Sunday, December 23, 2012

சுனாமி பேரழிவு - சேரன் கவிதைகள்

சுனாமி பேரழிவு தொடர்பாக கவிஞர் சேரன் எழுதிய இந்தக் கவிதைகள் நான் நடத்திவந்த தலித் என்ற இலக்கிய இதழின் 2007, பிப்ரவரி இதழில் வெளியானது. 
சுனாமி பேரழிவு நாளை நினைவுகூரும்விதமாக இங்கே அவற்றை வெளியிடுகிறேன். 
- ரவிக்குமார் 





1 comment:

  1. அன்பு ரவிக்குமார்,

    சேரன் என் இனிய நண்பன். அவரது கவிதைகளைப் படிக்கத் தந்தமைக்கு நன்றி.

    அவரது தந்தை தமிழின் மகாகவிகளில் ஒருவர். 20-ஆம் நூற்றாண்டில்
    தமிழுக்கு நவீனத்துவம் அளித்த கவிஞர்களில் முக்கியமானவர். எத்தனையோ
    பரிசோதனைகள் தமிழ் யாப்பிலும், கவிதையிலும் செய்தவர் மகாகவி
    ருத்ரமூர்த்தி (அளவெட்டி).

    தென்தமிழ்நாட்டில் ஊர்களின் தேரோட்டங்களில் இன்னமும் நிகழும்
    சாதிப் பிரச்சினை பத்திரிகைகளில் வருகிறது. அதனை முதலில்
    கவிதையில் சொன்னவர் மகாகவி (சேரனின் தந்தை) தான்.
    1969-லேயே தமிழர்/திராவிடர் சமூகங்களின் மிகப்பழைய சமுதாயச் சிக்கலைக்
    கவிதையாய் அம் மகாகவி வசனகவிதையாய்ப் பேசியிருக்கிறார்.
    http://nganesan.blogspot.com/2009/03/therottam.html

    ----------------------------------------------

    தேரும் திங்களும்
    மகாகவி உருத்ரமூர்த்தி (1969)

    "ஊரெல்லாம் கூடி ஒருதேர் இழுக்கிறதே;
    வாருங்கள் நாமும் பிடிப்போம் வடத்தை"
    என்று
    வந்தான் ஒருவன்.

    வயிற்றில் உலகத்தாய்
    நொந்து சுமந்திங்கு நூறாண்டு வாழ்வதற்காய்ப்
    பெற்ற மகனே அவனும்.
    பெருந் தோளும்
    கைகளும், கண்ணில் ஒளியும், கவலையிடை
    உய்ய விழையும் உளமும் உடையவன்தான்.

    வந்தான். அவன் ஒரு இளைஞன்;
    மனிதன் தான்.
    சிந்தனையாம் ஆற்றற் சிறகுதைத்து வானத்தே
    முந்த நாள் ஏறி முழுநிலவைத் தொட்டுவிட்டு
    மீண்டவனின் தம்பி
    மிகுந்த உழைப்பாளி!

    "ஈண்டு நாம் யாரும் இசைந்தொன்றி நின்றிடுதல்
    வேண்டும்" எனும் ஒர் இனிய விருப்போடு
    வந்தான் குனிந்து வணங்கி வடம் பிடிக்க.

    "நில்!" என்றான் ஓரான்
    "நிறுத்து!" என்றான் மற்றோரான்.
    "புல்" என்றான் ஓராள்
    "புலை" என்றான் இன்னோராள்
    "சொல்" என்றான் ஓராள்
    "கொளுத்து" என்றான் வேறோராள்.

    கல்லொன்று வீழ்ந்து
    கழுத்தொன்று வெட்டுண்டு
    பல்லோடு உதடுபறந்து சிதறுண்டு
    சில்லென்று செந்நீர் தெறிந்து
    நிலம் சிவந்து
    மல் லொன்று நேர்ந்து
    மனிசர் கொலையுண்டார்.

    ஊரெல்லாம் கூடி இழுக்க உகந்த தேர்
    வேர் கொண்டதுபோல் வெடுக்கென்று நின்றுவிடப்
    பாரெல்லாம் அன்று படைத்தளித்த அன்னையோ
    உட்கார்ந் திருந்துவிட்டாள் ஊமையாத் தான்பெற்ற
    மக்களுடைய மதத்தினைக் கண்டபடி.

    முந்த நாள் வான முழுநிலவைத் தொட்டுவிட்டு
    வந்தவனின் சுற்றம்
    அதோ மண்ணிற் புரள்கிறது!

    ----------------------------------------

    கனடாக் கவிஞர் சேரன் 20 ஆண்டு முன்னர் என்னிடம்’அளித்த
    மகாகவி (ருத்ரமூர்த்தி) புஸ்தகங்களில் இருந்து.

    இலங்கைத் தமிழர்கள் நூலகம் போன்ற தளங்களில்
    மகாகவி போன்ற ஈழக்கவிதைகள் எல்லாமும் தட்டெழுதி
    வெள்ளுரையாய் (ப்லைய்ன் - டெக்ஸ்ட்) வைக்க வேண்டும்.
    நேற்று தான் பேரா. ந. தெய்வசுந்தரம் ஐயாவுக்கு
    தான் அனுப்பும் எம்எஸ் வொர்ட் கட்டுரைகள் செழியுரையாய்
    (ரிச்-டெக்ஸ்ட்) அனுப்புவதுடன், அவரே ஒரு வலைப்பதிவில்
    அவரது முக்கியமான கட்டுரைகளை வெள்ளுரையாய்
    இட்டுவந்தால் தமிழ் மாணவர்களுக்கு என்றும் பயன்தரும்
    என்று சொன்னேன். பேரா. ந. தெ. அவர்களும் ஒப்புக்கொண்டார்.
    சிந்தனையாளர்கள் ரவிக்குமார், முனைவர் தெய்வசுந்தரம், ...
    போன்ற இன்னும் பலர் தமிழ்நாட்டில் இருந்து வலைப்பதிவில்
    எழுத வேண்டும். அப்போது தான் தமிழ் வளரும்.

    நா. கணேசன்

    ReplyDelete