Thursday, November 4, 2010

கிரந்த யூனிகோடு - தமிழக முதல்வர் கூட்டிய அவசரக் கூட்டம்

முனைவர் . அனந்தகிருஷ்ணன்


கிரந்த யூனிகோடு பிரச்சனை தொடர்பாக நேற்று நடைபெற்ற கூட்டத்தைத் தொடர்ந்து இன்று மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் அவசரக் கூட்டம் ஒன்றை புதிய சட்டமன்றத்தின் ஆறாவது தளத்தில் இருக்கும் தனது அறையில் கூட்டினார்கள். முதல்வர் தலைமையில் நடைபெற்ற் அக்கூட்டத்தில் , மாண்புமிகு நிதி அமைச்சர் திரு.க.அன்பழகன்,மாண்புமிகு. உயர்கல்வித்துறை அமைச்சர் திரு.க.பொன்முடி, திராவிடர் கழகத் தலைவர் திரு கி.வீரமணி, கவிஞர் வைரமுத்து, முன்னாள் துணைவேந்தர் திரு. அனந்தகிருஷ்ணன், திரு.வா.செ.குழந்தைசாமி, தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் திரு. மா.ராசேந்திரன், கவிஞர் கனிமொழி மற்றும் நான் கலந்துகொண்டோம்.
இப்பிரச்சனை குறித்துப் பல்வேறு தரப்பிலான செய்திகளும் விவாதிக்கப்பட்டன.
இப்பிரச்சனை மிகவும் நுட்பமானது என்பதாலும், மேலும் இதுகுறித்து அறிஞர்களின் கருத்துகளைப் பெறவேண்டியிருப்பதாலும் எதிர்வரும் ஆறாம் தேதி நடைபெற இருக்கும் யூனிகோடு தொடர்பான கூட்டத்தை ஒத்திவைக்குமாறு கோருவது எனத் தீர்மானிக்கப்பட்டது.
இக்கூட்டம் நடைபெறுவதற்குமுன் நானும், தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் அவர்களும் திரு அனந்தகிருஷ்ணன் அவர்களை அவரது அலுவலகத்தில் சந்தித்து இப்பிரச்சனை பற்றி கலந்துபேசினோம்.
இந்தப் பிரச்சனையை உரிய வகையில் முதல்வரிடம் எடுத்துரைத்து இன்றைய கூட்டத்தை நடத்துவதற்கு கவிஞர் கனிமொழி அவர்கள் மிகுந்த அக்கறை எடுத்துக்கொண்டார்கள்.
தமிழக அரசே இப்படி கோரிக்கை விடுத்திருப்பதால் தமிழ் எழுத்துகளை கிரந்த யூனிகோடு அட்டவணையில் சேர்க்கும் முடிவு சற்று தள்ளிப் போகக்கூடும்.  தமது வாதங்களுக்கான தரவுகளைத்திரட்டி முன்வைப்பதற்கு இந்தக் கால அவகாசத்தைத் தமிழறிஞர்கள் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.

No comments:

Post a Comment