Thursday, December 6, 2012

"பயங்கரவாத தடுப்பு நடவடிக்கை"யாக யாழில் பலர் கைது


யாழ். பல்கலை மாணவர் தலைவர் தர்ஷாந்த் உள்ளிட்டவர்கள் ஏற்கனவே கைதாகியிருந்தனர்.
யாழ். பல்கலை மாணவர் தலைவர் தர்ஷாந்த் உள்ளிட்டவர்கள் ஏற்கனவே கைதாகியிருந்தனர்.பயங்கரவாத தடுப்பு நடவடிக்கை எனக் கூறி இலங்கையின் வடக்கே பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு பொலிசாரால் 25 பேர் வரை கைதுசெய்யப்பட்டுள்ளதாக உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கைதுசெய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை தொடர்பாக முரண்பட்ட தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.விடுதலைப் புலிகளுடன் சேர்ந்து "பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டதாக" குற்றம்சாட்டப்பட்டு யாழ்ப்பாணம் பகுதியில் 10 பேர் புதனன்று கைதுசெய்யப்பட்டதாக காவல்துறை சார்பாகப் பேசவல்லவர் கூறினார்.

ஆனால் 20 முதல் 25 பேர் வரை கைதுசெய்யப்பட்டுள்ளதாக பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவின் தலைவர் சந்திரா வாகிஸ்ட தெரிவித்துள்ளார்.கைதுசெய்யப்படுவதற்கான அத்தாட்சி ஆவணங்கள் கைதிகளின் உறவினர்களிடம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிசார் கூறுகின்றனர்.

ஆனால் கைது பற்றி எதுவும் அறிந்திருக்கவில்லை என்று கைதானவர்களின் உறவினர்கள் சிலர் கூறுகின்றனர்.பல்கலைக்கழக மாணவர்கள் பலரையும் பொலிசார் தேடி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சமீபத்தில் மாவீரர் தினத்தைக் அனுஷ்டிக்க யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் முற்பட்டதை அடுத்து வரிசையாக நடந்துவரும் ஆர்ப்பாட்டங்கள், கைதுநடவடிக்கைகள் போன்றவற்றின் விளைவாக அப்பகுதியில் பதற்றம் அதிகரித்து வருகிறது.

நன்றி : பி பி சி தமிழோசை 

No comments:

Post a Comment