் கச்சத்தீவு ஒப்பந்தத்தை ஏன் மதித்து’ காப்பாற்ற வேண்டும்? இன்னும் எத்தனை மீனவத் தமிழர்களை நாம் பலியாகக் கொடுப்பது? இதை மத்திய அரசு சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

’கச்சத்தீவை மீட்பதற்கான காலம் நெருங்கி விட்டது’ எனத் தமிழக முதல்வர் குறிப்பிட்டிருக்கிறார். மத்தியில் ஆள்பவர்களோ தேர்தலுக்கான காலம் நெருங்கி விட்டது என்றுதான் கவலைப்படுகிறார்கள். கச்சத்தீவு பற்றி சிந்திப்பதற்கு அவர்களுக்கு நேரமில்லை.எதிர்வரும் பாரளுமன்றத் தேர்தலில் இதை ஒரு முன் நிபந்தனையாக மாற்றவேண்டும். மீனவர்கள் ஒன்றுபட்டால் அதைச் செய்யமுடியும்.

( இக்கட்டுரை 22.07.2008 அன்று நான் ஜூனியர் விகடன் இதழில் எழுதியது. கச்சத்தீவை மீட்க முடியாது என ஒரு கட்டுரையை இந்து நாளேடு இன்று வெளியிட்டுள்ளது( http://www.thehindu.com/opinion/op-ed/chasing-a-boat-we-missed-long-ago/article4753529.ece)  அதற்கு எதிர்வினையாக இங்கு இதைப் பதிவிடுகிறேன் ) 




கறுப்பு ஜூலை: காய்ந்து போன ரத்தம்






முப்பது ஆண்டுகள் முடியப்போகின்றன. இதற்கிடையே பூமிப்பந்தில் எவ்வளவோ மாற்றங்கள். ஆட்சிகளில் மாற்றம், நாடுகளின் எல்கைளில் மாற்றம், உணவில், உடையில், பண்பாட்டில் மாற்றம்... ஆனால் மாறாமல் தொடர்கிறது அந்தக் கதறலும், கண்ணீரும். இலங்கை வீதிகளை நிரைத்த அந்த ஓலக்குரல்கள் நமது காற்றில் கலந்து பேரோசையாய்ப் பெருகுகிறது. முப்பது ஆண்டுகள். கறுப்பு ஜூலை என வர்ணிக்கப்படும் அந்த இனப்படுகொலை நடந்து முப்பது ஆண்டுகள்.
வாகனங்களில் சென்ற தமிழர்களை வழிமறித்து உயிரோடு எரித்துக் கொன்று நடனமாடிய சம்பவங்கள் நடந்து இருபத்தைந்து ஆண்டுகள். வாக்காளர் பட்டியலை வைத்து தமிழர்களை அடையாளம் கண்டு வீடுகளிலிருந்து இழுத்தெறிந்து வெட்டித் துண்டாடிய காட்சிகள் நிகழ்ந்து முப்பது ஆண்டுகள். கடைகளில் தமிழனின் கறி கிடைக்கும் என பலகையில் எழுதி வைத்து எக்காளமிட்ட கோரங்கள் நிகழ்ந்து முப்பது ஆண்டுகள். எல்லாவற்றுக்கும் விழா எடுத்துக் கொண்டாடும் தமிழர்கள் இதையும் கூட கொண்டாடி மகிழலாம்.

காமன்வெல்த் மாநாட்டுக்காகத் தயாராகிக் கொண்டிருக்கிறது இலங்கை. 2008 ஆம் ஆண்டு கறுப்பு ஜூலையின் இருபத்தைந்தாவது ஆண்டின்போது இலங்கையில் சார்க் மாநாடு நடைபெறுவதாக இருந்தது. ‘‘உலக நாடுகளுடனும் எமது பிராந்திய அயல் நாடுகளுடனும் நட்புறவை வளர்த்துக் கொள்ளவே நாம் என்றும் விரும்புகின்றாம். இதற்கான புறநிலைகளை உருவாக்கி ஒரு நட்புறவுப் பாலத்தை கட்டியெழுப்புவதிலும் இதய சுத்தியோடு இருக்கின்றோம். தமிழீழ தேசத்தினதும், தமிழீழ மக்களினதும் நலலெண்ணத்தை வெளிப்படுத்தி பரஸ்பர நம்பிக்கையை வளர்த்துவிட விரும்புகின்றோம். இந்த நல்லெண்ண நடவடிக்கையாக சார்க் மாநாடு நடைபெறுவதையிட்டு ஜூலை 26 முதல் ஆகஸ்டு 4 வரையான காலப்பகுதியை இராணுவ நடவடிக்கைகள் அற்ற அமைதி நாட்களாகக் காத்து, ஒருதலைப்பட்சமாக போர் நிறுத்தத்தைக் கடைப்படித்து, மாநாடு வெற்றி பெற ஒத்துழைப்போம்’’ என புலிகள் இயக்கம் போர் நிறுத்த அறிவிப்பை வெளியிட்டது. ஆனால் காமன்வெல்த் மாநாடு குறித்து அறிக்கை வெளியிட அவர்கள் இன்றில்லை. இந்தச் சூழலில் தான் இலங்கையில் 1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் 24ஆம் தேதி நடைபெற்ற இனப்படுகொலையை நாம் நினைவு கூர்கிறோம். ‘‘நெருப்பையும், குருதியையும், அவலக் குரலையும் ஒன்றாகக் கேட்கும்போது வன்முறையின் சித்திரம் அல்லது கலவரம் ஒன்றின் தோற்றம் எப்போதும் மனதில் விரிகிறது... எரிந்து கொண்டிருக்கும் இந்த நெருப்பு எப்போதுதான் அணையப்போகிறது?’’ என்ற ஈழத்து எழுத்தாளர் கருணாகரனின் கேள்வி நம்முள் கனல்கிறது.

எப்படி நடந்தது இந்த வன்முறை? 1983 ஜூலை 23ஆம் தேதி மாலை யாழ்பாணத்துக்கு வெளியே நாணுவ ஜீப் ஒன்று குண்டு வைத்து தகர்க்கப்பட்டது. அந்த ஜீப்புக்கு பின்னால் வந்த ராணுவ டிரக்கிலிருந்து வீரர்கள் இறங்கி ஓடி வருகிறார்கள். நாலாபுறமிருந்தும் அவர்கள் தாக்கப்படுகிறார்கள். எந்திரத் துப்பாக்கிகள், கையெறி குண்டுகள். தாக்குதலின் முடிவில் பதினைந்து சிப்பாய்களின் சடலங்கள் இரைந்து கிடக்கின்றன. கொல்லப்பட்ட சிப்பாய்கள் அனைவரும் சிங்களவர்கள். அவர்களைக் கொன்றதோ தமிழர்களின் விடுதலைப்புலிகள்.

கொல்லப்பட்ட சிப்பாய்களின் உடல்களை அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பினால் கலவரம் வெடிக்கக்கூடும் என அஞ்சிய இலங்கை அரசாங்கம் அவர்கள் எல்லோரது உடல்களையும் கொழும்புவில் அடக்கம் செய்வதென்று முடிவு செய்தது. ஜூலை 24ஆம் தேதி கொழும்புவில் சிப்பாய்களின் உடல்கள் அடக்கம் செய்யப்படும்போது அங்கே கூடிய சிங்களவர்களின் கும்பல் கொழும்பு நகருக்குள் புகுந்து தமிழர்களின் வீடுகளைத் தேடி கண்டுபிடித்துத் தாக்கத் தொடங்கியது. தமிழ்ப் பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளானார்கள். வீட்டிலிருந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. வீடுகள் எரிக்கப்பட்டன. தமிழ் மக்களில் பலர் தப்பித்து ஓடி இரக்கமுள்ள சிங்களவர்கள் சிலரின் வீடுகளில் தஞ்சம் புகுந்தனர். அரசாங்கம் ஊரடங்கு சட்டத்தைப் பிறப்பித்தபோதிலும் கலவரம் அடங்குவதாக இல்லை.

கொழும்புவில் ஆரம்பித்த கலவரம் தமிழர்கள் வசித்த கண்டி, மாத்தளை, நாவல்பிட்டியா, பாதுல்லா, நுவாரா எலியா முதலான பகுதிகளுக்கும் பரவியது. சிங்களவர்கள் வாழ்ந்த பகுதிகளில் குடியிருந்த தமிழர்களே அதிகம் பாதிப்புக்கு ஆளானார்கள். இதுகுறித்து ஆர்.சம்பந்தன் எழுதியிருப்பது நமக்கு நல்ல விளக்கமாக இருக்கிறது. ‘‘இந்த வன்முறையின் போது குறிப்பிட்ட ஒரு தந்திரத்தை சிங்களவர்கள் கையாண்டார்கள். முதலில் இலங்கை ராணுவத்தினர் தமிழர் வாழும் பகுதிக்குள் வருவார்கள். அங்கே ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாகத் தங்களுக்கு தகவல் கிடைத்திருப்பதாகச் சொல்லி தேடுதல் வேட்டையில் ஈடுபடுவார்கள். தமிழர்களை ஆபாசமாகப் பேசி அச்சுறுத்தி களேபரம் செய்வார்கள். அங்கிருக்கும் இளைஞர்களை விசாரணைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி பிடித்துப் போவார்கள். அவர்கள் போன சிறிது நேரத்தில் அங்கே சிங்களவர்களின் கும்பல் நுழையும். தமிழர்களின் வீடுகளைக் கொள்ளையடிக்கும். அதன்பிறகு வீடுகளுக்கு தீ மூட்டும். ராணுவத்தினரின் தேடுதல் வேட்டையும், தமிழ் இளைஞர்களை அவர்கள் பிடித்துச் செல்வதும் அதன்பிறகு வருகின்ற சிங்களவர்களின் கும்பலுக்கு உதவத்தான்.’’ தங்களை தற்காத்துக்கொள்ள எதுவுமற்ற நிலையில் தமிழர்கள் சிங்களவர்களிடம் சிக்கிக் கொண்டு உயிரிழந்தனர் என்று அதை வர்ணிக்கிறார் சம்பந்தன்.

முதலில் அரசாங்க அலுவலகங்களைக் குறி வைத்துத்தான் வன்முறை ஏவப்பட்டது. அதன்பிறகு தான் அது தமிழர்களுக்கு எதிரானதாக மாறியது. தெருச்சந்திகளில் கையில் பெட்ரோல் கேன்களோடு வாகனங்களை வழி மறித்த கும்பல் டிரைவரும், வாகனத்தில் பயணம் செய்பவரும் தமிழரா என்று விசாரித்து அவர்கள் தமிழர்கள் எனத் தெரிந்தால் பெட்ரோலை ஊற்றி உயிரோடு கொளுத்தியது. அப்படியொரு சம்பவத்தை சிங்களக் கவிஞர் பாஸில் ஃபெர்னாண்டோ கவிதையொன்றில் இப்படி விவரிக்கிறார். ( இக்கவிதையைத் தமிழில் மொழிபெயர்த்தவர் கவிஞர் சேரன்) .

ஜூலை 1983: மேலும் ஒரு சம்பவம்

இறந்தவர்களைப் புதைப்பது
ஒரு கலையாகவே வளர்ந்திருந்த எமது காலத்தில்
இந்த நிகழ்வு மட்டும் அழிய மறுத்து எஞ்சியிருப்பதற்குக்
காரணம் ஏதுமில்லை
சத்தியமாகச் சொல்கிறேன்:
நான் உணர்ச்சிபூர்வமானவன் அல்லன்
சித்தம் குழம்பியவனாகவும் ஒதுபோதும் இருந்ததில்லை
உங்களைப் போலவே
நானும் உணர்ச்சிகளை வெளிக்காட்டத் தயங்குபவன்
அன்றாட வாழ்க்கையிலும்
நான் ஒரு யதார்த்தவாதி
எச்சரிக்கை உணர்வுள்ளவனும்கூட
மறந்துவிடு என்று அரசு ஆணையிட்டால்
உடனடியாக மறந்து விடுகிறேன்
மறப்பதில் எனக்கிருக்கும் திறமை பற்றி எவருக்குமே ஐயமிருந்ததில்லை
என்னை ஒருவரும் குறை சொன்னதும் கிடையாது
எனினும் அந்தக் கும்பல் அந்தக் காரை
எப்படித் தடுத்து நிறுத்தியது என்பதை
இப்போதும் நான் நினைத்துப் பார்க்கிறேன்
காருக்குள் நாலுபேர்
பெற்றோர், நாலு அல்லது ஐந்து வயதில்
ஆணும் பெண்ணுமாய் இரு குழந்தைகள்
ஏனைய கார்களை எப்படி தடுத்து நிறுத்தினரோ
அப்படித்தான் அந்தக் காரையும் தடுத்து நிறுத்தினார்கள்
எந்த வேறுபாடும் இல்லை.
குதூகலம் கொப்பளிக்கின்ற மனநிலையில்
ஒரு சில கேள்விகள்
செய்வதைப் பிழையறச் செய்யவிரும்பும் கவனமாய் இருக்கலாம்
பிறகு செயலில் இறங்கினர் வழமைபோல
பெட்ரோல் ஊற்றுவது, பற்ற வைப்பது போன்ற விஷயங்கள்
ஆனால், திடீரென்று யாரோ ஒருவன்
கதவுகளைத் திறந்தான்.
அழுது அடம்பிடித்துப் பெற்றோரை விட்டு விலக மறுத்த
இரண்டு குழந்தைகளையும் வெளியே இழுத்தெடுத்தான்
குழந்தைகளின் உணர்வுகளைக் கவனத்தில் கொள்ளாமல் இருப்பது
சில சமயங்களில் குழந்தைகளுக்கு நல்லது என
அவன் எண்ணியிருக்கக் கூடும்
துரிதமாக செயல்பட்ட இன்னொருவனோ தீக்குச்சியைக் கிழித்தான்
சுற்றிலும் எரிந்து கொண்டிருந்த பலவற்றோடு
இந்த நெருப்பும் சேர்ந்து கொண்டது
அருகே நின்று தமது சாகசங்களைப் பற்றிப்
பேச ஆரம்பித்தனர் கொஞ்சம் பேர்
கலைந்து போனார்கள் ஒருசிலர்
காருக்குள் இருந்த இருவரும் என்ன எண்ணியிருப்பார்கள்
என்பதைப் பற்றி யார் கவலைப்பட்டார்கள்
சமாதான விரும்பிகளாக மக்கள்
தமது வீடுகளுக்குத் திரும்ப ஆரம்பித்தனர்
அப்போதுதான் திடீரென உள்ளேயிருந்தவர்
கார் கதவை உடைத்து வெளியே பாய்ந்தார்
சட்டையிலும் தலைமயிரிலும் ஏற்கனவே தீப்பற்றி விட்டிருந்தது
குனிந்தவர் தனது இரண்டு குழந்தைகளையும் வாரி எடுத்தார்
எங்கும் பார்க்காமல் கவனமாகத் திட்டமிட்டு எடுத்த முடிவை
செயல்படுத்துவது போல உறுதியுடன் காருக்குள் திரும்பி ஏறினார்
கதவை மூடினார்
தனித்துவமான அந்த சப்தத்தை நான் கேட்டேன்
எரிந்தழிந்த கார் இப்போதும் தெருவோரம் கிடக்கிறது
ஏனையவற்றோடு இன்னும் சில நாட்களில்
மாநகராட்சி அதனை அகற்றக்கூடும்
தலைநகரின் தூய்மையே ஆட்சியாளரின் தலையாய பணி’’

ஒரு சிங்களவரே அளித்த ஒப்புதல் வாக்குமூலமாக இருக்கிறது இந்தக் கவிதை. வீதிகளிலும், வீடுகளிலும் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது மட்டுமின்றி சிறையில் இருந்தவர்களும் குரூரமாக கொல்லப்பட்டனர். வெலிக்கடை சிறையில் ஜூலை 25ஆம் தேதி முப்பத்தேழு தமிழ் அரசியல் கைதிகள் கொல்லப்பட்டனர். மூன்று நாள் கழித்து மீண்டும் பதினைந்து பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதற்காகப் பழிவாங்கவே இந்தக் கலவரம் நடத்தப்பட்டதென்று சிலர் கூறுகின்றனர். அது உண்மையல்ல. தமிழர்கள் மீதான ஒடுக்குமுறை பல ஆண்டுகளுக்கு முன்பே ஆரம்பமாகி விட்டது. இலங்கை சுதந்திரம் அடைந்தது முதலே இனவொதுக்கல் கொள்கையும் தீவிரமடைய ஆரம்பித்து விட்டது. 1983ல் ª-ஜயவர்த்தனே ஆட்சிக் காலத்தில் அது புதிய பரிமாணத்தை எட்டியது. அந்த ஆண்டு ஏப்ரல் பத்தாம் தேதி திரிக்கோணமலை காவல் நிலையத்தில் தமிழ் இளைஞர் ஒருவர் இறந்தார். எந்தவித விசாரணையுமின்றி அடைத்து வைக்கப்பட்டிருந்த அவர் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டதை அவரது உடம்பிலிருந்த காயங்கள் காட்டின. அது தமிழ் மக்களிடம் கொந்தளிப்பை கூட்டியது. 1983 ஜூன் மாதம் 3ஆம் தேதி அரசாங்கம் ஆணையொன்றைப் பிறப்பித்தது. அந்த அவசர ஆணையின்படி போலீஸார் எவ்வித விசாரணையோ, போஸ்ட்மார்ட்டமோ இன்றி எந்தவொரு சடலத்தையும் புதைக்கலாம் என அறிவிக்கப்பட்டது. அதற்கு முன்பே தமிழர்களின் மீதான திட்டமிட்ட தாக்குதல்கள் தொடங்கி விட்டன. இலங்கை அதிபர் ஜெயவர்த்தனே ‘‘இனிமேல் நான் தமிழர்களின் அபிப்ராயம் பற்றி கவலைப்படப் போவதில்லை. அவர்களது உயிர்களோ, கருத்துகளோ எங்களுக்கு பொருட்டல்ல. தமிழர்களைப் பட்டினி போட்டால் சிங்களவர்கள் சந்தோஷப்படுகிறார்கள்’’ என லண்டனிலிருந்து வெளியான பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்தார். ஆக, ஜூலை கலவரத்துக்கான தயாரிப்பை நீண்ட நெடுங்காலமாகவே சிங்களவர்கள் செய்து கொண்டிருந்தார்கள் என்பதுதான் உண்மை. 1977ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கலவரமும், 1981ஆம் ஆண்டு யாழ் நூலகம் எரிக்கப்பட்டதும் இந்தத் தயாரிப்பில் சில மைல் கற்கள்.

இலங்கையில் தமிழர்கள் மீது நடத்தப்பட்டதை இனப்படுகொலை (Genocide) எனச் சொல்வது சரியா? என்று சிலர் கேட்கலாம். இனப்படுகொலை என்பதற்கான வரையறை என்ன என்பதை பவுல் ஆர்.ப்ராஸ் என்ற அமெரிக்க சிந்தனையாளர் தனது நூலொன்றில் (Forms of Collective Violence) விளக்கியிருக்கிறார். ‘‘மக்களில் ஒரு பிரிவினரை ஒரு குறிப்பிட்ட அடையாளத்துக்குள் அடக்கி அவர்களை ஆதிக்கம் செய்வது; அதற்கு வன்முறையை கருவியாகப் பயன்படுத்துவது; அரசியலை இனவாதத்தின் ªச்வாக்குக்குள் கொண்டு வருவது; சிறுபான்மை இனத்துக்கு எதிராக வன்முறையை ஏவுகிறவர் அரசியலில் தலைமை ஏற்பது; தங்களது சந்தோஷத்துக்காகவும், கேளிக்கைக்காகவும் எதிராளிகள் மீது வன்முறையை ஏவுவது; மக்கள் பெருமளவில் இடம் பெயர்ந்து செல்ல நிர்ப்பந்தப்படுத்தும் விதமாகத் தாக்குதல் தொடுப்பது; இன சுத்திகரிப்புக்கு வன்முறையை வழியாகக் கொள்வது; காவல்துறை, ராணுவம் முதலானவற்றின் ஒரு சார்பான அணுகுமுறை’’ - இப்படி இனஅழித்தொழிப்பு மனோபாவத்தின் அம்சங்களை அவர் பட்டியலிடுகிறார். இவை எல்லாமே 1983 ஜூலை கலவரத்துக்குப் பொருந்துகின்றன.

கடந்த முப்பது ஆண்டுகளாகத் தொடரும் யுத்தத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் விரும்பியும், விரும்பாமலும் அங்கு பலியாகியுள்ளனர். லட்சக்கணக்கான ஈழத் தமிழர்கள் உலகமெங்கும் அகதிகளாக விரட்டப்பட்டிருக்கிறார்கள். இப்போதும் இலங்கையில் தமிழர்களின்  மீது அடக்குமுறை ஏவப்படுகிறது. சின்னஞ்சிறு குழந்தைகள் புன்னகை மாறாமல் புதை குழிகளுக்குள் போய்க் கொண்டிருக்கின்றனர். இதை ஐ.நா. சபை வேடிக்கை பார்க்கிறது. இதை உலக நாடுகள் வேடிக்கை பார்க்கின்றன. இதை இந்தியா வேடிக்கை பார்க்கிறது. இதைத் தமிழகமும் வேடிக்கை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது. ‘மௌனம் என்பது காய்ந்து போன ரத்தம்’ என்று சொன்னான் ஒரு கவிஞன். ஈழம் குறித்த நமது மௌனத்தின் அடியிலோ குருதி ஆறாகப் பாய்ந்துகொண்டிருக்கிறது.

( கறு ப்பு ஜூலையின்  இருபத்தைந்தாவது நினைவு நாளில் ( 2008) ஜூனியர் விகடன் இதழில் நான் எழுதிய கட்டுரை. சில மாற்றங்கள் மட்டும் செய்யப்பட்டுள்ளது )
.

மணற்கேணி குறித்து ஈழக் கவிஞர் அனார்




அன்பின் ரவிக்குமார்,

மணற்கேணி படித்து முடித்தேன். பூஃகோவின் நேர்காணல் மிகுந்த முக்கியத்துவமான விடயங்களைக் கொண்டிருக்கிறது. இன்றைய காலகட்டத்தின் பொருத்தப்பாடுகளை மேலும் உணர்த்துகிறது. 

இலங்கை அரசியல் நிலவரங்கள் தொடர்பான கட்டுரைகள் அனைத்தும் வேறொரு தளத்தில் புரிந்துகொள்ள முடிகிறது. இவ்விதமான அக்கறைகள் மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கின்ற உங்கள் கணணோட்டங்கள் அவசியமானவைதானே...? விக்னேஸ்வரன் அவர்களின் உரை முஸ்லீம் மக்களின் இன்றை நிலையை தொட்டுச் செல்கிறது. அதில் குறிப்பிடப்டும் மருதமுனை எனது அடுத்த ஊராகும்.

மணற்கேணி தனது ஒருகையில் தொன்மையான அடையாளங்களையும், நவீன அரசியல் இலக்கியம் என்ற வகைப்பாடுகளை மறுகையிலுமாக வைத்திருக்கிறது. 

உங்களுடைய தர்மபுரி கவிதைகள் மனதின் அறத்தை சுட்டி நிற்கின்றன.

இவ்விதமான காலத்தின் பிரதிபலிப்புகளோடு சமூக அக்கறைகளோடு உங்கள் அகத்தின்  பிரதி பலிப்பை உங்கள் கவிதைகள்போல மணற்கேணியும் பிரதிபலிக்கின்றது.

வாழ்த்துக்களும் அன்பும்.


அனார்

(மணற்கேணி 17 ஆவது இதழ் குறித்து ஈழக் கவிஞர் அனார் எழுதிய மடல் )
 

ரவிக்குமார் கவிதை



காடாக சம்பு
கரையோரம் அடர்ந்திருக்கும்.

கை கோர்த்து ரகசியமாய்
'முதலைப் பூண்டு' நீந்திவர
நடு நடுவே நீர் சிரிக்கும்.

ஊறவைத்த மூங்கில்
துளிர்த்திருக்கும்.
ஓரத்தில்-
மீன்கொத்தி குறி பார்க்கும்.

சிலசமயம்
கெண்டைக்கால் பெரிய
விரால் மீன்கள் துள்ளி விழும்.

காலையிலும் மாலையிலும்
சிவன் கோயில் கலசங்கள்
முகம் பார்க்கும் ஊர்க்குளத்தில்

மாடு குளிப்பாட்டலாம்
பீத்துணி அலசலாம் .
சூத்தும் கழுவலாம்.

நாங்கள் மட்டும்தான்
தண்ணி மொள்ளக்கூடாது.


( 1986 ஆம் ஆண்டு நான் எழுதிய கவிதை . 1987 இல் 'பயணம் ' என்ற சிற்றிதழில் வெளியானது )

Saturday, May 25, 2013

தமிழ்த்தாய் சிலை - ஒரு உரையாடல்




1. தமிழ்த்தாய் சிலை குறித்து தமிழறிஞர் ராஜம் அவர்களின் திறந்த மடல் 

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு வணக்கம்.

எனக்கு அரசியல் தெரியாது. அதில் தலையிட விருப்பமோ, திறமையோ இல்லை. ஆனாலும், ஒரு தமிழச்சி அதிலும் ... தமிழ் வளர்க்கும் பாப்பாத்தி என்ற முறையிலும் வாழ்நாள் முழுவதையும் தமிழ்ப்படிப்புக்காகவும் தமிழ் ஆய்வுக்காகவும் பயனில்லாமல் செலவிட்டவள் என்ற முறையிலும் இந்த மடலை வடிக்கிறேன்.

இந்தச் சிலையமைப்புத் திட்டத்துக்கான செலவுத்தொகை தமிழக மக்களின் வரிப்பணத்திலிருந்து ஒதுக்கப்பட்டிருக்கும் என்று நினைக்கிறேன். என் போன்ற ஏழையர் கண்ணோட்டத்தில் 100 கோடி உரூபாய் என்பது மிக மிகப் பெரிய தொகையம்மா. அந்தத் தொகையை மிகவும் இன்றியமையாத வேறு பல திட்டங்களுக்காகச் செலவிடக்கூடாதா?

தனக்குச் சிலை இருந்தாலும் இல்லாவிட்டாலும் தமிழ்த்தாய் கவலைப்படுவாளா? எனக்குத் தெரிந்த தமிழ்த்தாய் மாட்டாள்.

சிலையமைக்க ஒதுக்கப்பட்டிருக்கும் தொகையைக் குமுக நலத் திட்டங்களுக்கு ஒதுக்கலாமே? தங்களுக்குத் தெரியாத தேவையா?

சரி, தமிழ்த் தொடர்பான திட்டங்களுக்காக மட்டுமே இந்தத் தொகை என்றால் ... என் திட்டங்களுக்கு உதவுங்கள். உங்களுக்குக் கோடிப் புண்ணியம் உண்டு. அந்தத் திருவரங்கனின் அருள் உங்களைச் சார்ந்தவர்களுக்கும் கிட்டும்.

கணினித்தமிழ், தமிழ் இலக்கணம் ... இவை தொடர்பாகச் சில நல்ல ஆய்வுத் திட்டங்கள் எனக்கு இருக்கு. அதெல்லாம் செய்யக் காசு வேணும். உதவுங்கோ, தாயே.

தமிழ்த்தாய் சிலை வைத்தால் அதன் தலையில் காக்கை, குருவி எச்சம் விழும். தாயின் மார்பகங்கள் மாற்றுக் கருத்தாளரால் சிதைக்கப்படும். அவளுடைய தொடைப் பக்கங்களைக் கீறிவிடுவார்கள். அதெல்லாம் நினைத்துப் பார்த்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

கண்ணகிக்குச் சிலை வைத்ததால் தமிழுக்கு என்ன முன்னேற்றம் கிடைத்தது என்று இன்னும் எனக்குத் தெரியவில்லை.

உங்கள் விருப்பம்.

பணிவன்புடன்,
ராஜம் (புலம் பெயர்ந்தும் தமிழாய்வைத் தொடரும் ஒரு தமிழச்சி)


2. திருமதி ராஜம் அவர்களுக்கு ரவிக்குமாரின் மடல்  

அன்பு ராஜம் அம்மா
தங்களது கருத்துகள் கவனிக்கத் தக்கவை. ஆனால் தாங்கள் கூறும் காரணங்கள் ஏற்கத் தக்கனவாக இல்லை. தமிழ்த் தாய் சிலையை சிதைத்துவிடுவார்கள் என்பதற்காக அதை வைக்ககூடாது எனச் சொல்வது   பொருத்தமாக இல்லை. உங்களை ஒரு தமிழ் அறிஞர் என்றே என்னைப் போன்றவர்கள் போற்றுகிறோம். அவ்வப்போது தாங்கள் உங்களைப் ' பாப்பாத்தி ' எனக் குறி ப்பிட்டுக்கொள்வது உறுத்தலாக இருக்கிறது.
அன்புடன்
ரவிக்குமார்

3. தமிழறிஞர் ராஜம் அவர்களின் பதிலுரை

அன்புள்ள ரவிக்குமார்,

உங்கள் கருத்து எனக்குப் புலனாகிறது. வெளிப்படச் சொன்னமைக்கு மிக்க நன்றி!
சிலை வைக்காதே என்று நான் சொல்லவில்லை; சிலை வைக்குமுன் இதெல்லாம் பற்றி நினைத்திருப்பீர்கள் என்றுதானே சொன்னேன்?!
சிலை வைப்பது போன்ற நடப்புகளில் எனக்கு நம்பிக்கை இல்லை. என் நம்பிக்கைக்காக நினைப்புகள் நிகழாமல் போகாது! அது பற்றி எனக்குக் கவலை இல்லை!

என்னைச் சிரிக்கச் செய்கிறீர்கள், ரவிக்குமார்! என்னைத் "தமிழறிஞர்" என்று போற்றித் தமிழரும் தமிழக அரசும் என் தமிழ்ப்பணிக்காக என்ன உதவி செய்ததோ, சொல்லுங்கள் பார்ப்போம்!

என் சங்க இலக்கியங்களுக்கான இலக்கண நூல் எத்தனைப்பேருக்கு உதவிவருகிறது என்பது தெரியுமா? அந்தப் புத்தகத்துக்காக எந்தவகை ஒப்புதல் (recognition) தமிழக அரசிடமிருந்து கிடைத்திருக்கிறதோ? பரிசுத் தொகையெல்லாம் வேறெங்கோ போகிறதே? அது பற்றி உங்கள் கருத்து என்னவோ?

அனைத்துலகத் தொல்காப்பிய வளர்ச்சிக்குழு ஒன்று அமைத்தார்களே … அதில் தொல்காப்பியத்தில் ஆய்வு செய்த என் பெயர் இடம் பெறவில்லை, ஆனால், தொல்காப்பியத்தில் ஆய்வு செய்யாத, தொல்காப்பியத்தைப் படிக்காதவரும் இடம் பெற்றிருக்கிறார்களே? ஏன்? அந்தக் குழு இன்று வரை என்ன திட்டங்களை மேற்கொண்டு என்னென்ன செய்து முடித்திருக்கிறார்களோ, தெரியவில்லையே! ஏன்?

என்னைப் "பாப்பாத்தி" என்று வெளிப்படுத்திக்கொள்வது யாருக்காவது உறுத்தலாக இருந்தால் அது என் பிழையில்லை! அந்தணர்/பார்ப்பார் என்பவர் தமிழை வளர்க்க மாட்டார் என்று நினைத்து அவர்களை ஓரங்கட்டிய/ஓரங்கட்டும் குமுகத்தில் … 'நான் இவ்வளவு தமிழ்ப்பணி செய்துவருகிறேன், ஆனால் நான் ஒரு பாப்பாத்தி என்று சொல்வதில்' எனக்கு ஒரு பெருமை. தொடர்ந்து செய்வேன். நீங்கள் "தலித்" மக்களுக்காகப் பேசுவதுபோல என்று வைத்துக்கொள்ளுங்களேன்.

Monday, May 20, 2013

மே 21 : கலாச்சார பன்மைத்துவத்துக்கான சர்வதேச நாள் .

 மே 21 :  கலாச்சார பன்மைத்துவத்துக்கான சர்வதேச நாள்
 
அதைக் கொண்டாடும் விதமாக இஸ்ரேல்,சீனா,அமெரிக்கா,ஜமைக்கா,மொஸாம்பிக்  ஆகிய ஐந்து நாடுகளை , கலாச்சாரங்களைச் சேர்ந்த ஐந்து கவிர்களின் கவிதைகளை இங்கே மொழிபெயர்த்துத் தந்திருக்கிறேன். பிற கலாச்சாரங்களைப் பற்றிய நமது புரிதலை மேம்படுத்திக்கொள்ள இலக்கியமே சிறந்த துணை. இந்த நாளில் நீங்களும் இதுபோல ஏதேனும் செய்யுங்கள். பிற கலாச்சாரங்கள் குறித்த 'ஸ்டீரியோடைப்புகளிலிருந்து' விடுபடுவோம். புரிதலை வளர்த்துக்கொள்வோம்.
 
ரவிக்குமார்


1. யெஹுதா அமிக்கய் 





வேலைக்குச் செல்லும்போது
வெள்ளைக் காகிதத்தில்
சுருட்டி எடுத்துச் செல்லும்
சாண்ட்விச்சைப்போல இருக்கிறது
என் அப்பாவின் நினைவு

தனது தொப்பிக்குள்ளிருந்து சீட்டுக்களையும்
முயல்களையும் எடுக்கும் ஒரு
மந்திரவாதியைப்போல
தனது சிறிய உடலிலிருந்து அன்பை
உருவி எடுப்பார் அவர்

அவரது கரங்கள் என்னும் நதிகள்
நற்செயல்களால்
நிரம்பிப் பாய்ந்துகொண்டிருக்கின்றன


யெஹுதா அமிக்கய் ( 1924-- 2000) இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த ஒரு யூதர் .
ஹீப்ரு மொழியில் அவர் படைத்த அற்புதமான கவிதைகள் அவருக்கு உலக அளவில் கவனத்தை ஏற்படுத்தின . பலமுறை அவரது பெயர் இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்காகப் பரிந்துரைக்கப்பட்டது . அவரது கவிதைகள் தினசரி வாழ்வின் அபத்தத்தைப் பேசும் அதே நேரத்தில் ஆழமான தத்துவ நோக்கையும் வெளிப்படுத்துகின்றன.





 2. ஹா ஜின்

துக்கத்தைப் பற்றிப் பேசுவது எங்களுக்குப் பிடித்தமானதாக இருந்தது
எங்களது பத்திரிகைகள் கடிதங்கள் நிரம்பியிருந்தன
இழப்புகளால், துயரங்களால், புகார்களால் .
துக்கமே இல்லாவிட்டாலும்கூட
நாங்கள் ஒப்பாரியை நிறுத்துவதில்லை
துன்புறும் முகத்தின் வசீகரத்தை எண்ணி
ஏங்குவதையும் நிறுத்தமுடியவில்லை

துக்கத்தை வெளிப்படுத்தும்போது
எவ்வித முன்னறிவிப்புமின்றி ஏராளமான விஷயங்கள்
நம்மீது கவியும் :
வீணான உழைப்பு , இழந்த நேசம் , பறிபோன வீடுகள் ,
முறிந்த மணவாழ்க்கை , அந்நியமாகிப்போன நண்பர்கள்
உடனடித் தேவைகளால் நைந்துபோன லட்சியங்கள் .
கேவலாகப் பீரிடுவதற்கென்று
தொண்டைகளில் வார்த்தைகள் அணிவகுத்து நிற்கும் .
வாழ்வில் வற்றாமல் பாயும் ஒரே ஜீவநதியாய் இருந்தது
துக்கம்

நாட்டை இழந்தபின் மொழியை இழந்தபின்
நாங்கள் துக்கத்தைப் பற்றிப் பேசுவதை நிறுத்திவிட்டோம்
புன்னகைகள் எங்கள் முகங்களைப் பிரகாசப்படுத்தின
நாங்கள் அளவில்லாமல் சிரித்தோம் எங்கள் சீர்கேட்டைப்  பார்த்து
எல்லாம் அழகாகத் தெரிகின்றன
ஸ்ட்ராபெர்ரி தோட்டத்தில் பெய்யும்
ஆலங்கட்டி மழையும்கூட

      - ஹா ஜின் (1956-  )சீனாவில் இருக்கும் லியாவோனிங் மாகாணத்தில் பிறந்தவர்.
 கல்வி பயிலுவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருந்த
கலாச்சாரப் புரட்சிக் காலகட்டத்தில் பிறந்த இவர் ராணுவத்தில் சேர்ந்து
அங்குதான் கல்வி பயின்றார். டாக்டர் பட்ட ஆய்வுக்காக அமெரிக்காவுக்குச்  சென்றவர்
தியானேன்மென்  சதுக்கப் படுகொலைகளுக்குப் பிறகு
அமெரிக்காவிலேயே தங்கிவிட முடிவுசெய்து தற்போது அங்கு வசிக்கிறார்.
ஆங்கிலத்தில் எழுதும் சீன எழுத்தாளர்.




3. மாயா ஏஞ்சலூ


என்னைப்பற்றி நினைக்கும்போது
செத்துப்போகும் அளவுக்கு நான் சிரிக்கிறேன்
எனது வாழ்க்கையே ஒரு ‘ஜோக்‘ தான்
ஒரு நடனத்தை நடந்துகாண்பிப்பது போல
ஒரு பாடலைப் பேசிக் காண்பிப்பதுபோல
நான் மூர்ச்சையாகும்வரை சிரிக்கிறேன்
என்னைப்பற்றி எண்ணிப்பார்க்கும்போது

இந்த உலகத்தில் வாழ்ந்த அறுபது ஆண்டுகள்
நான் வேலைபார்த்த வீட்டில்
குழந்தைகூட என்னை ‘வாடி போடி‘ என்றுதான் பேசும்
‘ சொல்லுங்கள் அம்மா’ என்றுதான் நான் கேட்கவேண்டும்
பணிவில் பெருமை
உணர்ச்சிகள் தெரியக்கூடாது
நான் வயிறுவலிக்கும்வரை சிரிக்கிறேன்
என்னைப்பற்றி எண்ணிப்பார்க்கும்போது

என் மக்கள் சொல்வதைக்கேட்டு நான்
செத்துப்போகும் அளவுக்கு சிரித்திருக்கிறேன்
அவர்களின் கதைகள் பொய்களைப்போல் இருக்கும்
அவர்கள் பழங்களை விளைவித்தார்களாம் ஆனால்
தோலைத்தான் சாப்பிட்டார்களாம்
நான் கண்ணீர்வரும்வரை சிரிப்பேன்
என் மக்களைப்பற்றி நினைக்கும்போது





மாயா ஏஞ்சலூ : 1928 ஆம் ஆண்டு மிசௌரியில் பிறந்த மாயா ஏஞ்சலூ நிறவெறியின் கொடுமைகளை அனுபவித்தவர்.
தனது சொந்த முயற்சியில் இசை, நடனம் ஆகியவற்றைக் கற்றுத் தேர்ந்தவர்.
ஆப்ரிக்க அமெரிக்க எழுத்தாளர்களுள் முக்கியமானவராகக் கருதப்படும் அவருடைய
எழுத்துக்கள் முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களாக வெளிவந்துள்ளன.
நடிகை, திரைப்பட இயக்குனர், நாவலாசிரியர், மனித உரிமைப் போராளி எனப்
பலபரிமாணங்களைக் கொண்டவர்.
அமெரிக்காவில் கறுப்பின மக்களின் உரிமைகளுக்காகப் பாடுபட்ட
மால்கம் எக்ஸ், மார்ட்டின் லூதர் கிங் ஆகியோருடன் இணைந்து செயல்பட்டவர்.
ழான் ழெனேவின் நாடகத்திலும், அலெக்ஸ் ஹெய்லீயின் தொலைக்காட்சித் தொடரிலும் நடித்திருக்கிறார்.
முப்பதுக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்ற மாயா ஏஞ்சலூ
கடந்த அமெரிக்க அதிபர் தேர்தலின்போது முதலில் ஹிலாரி கிளின்டனை ஆதரித்தார்.
பின்னர் ஒபாமாவை ஆதரித்துப் பிரச்சாரம் செய்தார்.
                                                                                          

                   


 4. அஃபூவா கூப்பர்




பகலிலிருந்து இரவைப் பிரிக்கும் எல்லைக்கோட்டில்
கீழ்வானில்
அதிகாலை எட்டி நடக்கத் தொடங்கும் நேரத்தில்
எரிநட்சத்திரங்கள்
வானத்தின் இப்புறமிருந்து அந்தப் புறமாகப்
பாய்ந்து வீழ்கின்றன
தாங்கள் பிடித்த மீன்களோடு
கரைசேரும் மீனவர்களின் கூச்சலைத்
தொடர்கின்றன
பேருந்துகளின்  இரைச்சல்
சேவல்களின் கூவல்

ஆயிரம் இதழ்கள் கொண்ட
என் தாமரைக் கிண்ணத்திலிருந்து
நான் கண்ட கனவின்
பொன் நிறத்தை ரோஜா நிறத்தை
நீ உறிஞ்சிக் குடிக்கும்போது
எனது சருமத்தை வற்புறுத்தும் உன் உதடுகளால்
நான் உறக்கத்திலிருந்து நழுவி
விழித்தெழுகிறேன்

இன்னொரு காலம் இன்னொரு இடம்
நீ ராஜாவாக அல்லது அவனது
தளபதியாக இருக்கிறாய்
காலையின் ஊதா கவிந்திருக்கிறது
நம் மேல்
நாம் நிகழ்த்துகிறோம் இந்தத்
தொன்மையான சடங்கை

ஆயிரம் இதழ்கள் கொண்ட என்
தாமரைக் கிண்ணத்தில் நீ மூழ்கும்போது
எனது சருமத்தை வற்புறுத்தும் உன் உதடுகளால்
துயிலிலிருந்து நழுவி எழுகிறேன் நான்

பொன் நிறம் ரோஜா நிறம்
அடர் நீலம் ஊதா நிறம்
நீலப்பச்சை ரத்தச் சிவப்பு
மூச்சும் காற்றுமாக
நெருப்பும் மின்னலுமாக
இடியும் புயலுமாக
தாளமும் ஒப்பாரியுமாக
பாயும் நட்சத்திரங்கள்
குமுறும் அலைகள்
வாழ்வாக மரணமாக
பல லட்சம் கருஞ்சிவப்புச் சந்திரன்கள்
வெடிக்கின்றன
ஆ..ஹ்

அரசனின் படையில் தளபதியாக இல்லாவிட்டால்
அரசியின் நடனக்குழுவில் தலைவனாகவாவது இரு







அஃபூவா கூப்பர்: ஜமைக்கா நாட்டைச் சேர்ந்த படைப்பாளியான இவர் எழுத்தாளர், கவிஞர், வரலாற்றறிஞர்.
 கனடாவில் கறுப்பின மக்கள் அடிமைப்படுத்தப்பட்ட வரலாற்றை ஆய்வுசெய்து
இவர் எழுதிய நூல் விற்பனையில் சாதனை படைத்தது மட்டுமின்றி ஃப்ரெஞ்ச்சிலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.
இவரது கவிதைகள் ஐந்து தொகுப்புகளாக வெளியிடப்பட்டிருக்கின்றன.
கறுப்பின மக்களின் இசை வடிவங்களில் தேர்ச்சிகொண்ட இவர் தனது கவிதைகளை
மேடையில் நிகழ்த்தவும் செய்கிறார்.
பிரிட்டிஷ் கொலம்பியாவில் இருக்கும் சிமோன் ஃப்ரேசர் பல்கலைக் கழகத்தில்
பெண்ணியல் ஆய்வுகளுக்கான துறைக்குத் தலைவராக இருக்கிறார்.

5. ஜோர்ஜ் ரெபலோ


வா, சகோதரனே சொல் உன் வாழ்க்கையை
வா, எதிரி உன் உடலில் விட்டுச்சென்ற
எதிர்ப்பின் தடயங்களை எனக்குக் காட்டு
வா, என்னிடம் கூறு ‘இதோ
என் கைகள் நசுக்கப்பட்டன
ஏனென்றால் அவற்றுக்குச் சொந்தமான
மண்ணை அவை காத்து நின்றன.’
இதோ என் உடல் சித்ரவதை செய்யப்பட்டது
ஏனென்றால் அது ஆக்கிரமிப்பாளர்களுக்கு
அடிபணிய மறுத்தது.
இதோ என் வாய் காயப்படுத்தப்பட்டது
ஏனெனில் அது என் மக்களின்
சுதந்திரத்தைப் பாடத் துணிந்தது.
வா சகோதரனே சொல் உன் வாழ்க்கையை
கலகத்தின் கனவுகளை எனக்குக் கூறு
உன் தந்தையரும் அவர் முன்னோரும்
மௌனமாகக் கண்ட
கனவைக்
காதலுக்காக உண்டாக்கப்பட்ட நிழல்கள்றற இரவுகளில் கண்ட கனவை
வா என்னிடம் கூறு
அந்தக் கனவுகள்
யுத்தமாக மாறியதை
நாயகர்கள் பிறந்ததை
நிலம் மீட்கப்பட்டதை
அச்சமின்றி
தமது மகன்களைப் போராட அனுப்பிவைத்த
தாய்மார்களை
வா என்னிடம் கூறு சகோதரனே
பிறகு நான் எளிய சொற்களைக் கட்டுவேன்
குழந்தைகளும் புரிந்துகொள்ளும் சொற்கள்
காற்றைப் போல
எந்தவொரு வீட்டினுள்ளும் நுழையக்கூடிய சொற்கள்
நமது மக்களின் ஆன்மாக்களின் மீது
கொதிக்கும் தழலென விழுகின்ற சொற்கள்

நமது மண்ணில்
தோட்டாக்கள் மலரத் தொடங்குகின்றன






ஜோர்ஜ் ரெபலோ(1940&) மொஸாம்பிக் நாட்டைச் சேர்ந்தவர்.
அதன் விடுதலைக்காகப் போராடிய கொரில்லாக் குழுவில் செய்திப் பிரிவின் செயலாளராக இருந்தவர்.
மொஸாம்பிக் புரட்சி என்ற இலக்கிய இதழின் ஆசிரியர்.
மொஸாம்பிக் புரட்சியின் கவிஞர் எனப் பாராட்டப்படுபவர்.

Wednesday, May 15, 2013

அடித்தட்டுமக்களின்விடிவுக்கு அரசியலை பயன்படுத்தியவர் சுவாமி சகஜானந்தா!



ஆன்மீகவாதியாக இருந்தாலும் அடித்தட்டு மக்களின் விடிவுக்கு அரசியலை பயன்படுத்தியவரும், ஆதிதிராவிட சமூகத்தினருக்கு கல்வியை புகட்டியவருமாவார் சுவாமி சகஜானந்தா. அச்சிறப்பு வாய்ந்த சுவாமி சகஜானந்தாவிற்கு சிதம்பரத்தில் அவர் வாழ்ந்த இடத்தில் மணி மண்டபம் அமைக்கப்படும் என தமிழக முதல்வர்
ஆன்மீகவாதியாக இருந்தாலும் அடித்தட்டு மக்களின் விடிவுக்கு அரசியலை பயன்படுத்தியவரும், ஆதிதிராவிட சமூகத்தினருக்கு கல்வியை புகட்டியவருமாவார் சுவாமி சகஜானந்தா. அச்சிறப்பு வாய்ந்த சுவாமி சகஜானந்தாவிற்கு சிதம்பரத்தில் அவர் வாழ்ந்த இடத்தில் மணி மண்டபம் அமைக்கப்படும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் ஆரணிக்கு அருகே உள்ள மேல் புதுப்பாக்கம் என்ற கிராமத்தில் அண்ணாமலை-அலமேலு தம்பதியினருக்கு 1890-ம் ஆண்டு ஜனவரி மாதம் 27-ம் தேதி பிறந்தவர் சுவாமி சகஜானந்தா. அவருக்கு பெற்றோர் வைத்த பெயர் முனுசாமி. தனது கிராமத்தில் இருந்த அமெரிக்கன் ஆற்காட் புராட்டஸ்டன்ட் மிஷன் பாடசாலையில் தொடக்கக்கல்வியை பயன்ற இவர் உயர்நிலைக்கல்வியை  திண்டிவனத்தில் உள்ள பள்ளியில் பயின்றார். அங்கு அவருக்கு சிகாமணி என்ற பெயர் சூட்டப்பட்டது. பள்ளியில் பயிலும் மாணவர்களை கிருஸ்துவ மதத்திற்கு மாற்ற பாதிரியார்கள் முயன்ற போது, அதற்கு எதி்ர்ப்பு தெரிவித்து பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு ஊர் திரும்பினார்.

பிழைப்பு தேடி அவரது பெற்றோர்கள் கர்நாடகத்தில் உள்ள கோலார் தங்கவயலுக்கு இடம் பெயர்ந்தனர். அவர்களோடு அங்கு சென்ற சகஜானந்தாவிற்கு ஆன்மீகத்தின் மீது நாட்டம் ஏற்பட்டது. தனது 17 வயதில் தான் சன்னியாசியாகப் போவதாக பெற்றோரிடம் தெரிவித்து விட்டு, வீட்டை வி்ட்டு வெளியேறினார். பின்னர் பல ஊர்களில் அலைந்து திரிந்து பல ஆன்மீகவாதிகளை சந்தித்து அவர்களிடம் மத சம்பந்தமான கல்வியை பெற்றார். யோகி நீலமேகசுவாமிகள், தட்சணாசுவாமிகள் ஆகிய ஆன்மீகவாதிகள் அடங்குவர். அதிலும் குறிப்பாக சென்னை வியாசர்பாடியில் இருந்த கரபாத்திர சுவாமிகளை சந்தித்ததுதான் அவரது வாழ்க்கையின் திருப்புமுனையாக அமைந்தது. அவர்தான் சகஜானந்தாவை சிதம்பரத்திற்கு சென்று அங்கே நந்தனின் வாரிசுகளாய் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சேவை செய்யும்படி அறிவுறுத்தினார்.
அ.முருகேசன்பிள்ளை 1910-ம் ஆண்டு சகஜானந்தாவை அழைத்துக் கொண்டு சென்று சிதம்பரத்தில் திருநாளைப் போவார் தீயில் மூழ்கிய ஓமக்களுத்தின் கரையில் ஸ்ரீஆறுமுகசுவாமியும், பின்னத்தூர் ஸ்ரீலட்சுமணன் அவர்களும் கட்டியுள்ள சிறிய சந்திரத்திற்கு அழைத்துச் சென்று அங்கிருந்து சேவை செய்யுமாறு வலியுறுத்தியதாக சுவாமி சகஜானந்தாவை விவரித்திருக்கிறார். சிதம்பரத்திற்கு வந்த சுவாமி சகஜானந்தா அங்கே ஒரு மடத்தை நிறுவ விரும்பி தொடங்கினார். கல்விச்சாலை ஒன்றையும்  ஏற்படுத்த முடிவு எடுத்து 1916-ம் ஆண்டு ஜூலை மாதம் 7-ம் தேதி நந்தனார் கல்விக்கழகத்தை நிறுவினார். நாட்டுக் கோட்டை செட்டியார்களின் நட்பு கிடைத்ததின் ஆதரவில் மலேசியா, சிங்கப்பூர், பர்மா, இலங்கை ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு, சைவ சமய பிரசாரத்தை மேற்கொண்டார். அந்த பயணம் நந்தனார் மடத்திற்கும், கல்விச்சாலைக்கும் நிதிஉதவி பெறுவதற்கு உதவியாகவும் அமைந்தது.

சுவாமி சகஜானந்தா தொடங்கிய நந்தனார் கல்விச்சாலை கூரைக்கொட்டகையில்  முதலில் 25 மாணவர்களை கொண்டு தொடங்கப்பட்டது. 1918-ம் ஆண்டு பள்ளிக்கூட்டம் கட்டுவதற்கு அபோதைய சென்னை மாகான உயர்நீதிமன்ற நீதிபதி ஜஸ்டிஸ் சதாசிவ ஐயரால் அடிக்கல் நாட்டப்பட்டது. அதன்பிறகு ராஜகோபாலாச்சாரியார் பள்ளிக்காக 32 ஏக்கர் நஞ்சை நிலத்தை அளித்தார். 1926 மற்றும் 1934 ஆகிய ஆண்டுகளில் காந்தியடிகள் நந்தனார் பள்ளிக்கு வந்து பார்வையிட்ட பின்னர் அப்பள்ளி பிரபலமானது. தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண்களுக்கு கல்வி புகட்டுவதில் தனிக்கவனம் செலுத்தப்பட்டது.

முதன் முதலில் சுவாமி சகஜானந்தாவிற்கு தமிழகஅரசு மணி மண்டபம் கட்ட வேண்டும் என குரல் கொடுத்த காட்டுமன்னார்கோயில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் துரை.ரவிக்குமார் தெரிவித்தது: புரட்சியாளர் அம்பேத்கர் இரட்டை வாக்குரிமை கேட்டு போராடிய காலத்தில் அவருக்கு உறுதுணையாக இருந்தவர் சுவாமி சகஜானந்தா. தாழ்த்தப்பட்ட மக்கள் சாதிய கொடுமையிலிருந்து விடுபட பெளத்தத்தை வழியாக காட்டினார். ஆன்மீகவாதியாக இருந்தாலும் அடித்தட்டு மக்களின் விடிவிற்கு அரசியலை பயன்படுத்தியவர் சுவாமி சகாஜனந்தா.

சுவாமி சகஜானந்தா 1926-ம் ஆண்டு சென்னை மாகான சட்டமேலவைக்கு நியமன உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். 1932ம் ஆண்டு வரை மேலவை உறுப்பினராக பதவி வகித்த அவர் 1936 முதல் 1947 வரை மீண்டும் மேலவை உறுப்பினராக நியமிக்கப்பட்டு சேவையாற்றினார். நாடு சுதந்திரம் அடைந்த பிறகு 1947-ல் சட்டப்பேரவை உறுப்பினரானார். 1959-ம் ஆண்டு மே 1-ம் தேதி அவர் இயற்கை எய்தும் வரை சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தார். சட்டமேலவையிலும், சட்டப்பேரவையிலும் தாழ்த்தப்பட்ட மக்களின் மேம்பாட்டிற்காக சகஜானந்தா பாடுபட்டார். சுவாமி சகஜானந்தாவால் உருவாக்கப்பட்ட நந்தனார் பள்ளிகள் இன்று தமிழகஅரசு ஆதிதிராவிட நலத்துறையின் கீழ் நிர்வகிக்கப்படுகிறது.
சுவாமி சகஜானந்தா ஒரு ஆன்மீகவாதியாக மட்டுமல்லாமல் தமிழில் சிறந்த புலமை பெற்றிருந்தார். சமஸ்கிருதத்திலும் அவருக்கு நல்ல பயிற்சி இருந்தது. ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த பயங்கரம் சீனுவாசாச்சாரியிடம் சமஸ்கிருதத்தை பயின்றார். வ.உ.சி எழுதிய நூல்களுக்கு சுவாமி சகஜானந்தா சிறப்புப்பாயிரம் அளித்துள்ளார். இது அவரது தமிழ்ப் புலமையை எடுத்துக்காட்டுகிறது என்கிறார் துரை.ரவிக்குமார்.

தற்போது தமிழக சட்டப்பேரவையில் சட்டப்பேரவை உறுப்பினர்  செ.கு. தமிழரசன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் கே.பாலகிருஷ்ணன், ஆர்.ராமமூர்த்தி ஆகியோர் விடுத்திருந்த கோரிக்கையை ஏற்று விதி எண் 110-ன் கீழ் சிதம்பரத்தில் சுவாமி சுகஜானந்தாவிற்கு அவர் வாழ்ந்த இடத்தில் மணி மண்டபம் அமைக்கப்படும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிவிப்பினால் தாழ்த்தப்பட்ட மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

சுவாமி சகஜானந்தாவுக்கு மணிமண்டபம் : முதல்வர் அறிவிப்பு




ஏழை மக்கள் உயர்வு பெற தன் வாழ் வை அர்ப்பணித்தவரும், மக்களின்
அறியாமையைப் போக்க கல்வி நிறுவனம் தொடங்கியவரும், காந்தி அடிகளை அழைத்துவந்து அறநெறி பரப்பியவரும், சட்டமன்ற மேலவை மற்றும் பேரவை உறுப்பினராகபணியாற்றியவரும் ஆன சுவாமி சகஜானந்தா அவர்களுக்கு, அவர் வாழ் ந்த இடமானசிதம்பரத்தில் மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர்முனைவர் செ.கு. தமிழரசன் அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தார். இதேகோரிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.க.பாலகிருஷ்ணன்  மற்றும் திரு.ஆர்.ராமமூர்த்தி ஆகியோரும் விடுத்திருந்தனர்.இவர்களுடைய கோரிக்கையினை ஏற்று, சுவாமி சகஜானந்தா தொண்டு செய் துவாழ் ந்த இடமான சிதம்பரத்தில் அரசின் சார்பில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்பதை மகிடிநச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதே போன்று, எனது ஆட்சிக் காலத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு,
2000-ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்ட சென்னையில் உள்ள டாக்டர் அம்பேத்கர் மணிமண்டபத்தினை சிறப்பான முறையில் புதுப்பித்து, புனரமைத்திட வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர் முனைவர் செ.கு. தமிழரசன் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார். இவரது கோரிக்கையினை ஏற்று, சென்னை, மந்தைவெளி, பசுமை வழிச் சாலையில் அமைந்துள்ள சட்ட மேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களது மணிமண்டபம் புதுப்பித்து புனரமைக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொண்டு அமைகிறேன்.

Thursday, May 9, 2013

கர்நாடக முதல்வராக ஒரு தலித் வருவாரா ?

 
 
Dr பரமேஸ்வரா
 
கர்நாடக முதல்வராக தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை காங்கிரஸ் தேர்ந்தெடுக்குமா என்பதுதான் இப்போதைய முதன்மையான கேள்வியாக இருக்கிறது. கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த பரமேஸ்வரா முதல்வர் வேட்பாளர் எனக் கருதப்பட்டிருந்த வேளையில் அவர் தோல்வியடைந்தது பலருக்கும் அதிர்ச்சியைத் தந்துள்ளது.

2010 ஆம் ஆண்டு மாநில காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டதிலிருந்து கடுமையாக உழைத்து இன்று 122 இடங்களில் காங்கிரஸ் வெற்றிபெறக் காரணமாக இருந்தவர்  பரமேஸ்வரா ஆவார். படித்தவர்களிடையே பிரபலமாகத் திகழ்ந்த அவர் கிராமப்புற மக்களிடமும் நன்மதிப்பைப் பெற்றிருந்தார் அவர் நடத்திய பாத யாத்திரைகளே கிராமப்புறங்களில் தொய்வடைந்துபோய்  கிடந்த காங்கிரசை எழுச்சிபெற வைத்தன . எனினும் இந்தத் தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதாதளத்தைச் சேர்ந்த வேட்பாளர் சுதாகர் லால் என்பவரிடம் 18155 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் தோல்வியடைந்துள்ளார்.
மாநில காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டதால் தொகுதிக்கு அடிக்கடி வராததே அவர் தோல்வி அடைய முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறது. அவர் ஒரு முதல்வர் வேட்பாளர் எனத் தெரிந்தும்கூட தலித்துகள் பெருமளவில் அவருக்கு வாக்களிக்கவில்லை . இது தலித் மக்களின் மனநிலைக்கு ஒரு உதாரணம் . தனித் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு வேட்பாளர் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் பிரத்யேகமானவை. நானும் ஒரு சட்டமன்ற உறுப்பினராக இருந்த  அனுபவத்திலிருந்து இதை என்னால் சொல்ல முடியும் .ஒப்பீட்டளவில் பார்த்தால்  தலித் மக்கள் தனித் தொகுதி உறுப்பினரை மதிப்புக் குறைவாகவே நடத்துகின்றனர். பிற சாதியினரிடம் அடங்கிக் கிடக்கும் அவர்கள் தம் சாதியைச் சேர்ந்த எம்.எல்.ஏ ; எம்.பி களை அலட்சியப்படுத்துவதன்மூலம் தமது ஈகோவை ஆறுதல்படுத்திக் கொள்கிறார்கள்  எனத் தோன்றுகிறது. அவர்களுக்கு பஞ்சாயத்து வார்டு உறுப்பினருக்கும் பாராளுமன்ற உறுப்பினருக்கும் இடையில் வித்தியாசம் தெரிவதில்லை. எந்தப் பிரச்னையை எவரிடம் சொல்லவேண்டும் என்பதும் புரிவதில்லை.ஒரு சட்டமன்ற / நாடாளுமன்ற உறுப்பினர் தமது சமுதாயத்துக்காக என்ன செய்கிறார்கள் என்று பார்ப்படதைவிடவும் எப்போதும் அவர் தமது ஊர்களைச் சுற்றியே இருக்கவேண்டும் என அவர்கள் விரும்புகின்றனர். அப்படி இருப்பதன்மூலம் தமது பகுதிகளுக்கான பிரச்சனைகள்  தீரும் என அவர்கள் கருதுவதாகவும் தெரியவில்லை. தமது சிறு சிறு பிரச்சனைகளுக்கும் அவர் இருந்து பஞ்சாயத்து செய்யவேண்டும் என்பதாகவே அவர்களது மனநிலை இருக்கிறது. தனித் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர் பிற சாதிகளைச் சேர்ந்தவர்களாலும் மதிக்கப்படுவதில்லை, தலித் மக்களாலும் மதிக்கப்படுவதில்லை என்பது மறுக்கமுடியாத உண்மையாகும். தமக்கான பிரதிநிதி எப்படி இருக்கவேண்டும் என்ற அரசியல் தெளிவற்றவர்களாக தலித்துகள் உள்ளனர். தனித் தொகுதிகளிலிருந்து சரியான தலித் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட முடியாததற்கு தலித் அல்லாதவர்கள் மட்டுமே காரணம் அல்ல. தலித்துகளும் அதற்கு பொறுப்பாவார்கள் . அரசியல் புரிதல்கொண்டவர்கள் தலித்துகளின் பிரதிநிதிகளாக வந்துவிடக்கூடாது என்று தலித் அல்லாதவர்கள் எண்ணுவதில் வியப்பில்லை . ஆனால் அதே எண்ணம் தலித் மக்களிடமும் இருப்பதுதான் வேதனை தருகிறது. இந்த யதார்த்தம்தான் திறமை மிக்கவராக இருந்தும் , முதல்வர் ஆவதற்கு வாய்ப்பிருந்தும் பரமேஸ்வரா தோல்வியடையக் காரணம்.

கர்நாடக மக்கள் தொகையில் 20 சதவீதம் பேர் தலித்துகள். மகராஷ்டிராவில் தலித் பேந்தர் இயக்கம் தோன்றியபோதே அதனால் தாக்கம் பெற்று தலித் அரசியல் இயக்கம் உருவான மாநிலம் அது. தலித் இலக்கியத்திலும் முன்னணி பங்கு வகித்த மாநிலம் கர்நாடகா. ஆனால் இன்னும் தலித் மக்கள் அரசியல் விழிப்புணர்வு அடையாத நிலையே அங்கு இருக்கிறது. அதனால்தான் ஒரு தலித் முதல்வர் வரக்கூடிய வாய்ப்பு இன்று கேள்விக்குறியாக மாறி இருக்கிறது.

தற்போது முதல்வர் பதவிக்கான போட்டியில் சித்தாராமையாவும் மல்லிகார்ஜுன கார்கேவும் இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. பிற்படுத்தப்பட்ட  வகுப்பைச் சேர்ந்த சித்தாராமையா ஆறு ஆண்டுகளுக்கு முன்புதான் காங்கிரசில் சேர்ந்தார். மதச் சார்பற்ற ஜனதா தளத்தில் இருந்து காங்கிரசைக் கடுமையாக எதிர்த்தவர் அவர் . காங்கிரசுக்கு வந்ததும் அவருக்கு முக்கியத்துவம் தரப்பட்டது. கடந்தமுறை அவர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார் .
மல்லிகார்ஜுன கார்கே


மல்லிகார்ஜுன கார்கே நீண்ட அனுபவம் கொண்ட காங்கிரஸ்காரர். ஒன்பது முறை சட்டப் பேரவை உறுப்பினராகவும் ஒருமுறை பாராளுமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர். போட்டியிட்ட பத்து முறையும் வெற்றிபெற்ற சாதனையாளர். சட்டம் பயின்றவர். குறிப்பாக தொழிலாளர் சட்டங்களில் ஆழ்ந்த புலமை கொண்டவர். தற்போது மத்திய அமைச்சரவையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருக்கிறார். இதுவரை எந்த குற்றச் சாட்டுகளுக்கும் ஆளாகாதவர் . மத்திய அமைச்சரவையில் அங்கம் வகித்தாலும் அவரே முதல்வர் பதவிக்குப் பொருத்தமானவர் என்பது பலரதும் கருத்தாக உள்ளது.

தலித் ஒருவரை கர்நாடகத்தில் முதல்வராக்குவதன்மூலம் காங்கிரஸ் கட்சி அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் தலித் வாக்குகளைத் திரட்ட முயற்சிக்கலாம்  என சில யூகங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால் அது எந்த அளவுக்கு உண்மையாகும் எனத் தெரியவில்லை. தலித் மக்கள் தமது பிரதிநிதிகள் யார் தமது தேவைகள் என்ன என்ற புரிதல் பெறாதவரை தலித் வாக்குகளைப் பெறுவதற்கு வெற்று வாக்குறுதிகளே போதும் என்றுதான் காங்கிரசும் பிற கட்சிகளும் நினைக்கும் . சோனியாவும்  ராகுலும் இதில் விதிவிலக்குகளாக இருப்பார்களா என்பது ஓரிரு நாட்களில் தெரிந்துவிடும்.

Friday, May 3, 2013

உலக ஊடக சுதந்திர நாள்: மே 3



உலகமெங்கும் ஊடக சுதந்திரத்தைப் பாதுகாக்க ஐ நா பேரவை மே 3 ஆம் நாளை ஊடக சுதந்திர நாள் என அறிவித்துள்ளது. ஜனநாயகத்தைக் காப்பாற்றும் போராட்டத்தில் கட்சி, ஆட்சி முதலான காப்பரண்கள் இல்லாமல் களத்தில் நிற்பவர்கள் ஊடகவியலாளர்கள். சர்வாதிகார ஆட்சியாளர்களின் முதல் இலக்காக இருக்கும் அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் தாக்குதலுக்கு ஆளாவதும் படுகொலை செய்யப்படுவதும் தொடர்ந்துகொண்டிருக்கிறது.

ஊடக சுதந்திரத்தைப் பொருத்தவரை இந்தியா மிகவும் மோசமான நிலையிலேயே உள்ளது. 179 நாடுகள் கொண்ட பட்டியலில் இந்தியா 140 ஆவது இடத்தில் இருக்கிறது. இணைய தணிக்கை; சத்திஸ்கர்,காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் ஊடகவியலாளர்கள் தாக்கப்படுதல் முதலானவற்றைச் சுட்டிக்காட்டியிருக்கும் 'எல்லைகளில்லா ஊடகவியலாளர்கள்' என்ற அமைப்பு மிகப்பெரிய ஜனநாயக நாடாக இருக்கும் இந்தியா ஊடக சுதந்திரம் என்ற விஷயத்தில் இப்படி பின்தங்கியிருப்பது சரியல்ல என்று கூறியிருக்கிறது.
இன்றைய தகவல் யுகத்தில் ஊடகங்களே ஜனநாயகத்தின் பாதுகாவலர்களாக உள்ளன. அவற்றின் சுதந்திரம் குடிமக்களின் சுதந்திரத்தோடு இரண்டறக் கலந்துள்ளது. தமது உயிரையும் பணயம் வைத்து உண்மைக்காக வாதாடும் ஊடகவியலாளர்களை வணங்குவோம்.